மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதல் ஜோடியை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்: 20 பேர் கைது Madhya Pradesh affair pair Semi nude 20 people arrested
Tamil NewsToday, 02:41
போபால்,அக். 16-
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கள்ளக்காதல் ஜோடியை அரை நிர்வாணமாக்கி, கரிபூசி ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த கிராமத்தில் வசித்து வந்த திருமணமான 35 வயது பெண் ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் 30 வயது வாலிபருடன் தொடர்பு வைத்துள்ளார். அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியூர் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் மாமியார் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பஞ்சாயத்தார், கள்ளக் காதல் ஜோடியை அவமானப்படுத்தி தண்டனை வழங்கும்படி உத்தரவிட்டனர்.
அதன்படி, இருவரையும் பொதுமக்கள் பிடித்து அரை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டியுள்ளனர். பின்னர் அவர்களின் உடலில் கரியைப் பூசி அவமானப்படுத்தி, தெருத்தெருவாக ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
பஞ்சாயத்து கொடுத்த தண்டனையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?