Saturday, 20 August 2011

கொலைவெறி பதிவர்��ள்.....!!!



கையும் ஓடலை காலும் ஓடலை, ஏன் நெட் கனெக்சன் என்னை படுத்தி எடுக்குதுன்னு புரியலை, கமெண்ட் போடலைன்னு, சிபி கொலை மிரட்டல் அனுப்பி இருக்கான், அம்மா"கிட்டே புகார் குடுத்து குண்டாஸ்ல போடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்...

அடுத்து விக்கி தாதா ஏகே 47 கொண்டு வந்து வச்சிகிட்டு குறி பார்த்துட்டு இருக்கான்...!!!

ஆபீசர் சாப்பாடு போட்டே என்னை பெல்ட்டால அடிக்க பெல்ட்டை உருவி வச்சிட்டு இருக்காராம்...!!!

பன்னிகுட்டி எனக்கு சூனியம் வச்சிட்டதா பேசிக்குராயிங்க.....

தமிழ்வாசி'கிட்டே இருந்து இன்னக்கி தப்பிச்சிட்டேன், காரணம் கொஞ்சம் நெட் ஒப்பன் ஆனதும் கமெண்ட் போட்டு தப்பிச்சிட்டேன்...

கருண் வேற எனக்கு ஸ்பெஷல் டியூஷன் எடுக்கணும்னு மிரட்டுராராம், உளவுத்துறை தகவல்......

கவிதைவீதி கவிதையால் என்னை அறம் பாடி அழிக்க போறாராம்.....

சித்ரா மேடம் சிரிச்சி சிரிச்சே என்ன கொலை செய்யப்போறாராம்...

நிரூபன் வேற, பதிவர்களை போட்டு தள்ளுவது எப்படி, அவர்களை கைமா பண்ணி தாளிப்பது எப்பிடின்னு என்னை வலை வீசி தேடுகிறாராம்...

வானதி, எங்க அங்கிளை காணோம்னு பஹ்ரைன் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்துட்டாயிங்களாம்.....

இம்சை அரசன் மட்டும் ரொம்ப சந்தோசமா இருக்கானாம், ம்ஹும் தொல்லை ஒழிஞ்சதுப்பான்னு [[எலேய் எப்பிடியாவது புகுந்து வந்துருவேம்லெய் ஹி ஹி]]

நாசமா போன சிரிப்பு போலீஸ் ரமேஷ், மூத்துரசந்துக்குள்ளே போயி ரகசியமா சிரிப்பதாக அடுத்த தகவல் வந்துருக்கு....

கந்தசாமி, படங்களை உல்டா உல்டாவா போட்டு தாக்க பிளான் பண்ணிட்டு இருக்காராம்.....

மெட்ராஸ் பவன் "சிவகுமார்" என் பேட்டியை கேட்டு வாங்கிட்டு, அதை காட்டிட்டு என்னை மிரட்டுறார்....

சிவா, உனக்குன்னு தனி பதிவு போட்டு நசுக்கிருவேன்னு சொல்றார்.......

சென்னை பித்தன் தல வேற மரியாதையா வந்து சேர் ராசா'ன்னு அன்பால் [[இல்லை]] மிரட்டுறார்...

இன்னும் நிறைய பேர், குண்டாந்தடி, உருட்டு கட்டை, வேல் கம்பு, அருவா, அழுகுன முட்டை, கூமுட்டை, அழுகுன தக்காளி இன்னும் பிற அயிட்டங்களோடு ஊர் ஊரா என்னை கொலை வெறியோட தேடிட்டு இருக்காயிங்களாம்.....

அடிக்குமுன் நான் சொல்றதையும் கேட்டுக்கோங்க ஏன்னா, நேர்மை, கருமை, எருமைன்னு ஒன்னு இருக்கா இல்லையா....??? [[ஹி ஹி]] நெட் கனெக்சன் சரியில்லை, அஞ்சி மினிட் வருது அப்புறம் ஒரு மணிநேரம் கட்டாகிருது, கேட்டா மழை நேரம் அப்பிடிதான் இருக்கும்னு சொல்றாயிங்க.....!!!

அடுத்து பஹ்ரைன் கிளம்பும் வேலை ஆரம்பிச்சிருக்கு, அதனால பிரஷர் செக் பண்ண போனேன் டாக்டர் சொல்றார், பிரஷர் 151 இருக்காம், சரி மக்கா டாக்டர் வர்றேன்னு வந்துட்டேன்....

முப்பத்து ஏழு வயசுலேயே எல்லாம் செக் பண்ணனும்னு எல்லார் வேண்டுகோளையும் ஏற்று, சுகர் இருக்கான்னு செக் பண்ண, பிளட் மற்றும் இன்னபிற'ங்களும் கொடுத்துட்டு வந்துருக்கேன் ஹி ஹி......!!!

டிஸ்கி : கொஞ்சம் பொறுத்துக்குங்க, என் அதிரடி வேகம் இன்னும் கூடி உங்களை உற்சாகப்படுத்தும்.....!!!

ஸ்பெஷல் டிஸ்கி : அண்ணா ஹசாரே'வுக்காக தமிழ்நாட்டில் இருந்து, எந்த தலைவனோ, தலைவியோ, கூத்தாடி நடிகனோ குரல் கொடுக்கவில்லை....!!!!??? ஆனால் பதிவர்கள்[[தமிழ்]] செமையா சப்போர்ட் பண்ணி ஆதரிப்பதை பார்க்கும் போது மனம் நம்பிக்கை கொள்கிறது.........வந்தேமாதரம்........


http://sex-dress.blogspot.com




  • http://sex-dress.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger