Wednesday 16 October 2013

குஜராத் ஆஸ்பத்திரியில் ஆசாராம் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது Asaram underwent potency test in Gujarat hospital

குஜராத் ஆஸ்பத்திரியில் ஆசாராம் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது Asaram underwent potency test in Gujarat hospital

Tamil NewsToday,

அகமதாபாத், அக்.16-

குஜராத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

அவரது புகாரின் பேரில் ஆசாராம் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆசாராம் பாபுவை இந்தூர் ஆசிரமத்தில் ராஜஸ்தான் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விமானம் மூலம், சம்பவம் நடந்த ஜோத்பூருக்கு அழைத்து வரப்பட்டார்.

ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து அவர் ஜோத்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜாமின் வழங்கக் கோரி ஆசாராம் சார்பில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆசாராமின் உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆனால், அவருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஆசாராமை வெளியில் விட்டால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று வாதாடினார்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, ஆசாராமின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், குஜராத்தில் உள்ள சூரத் ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங்களை கற்பழித்து விட்டதாக அக்கா- தங்கை இருவர் இவர்கள் மீது புகார் அளித்தனர்.

இது தொடர்பாக சந்த்கேடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவை தங்களிடம் விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என குஜராத் மாநில போலீசார் ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அகமதாபாத் போலீஸ் துணை கமிஷனர் மனோஜ் நினாமா தலைமையிலான போலீசார் ஆசாராம் பாபுவை விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காந்திநகர் மாஜிஸ்திரேட் கோர்ட் நேற்று அனுமதி அளித்தது.

விசாரணையில் ஒருகட்டமாக உள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆசாராம் பாபுவுக்கு இன்று ஆண்மை தன்மையை உறுதிபடுத்தும் பரிசோதனை நடத்தப்பட்டது.

ஏற்கனவே ராஜஸ்தான் மாநில கோர்ட்டில் நடைபெற்று வரும் கற்பழிப்பு வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டதும், அவர் முழு ஆண்மை தன்மையுடன் உள்ளார் என மருத்துவ அறிக்கை குறிப்பிட்டதும் நினைவிருக்கலாம்.
...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger