அபிஷேக்குடன் ரீஎண்ட்ரியாகும் ஐஸ்வர்யா
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
தனது கணவருடன் மீண்டும் நடிக்க வருகிறாராம் ஐஸ்வர்யா ராய்.
பாலிவுட்டின் கனவு கன்னியான ஜஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பின்பு படங்கள் எதுவும் நடிக்காமல் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.
பின்பு பன்சாலி இயக்கத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு நடனமாடி ரீ எண்ட்ரி ஆகப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின.
ஆனால் குத்துபாடலுக்கு நான் நடனம் ஆடவில்லை என்று மறுத்துவந்தார் ஜஸ்வர்யா.
இந்நிலையில் ரீ எண்ட்ரியை தனது கணவருடன் ஆரம்பிக்கப்போகிறாராம்.
இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஹிமேஸ் ரேஷாமியா மாசும் படத்தினை ரீமேக் செய்யப்போகிறாராம்.
இந்த படத்தில் நசுதின் ஷா மற்றும் சபானா அசிம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்ய உள்ளராம்.
இதற்காக பச்சன் குடும்பத்திடம் இருந்து வரும் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறாராம்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?