மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிரை காப்பாற்றுங்கள் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உலகத் தமிழ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் செல்வன் பச்சமுத்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது கருணை மனுக்கள் இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். காலவெள்ளத்தின் பின்னோக்கிச் சென்று பார்ப்பின், உலகின் பல்வேறு நாடுகளின் சட்டங்கள் பெருந்தன்மையுடன் தங்களது தீர்ப்புகளை திருத்தி எழுதியிருக்கின்றன.
ஆனால் சட்டமே நினைத்தாலும் திருத்தி எழுதி இயலாத தீர்ப்பு மரண தண்டனையே. இதை மனதில் கொண்டே உலகிலுள்ள 130க்கும் மேற்பட்ட நாடுகள் சட்டத்தின் மூலமாகவோ, நடைமுறையின் மூலமாகவோ மரண தண்டனையை ஒழித்து விட்டன.
மரண தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்றார் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். மேலும் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. ராஜீவ் கொலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை அறிவிப்பு உலகத் தமிழர்களையும், உலகில் மனிதாபிமானம் பேணுவோரையும் பேரதிர்ச்சியும், பெருங்கவலையும் கொள்ளச் செய்துள்ளது.
தண்டனைக்குள்ளானவர்களின், குற்றத்தன்மையினையும் கடந்த 21 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் வாடும் அவர்களின் நிலையினை கருத்தில் கொண்டும் அவர்கள் மூவருக்கும் தாங்கள் தண்டனை குறைப்பு செய்ய ஆவணச் செய்ய வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
உலக நாடுகள் முன் தமிழர்களை தலை நிமிரச் செய்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்த தாங்கள் தாயுள்ளத்தோடு இவ்வேண்டுகோளையும் செயல்படுத்தினால் மனித நேயம் போற்றும் மாபெரும் தலைவராக மக்கள் மனதில் நீங்கா இடம் கொள்வீர்கள் என்பது உறுதி. இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
http://devadiyal.blogspot.com
http://devadiyal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?