அகில இந்திய ஆக்கி போட்டி: இந்தியன் ஆயில் அணி 'சாம்பியன்' india hockey match indian oil team win
Tamil NewsYesterday,
சென்னை, செப்.23-
சென்னையில் நடந்த அகில இந்திய ஆக்கி போட்டியில் இந்தியன் ஆயில் அணி 6-4 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.பி.யை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
88-வது எம்.சி.சி-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நேற்று மாலை நடந்தது.
இதில் இந்தியன் ஆயில்-ஐ.ஓ.பி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியன் ஆயில் 6-4 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.பி. அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
இந்தியன் ஆயில் அணியில் கேப்டன் தீபக் தாகூர், பிரப்ஜோத்சிங் ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்தனர். ஐ.ஓ.பி.அணியில் ரூபிந்தர் பால்சிங் 2 கோலும், எஸ்.எம்.ரபீக், அமர்தீப் எக்கா தலா ஒரு கோல் திருப்பினார்கள். பரிசளிப்பு விழாவில் முருகப்பா குழும சேர்மன் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் ஆயில் அணிக்கு கோப்பையுடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், 2-வது இடம் பெற்ற ஐ.ஓ.பி. அணிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்தியன் ஆயில் வீரர் ரகுநாத் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?