கவுதம் கார்த்திக் என்னோட ஃப்ரண்ட்… சூர்யா தான் என் கனவு நாயகன் : லட்சுமி மேனன்
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,
சிப்பாய் படத்தின் ஜோடியாக நடிக்கும் கவுதம் கார்த்திக்தான் திரை உலகில் தன்னுடைய க்ளோஸ் ஃப்ரண்ட் என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன். சினிமாவில் நடிக்க வரும் முன்பிருந்தே சூர்யாதான் தன்னுடைய ஃபேவரைட் ஹீரோ என்று கூறியுள்ளார் அவர். சூர்யா உடன் நடிக்க கால்ஷீட் கேட்டால் கதையே கேட்காமல் ஓகே சொல்லிவிடுவாராம் லட்சுமி மேனன். சமீபத்தில் நாளிதழ் ஒன்றிர்க்கு அவர் அளித்த இன்டர்வியூவை படியுங்களேன்.
லட்சுமி மேனன் சிப்பாய், பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தாண்டானு நாலு படங்களில் நடிக்கிறார். நல்ல கதைகள் வந்தால் கால்ஷீட் தர தயார் என்கிறார்.
கவர்ச்சியான உடை அணிந்து நடித்தால் லட்சுமி மேனனுக்கு செட் ஆகாதாம். எனவே இப்போதைக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் டீசன்டாக நடித்துவிட்டு எதிர்காலத்தில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்கிறார் லட்சுமி மேனன்.
கவுதம் கார்த்திக் உடன் சிப்பாய் படத்தில் நடிக்கிறார். இப்போதைக்கு கெளதம் கார்த்திக்தான் லட்சுமி மேனனின் க்ளோஸ் ஃப்ரெண்ட் அவ்வளவு தான்."
சூர்யாதான் அவரது கனவு நாயகனாம். காக்க காக்க, கஜினி போன்ற படங்களை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறாராம். சூர்யாவோடு நடிக்க தேதிகள் கேட்டா, கதையே கேட்காமல் கால்ஷீட் ரெடி என்கிறார்.
விஜய், அஜித் என்று லட்சுமி மேனன் இணைந்து நடிக்க ஆசைப்படும் கதாநாயகர்கள் லிஸ்ட் ரொம்ம்ம்ப பெரிசு. விரைவில் இது நடக்கும் என்று நம்புகிறார் லட்சுமி மேனன்
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?