ஆவின் பால் விலை உயர்வும், பேருந்து கட்டண உயர்வும், மின்கட்டண உயர்வு பற்றிய முன்னறிவிப்பும் ஏற்படுத்தாத பேரதிர்ச்சியை, இவற்றையெல்லாம் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சில தேசாபிமானிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அபிமானிகளாக மட்டும் இருந்திருந்தால் இவர்களுடைய நியாயவாதத்தைப் புறந்தள்ளியிருக்கலாம். ஆனால், இவர்கள் தங்களை கட்சி சார்பற்றவர்களாகவும், நடுநிலைமையாளர்களாகவும், தேச நலனில் ஆர்வம் உள்ளவர்களாகவும், பொருளாதாரம் அறிந்தவர்களாகவும், பொதுமக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்களாகவும், படித்தவர்களாகவும், சிந்திப்பவர்களாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதால், இவர்களுடைய வாதங்களை நாம் பொதுவில் வைத்து ஆராயவேண்டியிருக்கிறது. கட்டண அதிகரிப்புக்கு [...]
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-kurippugal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?