Saturday, 20 August 2011

‘அந்த’ நேரத்தில�� என்ன யோசனை?



பெண்கள் மனதைக் கண்டறிவது என்பது ரொம்பக் கஷ்டமான விஷயம்தான். என்னதான் 'நூல்' விட்டுப் பார்த்தாலும், இதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எந்தப் பெண்ணையுமே சரியாக கணித்து விட முடியாது.

கடலின் ஆழத்தை அறிந்து விடலாம், ஆனால் பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாது என்று ஒரு பழைய பழமொழி ரொம்ப காலமாக உலா வருகிறது. அது கிட்டத்தட்ட உண்மை என்று கூடச் சொல்லலாம்.

ஆனால் செக்ஸில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண் தனது உச்ச நிலையின்போது (ஆர்கஸம்) என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்பதை அறியலாம் என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆர்கஸத்தின்போது பெண்களின் மூளை எதை யோசித்துக் கொண்டிருக்கும் என்பதை ஸ்கேனிங் மூலம் தெரிந்து கொள்ள முடியுமாம்.

இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ் உறவின்போது, குறிப்பாக செக்ஸ் உணர்வுகள் உச்சத்தை அடையும்போது பெண்களின் நரம்பு மண்டலம் வழக்கத்தை விட அதி வேகத்தில் துடிக்கும். செக்ஸ் அல்லாத சமயத்தில் இதுபோல நடந்தால் பெரும் வலியை உணர நேரிடும். ஆனால் செக்ஸின்போது இது தூண்டப்படுவதால் வலிக்குப் பதில் மகிழ்ச்சி உணர்வுதான் கூடும். ஆர்கஸத்தின்போது எந்தப் பெண்ணுமே இந்த நரம்பு மண்டலத் துடிப்பை உணர்வதில்லை.

ஆர்கஸத்தின்போது பெண்களின் மூளையின் 30 பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக உணர்ச்சி, தொடுதல், மகிழ்ச்சி, திருப்தி, நினைவு ஆகிய செயல்களை கட்டுப்படுத்தும் பகுதிகள் இதில் முக்கியமானவை.

எங்களது ஆய்வுக்காக நாங்கள் எட்டு பெண்களைத் தேர்வு செய்தோம். அவர்களை மூளைக் கட்டிகளை கண்டறியப் பயன்படுத்தப்படும் எம்ஆர்ஐ ஸ்கேனரில் படுக்க வைத்து அவர்கள் மீது போர்வையைக் கொண்டு மூடினோம். பின்னர் அந்தப் பெண்களிடம் ஸ்டிமுலேட்டரைக் கொடுத்து செக்ஸ் உணர்வுக்கு வர வைத்தோம்.

சில பெண்களுக்கு ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே ஆர்கஸம் ஏற்பட்டது. சிலருக்கு 20 நிமிடம் வரை ஆனது.

அந்த சமயத்தில், அவர்களின் மூளை செயல்பாடுகளை ஸ்கேனர் மூலம் ஆய்வு செய்தோம். ஆர்கஸத்தின்போது ஒவ்வொரு இரண்டு விநாடிக்கு ஒருமுறை எந்த பகுதி ஆக்டிவாக இருக்கிறது என்பதை ஆராய்ந்தோம். இதை படமாகவும் எடுத்தோம்.

ஆர்கஸத்திற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு உணவு சாப்பிடுவது, மது அருந்துவது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி ஆக்டிவாக இருந்தது தெரியவந்தது.

பெண்கள் உச்ச நிலையை எட்டிய சில விநாடிகளிலேயே தொடுதல் உணர்வைக் கட்டுப்படுத்தும் பகுதிகள், உடலுக்கு சிக்னல்களை கடத்தும் தலாமஸ் போன்றவை பாதிக்கப்பட்டதை அறிய முடிந்தது.

அதேபோல ஆர்கஸம் தொடங்கியவுடனேயே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகள் தூண்டுவிக்கப்பட்டதை அறிய முடிந்தது.

கடைசியாகத்தான் உடல் சூடு, பசி, தாகம், சோர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ள ஹைபோதலாமஸ் தூண்டப்பட்டது.

ஆர்கஸத்தின்போது நினைவை கட்டுப்படுத்தக் கூடிய காடேட் நியூக்ளியஸ், நியூக்ளியஸ் அக்கும்பென்ஸ் (இது மகிழ்ச்சியை தூண்டும் பகுதி) ஆகியவையும் தூண்டப்பட்டதை அறிய முடிந்தது.

இந்த ஆய்வின்போது ஆர்கஸத்தை சந்தித்த பெண்கள் பலமுறை கைகளை மேல உயர்த்தினர். இதன் மூலம் அவர்கள் அதிக அளவிலான ஆர்கஸத்தை விரும்புவதை உணர முடிந்தது. மேலும் ஆர்கஸம் நீண்ட நேரம் நீடிப்பதையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. மேலும் தொடர்ச்சியான ஆர்கஸத்தை பெண்கள் வரவேற்பதையும் உணர முடிந்தது என்றனர்.

வழக்கமாக பெண்களுக்கு சராசரியாக 10 முதல் 15 விநாடிகள் வரை உச்ச நிலை நீடிக்கும். அதேசமயம், ஆண்களுக்கு இது 6 விநாடிகளிலேயே முடிந்து போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்கஸத்தின்போது என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமில்லை, பழைய காதலரையோ அல்லது பழைய காதலியையோ நினைக்காமல் இருக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். இல்லாவிட்டால் 'ஆர்கஸம்' முடிந்ததும் 'அஜிட்டேஷன்' ஆரம்பித்து விடும்!




http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger