Wednesday, 16 October 2013

பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம் malai murasu managing director ramachandra adityan death

பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்      malai murasu managing director ramachandra adityan death

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் பா.ராமச்சந்திர ஆதித்தன். மாலைமுரசு நாளிதழின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார். சென்னை அடையாறு காந்திநகர் 3–வது தெருவில் வசித்து வந்த அவர் இன்று காலை 9 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.பா.ராமச்சந்திர ஆதித்தனின் இறுதிச்சடங்கு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதன்பிறகு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் நடைபெறுகிறது.பா.ராமச்சந்திர ஆதித்தனுக்கு, பங்கஜம் அம்மாள் என்ற மனைவியும், இரா.கண்ணன் ஆதித்தன், இரா.கதிரேச ஆதித்தன் ஆகிய 2 மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger