Thursday, 15 September 2011

பாக்கெட் நிறைய ப���்புகள் வாங்கிய ��ரு பதிவன்....!!!





பஹ்ரைன் வரும்போது மும்பை ஏர்போர்டில் நான் வாங்கிய பல்புகளை சொல்லட்டுமா ஹி ஹி...

11:55 am ஃபிளைட்டுக்கு ஒன்பது மணிக்கு என்னை பிக்கப் பண்ண [[நடந்தே போகலாம் பக்கம்தான் ஆனால் கனமழை]] காரில் வாரேன்னு சொன்ன நண்பனை காணாமல் போனை போட்டால், சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான் போனை மறதியில். எப்பிடியோ அங்கே இங்கே போனைப்பிடித்து அவன் வந்து சேர்ந்தான்.[[முதல் பல்பு]]

அடிச்சி பிடிச்சி காரில் ஏறி ஏர்போர்ட் வந்தால் எங்கள் காரை டிப்பாச்சரில் நிற்க விடாமல் போலீஸ் துரத்த, என்னடான்னு பேய் முழி முழிச்சிட்டு காருக்கு பின்னால் திரும்பி பார்த்தால் பாம் ஸ்குவாட் கார் வந்து நிக்குது, பயந்து கொஞ்சம் தூரம் தள்ளி வந்து காரை நிறுத்துனோம். என்னான்னு விசாரிச்சால், பாம் புரளியை எவனோ கிளப்பி விட்டுருக்கான். [[ம்ஹும் ரெண்டாவது பல்பு]]

கொஞ்சம் நேரம் கழிச்சி மறுபடியும் நான் போயி டிப்பாச்சர் கேட்ல போயி கேட்டேன் எனக்கு ஃபிளைட் லேட்டாகுது போகலாமான்னு, சரி சார் போகலாம்னு சொன்னார் மிலிட்டரி ஆபீசர் [[நம்ம ஆபீசர் அல்ல]] கொய்யால நான் போற நேரம்தான் பாம் வைக்கணுமா ராஸ்கல்...

சரி வழி அனுப்ப வந்த குடும்பத்தை பை சொல்லிட்டு லக்கேஜை எடுத்துட்டு வருவோம்னு கார் பக்கம் வந்தேன், நண்பன் செல்லப்பாகிட்டே டிக்கியில் இருக்கும் லக்கேஜை வெளியே எடுக்க சொன்னேன், டிக்கி ஓப்பன் ஆகலை, மறுபடியும் ஒப்பன் ஆகலை, அப்புறமா சாவியை உள்ளே நுழைத்து திறந்தாலும் திறக்கவே இல்லை. யாருக்கெல்லாமோ போன் பண்ணி கேட்டும் ஒருத்தனுக்கும் தெரியலை. அது ஜெர்மன் காராம்.[[மூணாவது பல்பு]]

மிலிட்டரிக்காரவணுவ துப்பாக்கியை பிடிச்சிட்டு  நிக்கானுக எங்களையையே முறச்சி பார்த்துகிட்டு, டிக்கி திறக்கவே இல்லை, என்னவெல்லாமோ செய்துபார்த்தும் திறக்கவில்லை. எனக்கு ஃபிளைட் நேரம் நெருங்கிட்டே இருக்கு, போலீஸ் வேற பாம் பாம்னு போகசொல்லுறான். செல்லப்பா டிக்கியை அமுக்கி குலிக்கிட்டே இருக்கான் போலீஸ் நெர்வெஸ் ஆகிட்டாணுக [[ஹி ஹி]]

ஆனால் காரை மட்டும் போலீஸ் எவளவோ எடுக்க சொல்லியும் நாங்க எடுக்கவில்லை, ஹி ஹி நாங்க ஏர்போர்ட்ல பாக்காத பாமா ஹி ஹி...அப்புறமா நண்பன்கிட்டே கேட்டேன் வா சீக்கிரமா அருகில் உள்ள ஒர்க் ஷாப் போயி திறக்கலாம்னு, [[அது ஆட்டோமேடிக் லாக்]] மறுபடியும் கார் ஏரியா திரும்பியது.

போகும் வழியிலேயே கேரேஜ் நண்பனுக்கு போனைப் போட்டு ரெடியா இருக்கசொல்லுன்னு  கிருஷ்ணாவுக்கு போனைப் போட்டான். அங்கேதான் பல்பு கிடைச்சது, அட நாதாரி டிக்கி லாக் ஆகிறிச்சின்னா பேக் சீட்டை முன்னாள் இழுத்தா, டிக்கிகுள்ளே இருக்கும் லக்கேஜை எடுக்கலாம் இது கூட தெரியாம எதுக்குடா வண்டி ஓட்டுறீங்கன்னு செம பரேடு ஹி ஹி...[[நான்காவது செமையான பல்பு]]

அடுத்து ஏர்போர்ட் ஓடினோம் அப்பாடா செல்லப்பா சிரிச்ச சிரிப்பு இருக்கே [[டியூப் லைட் ராஸ்கல்]] என்னால எம்புட்டு திட்டமுடியுமோ அம்புட்டு திட்டு அவன் மட்டும் கேக்கும்படியா திட்டுனேன், என் வீட்டம்மாவுக்கு தெரிஞ்சின்னா அங்கேயே விழும் அடி வாயிலேயே...அப்பாடா எல்லா செல்லங்களிடமும் விடை பெற்று கிளம்பினேன் ஏர்போர்ட் உள்ளே....

பல்பு இம்புட்டுதான்னு நம்பி உள்ளே போனேன். அங்கேயும் பெரிய பெரிய பல்பு வாங்கி பாக்கெட்டை நிரச்சதை  அடுத்தடுத்து சொல்றேன்...

டிஸ்கி : ஆமா தெரியாமதான் கேக்குறேன் நான் போற இடமெல்லாம் ஒரே வன்முறையா நடக்குதே ஹி ஹி அதான் ஏன்னு புரியலை...!!! யாரோ இதுக்கு பின்னால இருந்து சதி பண்ணுராயின்களோ டவுட்டா  இருக்கு அவ்வ்வ்வவ்வ்வ்....

முடியல : சரக்கடிச்சா கவிதையா வந்து கொட்டுமாம், அப்பிடின்னு எவன் சொன்னான்..?? என் நண்பன் ஒருவன் இதைகேட்டுட்டு போயி சரக்கடிச்சிட்டு கவிதை எழுதி கொண்டு வந்து என்னிடம் காட்டினான், ஐயோ ஒரே கெட்டவார்த்தையா எழுதி வச்சிருக்கான் வாய்கூச, டேய் இது என்னாடான்னு கேட்டா, சரக்கடிச்சா இப்பிடிதாம் மக்கா வருதுன்னு சொல்லிட்டு போறான் அவ்வ்வ்வவ்.....!!!



http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger