சர்வதேச திரைப்படவிழா அடுத்த மாதம் டொரண்டோவில் நடக்கிறது.சர்வதேச அளவில் முக்கியமான திரைப்படங்கள்இவ்விழாவில் பங்கேற்க இருக்கின்றன.இத்திரைப்பட விழாவில் பங்கேற்க அழகர்சாமியின்குதிரை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.தென்னிந்தியாவில் இருந்து தேர்வுசெய்யப்பட்டுள்ள ஒரே திரைப்படம் இது.
பாஸ்கர்சக்தியின் கதை திரைப்படமாக்கப்பட்டிருந்த்து.சுசீந்திரன் இயக்கத்தில்அப்புகுட்டியும் சரண்யா மோகனும் வாழ்ந்து காட்டியிருந்தார்கள்.சமீபத்தில் இளையராஜாஇசை அமைத்த படமும் கூட! இப்படம் வெண்ணிலா கபடிக்குழு அளவுக்கு இல்லை என்று கருத்துசொல்லப்பட்ட்தும் உண்டு.
உலகத்தின்முக்கியமான சினிமா கலைஞர்கள் அழகர்சாமியின் குதிரையை பார்க்கப் போகிறார்கள்.அப்புக்குட்டிநிச்சயம் அவர்களை கவர்ந்து விடுவார் என்பதே நிஜம்.ஒரு நிஜ குதிரைக்காரனை நேரில்பார்க்கப் போகிறார்கள்.பெரிய நடிகர்கள்,நாலு பைட்,ஒரு கவர்ச்சி டான்ஸ் என்ற தமிழ்சினிமாவின் விதியை மீறிய படம் இது.
பெருவெற்றிபெற்ற படங்கள் இருக்கிறது.அதிகம் சிலாகிக்கப்பட்ட சினிமாக்கள் உண்டு.ஆனால் பத்தோடுபதினொன்றாக இல்லாமல் தனித்துவம் பெற்ற சினிமா இது.அப்புகுட்டியை மட்டும் வைத்துதிரைப்படம் செய்ய அதிக தைரியம் வேண்டும்.எப்போதும் சினிமா என்பதுசூதாட்டம்தான்.வெற்றி,தோல்வியை கணிப்பது சாத்தியமே இல்லை.
பட்த்தில்உள்ள மூட நம்பிக்கை,மக்கள் இதையெல்லாம் பார்த்தால் உலகம் என்ன நினைக்கும்? ஒன்றும்நினைக்காது.இந்தியாவைப்பற்றி உலகத்துக்கு தெரியும்.தவிர மூட நம்பிக்கைகள் உலகம்முழுக்க இருக்கும் விஷயம்தான்.ஒவ்வொரு இட்த்திலும் வேறுபடும்.வித்தியாசமானமுயற்சிகள்தான் முக்கியம்.
பரபரப்போ,விறுவிறுப்போ உலக சினிமா கலைஞர்களுக்கு காட்டவேண்டியிருப்பதில்லை.அழகர்சாமியின் குதிரை போன்ற முயற்சிகள் சர்வதேச அளவில் கொண்டுசெல்லப்படவேண்டிய ஒன்றுதான்.குறைகள் இருப்பது பொதுவானது.அது முக்கியமும்அல்ல.சர்வதேச அளவில் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் கவனிக்கப்படும்.
தமிழுக்குகிடைத்திருக்கும் கௌவரம் இது.உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்தகலைஞர்களும் நம்முடைய முயற்சியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு.அப்படி ஒரு அரங்கில்நம்ம ஊர் குதிரை பங்கேற்பது நமக்கு பெருமையான ஒன்று.அழகர்சாமி குதிரை குழுவைவாழ்த்தி அனுப்பி வைப்போம்.
http://blackinspire.blogspot.com
http://blackinspire.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?