Monday 23 September 2013

கருப்பசாமி பாண்டியனுக்கு நிபந்தனை ஜாமீன் woman torture case karuppasamy pandian bail

பெண் பாலியல் புகார் வழக்கு: கருப்பசாமி பாண்டியனுக்கு நிபந்தனை ஜாமீன் woman torture case karuppasamy pandian bail
Tamil NewsToday,

மதுரை, செப். 23–

தி.மு.க.வின் நெல்லை மாவட்ட செயலாளராக உள்ள கருப்பசாமி பாண்டியன் மீது நெல்லை டவுனை சேர்ந்த தமிழரசி என்ற பெண் பாலியல் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கருப்பசாமி பாண்டியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வக்கீல் செல்லப்பாண்டியன் போலீசாரிடம் விளக்கம் கேட்டு பதிலளிப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது பாலியல் புகார் கொடுத்த தமிழரசி கோர்ட்டில் ஆஜராகி தன்னையும் வழக்கில் சேர்த்து கொள்ளும்படி மனுத்தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (இன்று) நீதிபதி சி.டி.செல்வம் ஒத்தி வைத்திருந்தார். மேலும் தமிழரசியின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று முன் ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது கருப்பசாமி பாண்டியன் தரப்பில் மூத்த வக்கீல் ரமேஷ், வக்கீல் ஆனந்த் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் கூறும்போது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் 3 பிரிவு ஜாமீனில் விடக்கூடியதுதான். பெண் கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு–4–ன் கீழான வழக்கில் இந்த புகார் வரவில்லை. பொது இடத்தில் பெண்களை துன்புறுத்தினால்தான் அந்த சட்டம் பொருந்தும். ஆனால் மனுதாரர் ஒரு அறையில் நடந்த சம்பவமாக புகாரில் தெரிவித்துள்ளார். எனவே கருப்பசாமி பாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றனர்.

ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் செல்லப்பாண்டியன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கருப்பசாமி பாண்டியனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அவர் கூறினார். இதற்கு பதிலளித்த நீதிபதி செல்வம் அனைத்து வழக்குகளிலும் போலீஸ் காவல் தேவையற்றது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே அவரிடம் தேவைப்பட்டால் நீங்கள் விசாரிக்கலாம் என்றார்.

மேலும் கருப்பசாமி பாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கிய அவர் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஒரு வாரம் தொடர்ந்து கையெழுத்திடவும் உத்தரவில் கூறியிருந்தார்.

...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger