ஐஸ்வர்யாராயே தான் வேணும்…. அடம் பிடித்துக் காத்திருக்கும் பவர்ஸ்டார்
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
சென்னை: வாழ்நாளில் ஒருமுறையாவது நடிகை ஐஸ்வர்யாராயுடன் நடித்து விட வேண்டும் என்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்பதை மீண்டும் பதிவு செய்துள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன். சன்டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி 'சூப்பர் குடும்பம்'. அத்தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிப்போர் தங்களது தனித்திறமைகளை நிரூபிக்கும் நிகழ்ச்சியான இதில் நடுவர்களாக நடிகைகள் மீனா மற்றும் சங்கீதா, மற்றும் விஜய டி.ராஜேந்தர் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் சில வாரங்களில் சிறப்பு விருந்தினர்கள் பங்கெடுத்துக் கொள்வதுண்டு. அந்தவகையில் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவர்ஸ்டார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட சில சுவாரஸ்யமான கேள்விகளும், அதற்கு அவரது டிரேட்மார்க் பதில்களும் உங்களுக்காக….
இப்பவும் 'பெட்ரோமாஸ்'லைட் தானா…? முன்பொரு முறை அளித்த பேட்டியில் ஐஸ்வர்யாராயுடன் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் பவர்ஸ்டார். அதனை நிகழ்ச்சித் தொகுப்பாளரான தீபக் மீண்டும் நினைவு படுத்தி, தற்போது யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் எனக் கேட்டார்.
ஐஸ் தான் வேணும்…. அதற்குப் பவர்ஸ்டார், 'தன் விருப்பத்தில் மாற்றமேயில்லை. ஐஸ்வர்யாவுடன் தான் நடிக்க வேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.
யாரோடு ஜோடி போட ஆசை….? நிகழ்ச்சியில் இரண்டு நடிகைகள் நடுவர்களாக அமர்ந்துள்ளனரே, அவர்களில் யாருடன் ஹீரோவாக நடிக்க ஆசை என மீண்டும் தொகுப்பாளர் கேட்டார்.
நா சின்னப் பையன் மேடம்… அக்கேள்விக்கு டக்கென பதிலளித்த பவர், 'அவர்கள் இருவரும் நான் பள்ளி மாணவராக இருந்த போது ஹீரோயின்களாக அறிமுகமானவர்கள். எனவே, அவர்களுடன் நடிக்கும் எண்ணமில்லை' எனத் தெரிவித்தார்.
ரசித்து சிரித்த நடிகைகள்…. நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னமே பவர்ஸ்டாரை கலாய்க்க முன் அனுமதி வாங்கியிருந்தார்கள் நடுவர்களாக இருந்த மீனாவும், சங்கீதாவும். எனவே, பவர்ஸ்டார் பேசுவதை இருவருமே ரசித்து சிரித்தார்கள்.
கலக்குறே பவர்…. பவரின் ஒரு பதிலுக்கு நடிகை சங்கீதா 'வாழ்றீங்க சார்' என சூது கவ்வும் பட டயலாக்கை கூறி கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?