பொதுக்கூட்ட மேடையிலேயே ஒரு எம்.எல்.ஏ. பேசிக்கொண்டிருந்த போதே ஒரு பிரிவினர் மைக்கை பிடுங்கி வெளியேறி பிரச்சனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மார்த்தாண்டத்தில் ராஜீவ் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் குளச்சல் பிரின்ஸ், கிள்ளியூர் ஜாண்ஜேக்கப், விளவங்கோடு விஜயதரணி மூன்று எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். அதில் பேசிய விஜயதரணி நான் வெற்றி பெற்ற பிறகுதான் விளவங்கோடு தொகுதி பற்றி வெளி மக்களுக்கு தெரிகிறது என்று பேசினார்.
இதற்கு மேடையில் இருந்து நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து மைக்கை பிடுங்கினர். பின்னர் மேடையை விட்டு வெளியேறினர்.
இதனால் விஜயதரணியும் பேச்சை நிறுத்தி விட்டு காரில் புறப்பட்டு சென்றார். பின்னர் வெளியேறியவர்கள் மீண்டும் திரும்பி வந்து பொதுக்கூட்டத்தை நடத்தினர்.
பின்னர் பேசிய எம்.எல்.ஏ.க்கள் ஜாண் ஜேக்கப், பிரின்ஸ் ஆகியோர் நேசமணி, பொன்னப்பநாடார், சுந்தரதாஸ் போன்றவர்கள் வெற்றி பெற்ற தொகுதியை பற்றி விஜயதரணி இப்படி பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினர். இதனால் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மொத்தம் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் மூன்று வெற்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கிடைத்தது. இதில் குளச்சல் பிரின்ஸ், கிள்ளியூர் ஜாண்ஜேக்கப் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், விளவங்கோடு விஜயதரணி தனியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
குமரி மாவட்ட கட்சி செயல்பாட்டில் தொடர்பே இல்லாமல் இருந்த விஜயதரணி, மேலிட கனிவுடன் சீட் வாங்கி வந்தார். இவரது வெற்றி வாய்ப்பை தடுக்க காங்கிரசிலேயே ஒரு கோஷ்டி கடுமையாக முயற்சித்தும், இந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் வீசிய "காங்கிரஸ் அலை' இவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. எனினும் கோஷ்டி கானத்தால் இவரை ஓரம் கட்டும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலிட தயவு உள்ளதால் அதை விஜயதரணி சாதுரியமாக சமாளித்து வருகிறார்.
http://tamil-sex-video.blogspot.com
http://tamil-sex-video.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?