Monday, 21 November 2011

ஜெ. சொல்வதை கேளுங்க, மக்களுக்கு 'நாட்டாமை' சரத்குமார் கோரிக்கை!

 
 
 
பேருந்து கட்டணம், பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் உருக்கமான வேண்டுகோளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தனது நிர்வாகத் திறமையால் இந்த விலை உயர்வை விரைவில் சீரமைப்பார் என்று சமக தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 
தமிழக முதல்வர் பால் விலை, பஸ் கட்டண உயர்வையும், மின் கட்டணம் உயர இருப்பதையும் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பில் தமிழக அரசின் நிதி நிலைமையையும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் உள்ளது என்று உள்ளபடியே விளக்கியுள்ளார். அந்த உருக்கமான அறிக்கை நம் ஒவ்வொருவர் இதயங்களிலும் வேதனையை அளித்துள்ளது.
 
ஒவ்வொரு தனிப்பட்ட பொதுமக்களும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டாலும் மக்களுக்காகவே இயக்கப்படும் ஆவின் நிறுவனம், அரசுப் போக்குவரத்து நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக தான் இந்த நடவடிக்கை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் பால் விலை உயர்வால் ஏழை விவசாயிகளுக்கும், மாடு வளர்ப்பவர்களுக்கும் பாலுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பது உறுதி.
 
மேற்படி நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அரசு பால் விலையை உயர்த்தியிருந்தாலும் தனியார் பால் விற்பனை விலையைவிட ஆவின் பால் விலை குறைவாகத் தான் இருக்கிறது. தனியார் பேருந்துகள் தொலைதூரம் செல்ல வசூலிக்கும் கட்டணத்தைவிட உயர்த்தப்பட்ட அரசுப் பேருந்து கட்டணம் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருந்தாலும் நம் தமிழக அரசின் நிலையை மனதில் வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.
 
தமிழக முதல்வரின் சீர்மிகு செயல்பாட்டால் அனைத்துப் பிரச்சனைகளும் விரைவில் தீர்ந்துவிடும் என்பது உறுதி. பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களின் தேவைகளை விலையில்லா பல நல திட்ட உதவிகளை செய்து அவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் தமிழகத்தின் முதல்வர், மேற்கண்ட நிறுவனங்களின் நிதிநிலையை தன்னுடைய நிர்வாக திறமையால் சீர்செய்து, நடுத்தர மக்களின் தேவை உணர்ந்து அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மேற்கண்ட கட்டணங்களை மீண்டும் சீரமைப்பார் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நம்பிக்கை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger