81வயதிலும் 16வயது ஹீரோக்களுக்காக பாடல்கள் எழுதிகொண்டிருப்பவர் கவிஞர் வாலி. எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜீத், சிம்பு-தனுஷ் என்று பல தலைமுறைகளை தமிழ் சினிமாவில் கடந்து வந்த இவருடைய வாழ்க்கையில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்திருக்கும் எனபது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அதை கவிஞரே மனம் திறந்து சொல்லப்போகிறார். அவருடைய மன வாயை திறக்கும் புது நிகழ்ச்சி ஒன்றை வசந்த் டிவி உருவாக்கியிருக்கிறது.
வாலி இதுவரை எழுதியிருக்கும் மொத்தப் பாடல்களில் இருந்து ஆயிரம் பாடல்களை இந்த நிகழ்ச்சியில் இசைக்கப்போகிறார்கள். அதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வாலி 1000 என்று தலைப்பு வைத்திருந்தாலும், பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் இந்த நிகழ்ச்சி தயாராகியிருக்கிறது. ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் டூ வாலிவுட் என்ற பிரிவில் நம்ம கோலிவுட் பிரமுகர்கள் பலர் கவிஞரை பேட்டி எடுத்திருக்கிறார்கள். இந்த பேட்டியில் கவிஞர் பல சுவாரஸ்யமான அதே சமயம் பரபரப்பான கேள்விகளுக்கு தனது மன வாயை திறந்து பதிலளித்திருக்கிறார்.
குறிப்பாக கார்டூன் மதன் கவிஞரை பேட்டியெடுக்கும் போது நீங்கள் நடிகைகளுடன் பழகியிருக்கிறீர்களா? என்று கேட்டாராம். அதற்கு வாலி, "நான் பல நடிகைகளுடன் ஹாட் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருக்கேன்." என்று வெளிப்படையாக பதில் சொன்னாராம். அதே போல இந்த கவிஞர்கள் என்ன ஏதாவது அரசியல் தலைவர்களை துதி பாடியே காலத்தை ஓட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு, "நீங்கள் கலைஞரைத்தானே சொல்கீறீர்கள். கவிஞரையும், கவிதையையும் திமுக வை தவிர வேறு எந்த அரசியல் கட்சி மதித்திருக்கிறது. அதனால்தான் நான் கலைஞரை துதிபாடுகிறேன்." என்றாரம். அப்போது குறிக்கிட்ட நிருபர் ஒருவர், எம்.ஜி.ஆர். உங்களை ஆதரிக்கவில்லையா? என்று கேட்க, "அவரும் திமுக வில் இருந்தவர் தானே. அதனால் தான் சொன்னேன். நான் தனிப்பட்ட நபரை சொல்லவில்லை கட்சியைதான் சொன்னேன்." என்றார்.
இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தகவல்களை பகிர்ந்துகொண்ட வாலியிடம், இந்த நிகழ்ச்சியில் உங்களை பேட்டி எடுக்க கலைஞரை அழைத்தால் வருவாரா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக வருவார். இப்போது என்னை பேட்டி எடுத்தவர்கள் யாரையும் நான் அழைக்கவில்லை. நிகழ்ச்சி குழுவினர் அழைத்தார்கள் அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே வந்தார்கள். கலைஞரை நான் அழைத்தால் அவர் கண்டிப்பாக வருவார்." என்றார்.
ஒருவருடைய கேள்விகளே இப்படி என்றால் மற்றவர்களின் கேள்வி எப்படி இருக்குமோ! எது எப்படியோ ஜனவரி மாதத்தில் இருந்து ஒளிபரப்பாக இருக்கும் "வாலி 1000" நிகழ்ச்சியின் மூலம் வசந்த் டிவியின் டிஆர்பி ரேட்டிங் வேகமாக உயரும் என்பது உறுதியாகிவிட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?