அமெரிக்காவில் பதிவர்கள் சந்திப்புக்கு அழைப்பு வைக்கிறார் சித்ரா...
கலிபோர்னியா ஹோட்டல் பிளாங்கட் ஹாலில் மீட்டிங், செமையா டேக்கறேஷன் பண்ணி அமர்க்களமான ஏற்பாடும் சாப்பாடும், ஆமை கறியில் இருந்து, எலும்பெடுக்கப்பட்ட பாம்பு கறி வரை சமையல் ரெடியாகி ஆபிசரின் செக்கப்புக்காக காத்திருக்கிறது.
கல்பனா பாப்பா : அக்கா அக்கா எனக்கு பதினாலாம் தேதி பிறந்தநாள் வருது அதுக்குள்ளே இங்கே வாஷிங்டனில் நடக்கும் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஹிலாரியோடு ஒரு மீட்டிங் இருக்கு, பாயாசம் பண்ணுவது எப்பிடின்னு...சித்ரா ஜெர்க் ஆகிறார் அடடா ஆரம்பமே ஒரு மாதிரியா இருக்கே.....
சித்ரா : ஹா ஹா ஹா ஹா அப்பிடியா, சொல்லவே இல்லை ஹி ஹி அப்பிடி அந்த சேர்ல போயி உக்காரும்மா அண்ணனுங்க எல்லாம் இப்போ வந்துருவாங்க [[சமாளிக்கிறார்]]
நிவேதா : ஹலோ ஆண்டி, மனோ அங்கிள் எங்கே எங்கே...??? எங்கள் காரை பஞ்சர் ஆக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார், அவரை உடனே போலீஸ்ல பிடிச்சி குடுக்கணும்...
சித்ரா : மனதுக்குள், சாஸ்வதமா மீட்டிங் முடியணும் தெய்வமே....
நிரூபன் : கருப்பா இருந்தா தப்பா...? இல்லை தப்பாங்குறேன், ராஸ்கல் ஒரு டாக்சி'காரனும் வரமாட்டேங்குறான், இவனுகளை ஆங்கிலத்தில் கவிதை எழுதி வாசிக்க விட்டாதான் சரிப்படுவாணுவ...
சித்ரா : சரி அண்ணே அதை அப்புறமா பாத்துக்கலாம் உக்காருங்க...
ஒவ்வொரு பதிவர்களாய் வர ஆரம்பிக்கிறார்கள்.....
மீட்டிங் ஆரம்பம்...
மகேந்திரன் : கொலை கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்திவா, காலையில கோவைகாய், மதியத்துக்கு முருங்கைக்காய், ராத்திரிக்கு பனங்காய்....கண்ணை மூடிக்கொண்டு சத்தமாக பாடுகிறார்...
சித்ரா : ஹா ஹா ஹா ஹா அவ்வ்வ்வ்வ்வ்....... முடியல.......மகேந்திரன் வாயை பொத்திகொள்கிறார்...
கோமாளி செல்வா : அமெரிக்கா சித்ரா அக்கா மாதிரி அழகா இருக்குங்க, சரி மேட்டருக்கு வாறேன், நான் மிமிக்கிரி செய்து காட்டப்போகிறேன் பூனைமாதிரி'ன்னு, ஒரு பூனையை வெளியே எடுக்கிறான்..
இம்சை அரசன் : டேய் டேய் முடியலடா, பூனையை வச்சி நீ பண்ணுன அலப்பரையில, சிரிப்பு போலீஸ் நாலு நாளா சாப்பிடலை...
மலேசியா'செல்வி : ஏனோ,மீன் மற்றும் கோழி வெட்டி சுத்தம் செய்யும் பொழுதுதான்,தலை அரிக்கும்?? கையில் நிறைய பொருட்கள் இருக்கும் பொழுதுதான் உடம்பில் எறும்பு ஊறும்??மிளகாய் போன்ற காரமான பொருட்களை வெட்டும்பொழுதுதான்,கண்ணில் ஏதாவது வந்து விழும்??
தோசைக்கு மாவு கரைக்கும்பொழுதுதான் மூக்கில் ஏதோ ஊறும்??? ஏதாவது தேடுவதற்காக பையில் கை விட்டால் தேடுவது கையில் அகப்படவேபடாது????
கைபயில் போட்ட போன், ரிங் கேட்கும்,ஆனால் கையை விட்டு துளாவினாலும் அகப்படவே படாது???? இதெல்லாம் எனக்கு மட்டும்தானா??கே ஆர் விஜயன் : எறும்பு ஊருதுன்னா கண்டிப்பா உங்களுக்கு சுகர் இருக்குன்னு அர்த்தம், மிளகாய் வெட்டும் போது கண்ணை மூடிக்கொள்ளவும், மாவு கரைக்கும் போது மூக்குத்தியை கழட்டி வாசலில் வைத்து விடவும் மேட்டர் சால்வ்...
திவானந்தா : உருப்படுமா சொல்லுங்க உருப்படுமா, நான் ஏசி வச்ச ரெஸ்டாரண்டு வச்சிகிட்டு தோசை திங்க வருவாங்கன்னு காத்திருக்கும் போது இவங்க எப்பிடி வீட்ல மாவு அரைக்கலாம்...??? சொல்லிக்கொண்டே கையை பின்புறமாக சீவலப்பேரி பாண்டி மாதிரி கொண்டு போகிறார்...சித்ரா கலவரமாகிறார்..
ஆபீசர் : திவான் பொறுமையா இருய்யா இப்பவே பொங்குனா நல்லாயிருக்காது.....
திவானந்தா : சரிங்க ஆபீசர் நீங்க சொன்னா சரிதான்...
பன்னிகுட்டி : டேய் என்னங்கடா இங்கே நடக்குது, வேலை பாக்குற இடத்துலதான் மீட்டிங் வச்சி கொல்றாங்கன்னா இங்கேயுமாடா முடியலடா, அந்த ஆமை குஞ்சு கறியையாவது இன்னைக்கு திங்கவுடுவானுகளா அதுவும் தெரியாது கொக்காமக்கா....
சிரிப்பு போலீஸ் : அண்ணே கவலை படாதீக, வெயிட்டருக்கு பல்கா பணம் குடுத்துருக்கேன் ஆமை குஞ்சு கறியை நமக்காக எடுத்து ஒளிச்சி வச்சிருக்கான்..
நாய் நக்ஸ் [[என்னாய்யா பேரு இது]] : கண்மணி அன்போடு காதலன் நான் நான் எழுதும் கடிதம்.....கல்பனா ஓ'ன்னு அழுவதை பார்த்துட்டு சைலண்ட் ஆகிறார்...
ஆபீசர் : கன்னியாகுமரியில விற்கும் சங்குகள், அழகு மண்கள், சங்கு மாலைகள், ஏன் வாழைபழங்கள், பிலிம் ரோல்கள், துணிமணிகள், இட்லி தோசை எல்லாமே கலப்படம் நிறைந்து இருக்கு, இதுக்கு உறுதுணையாக இருக்கும் இரண்டு பேரையும் கைது செய்ய வாரன்ட் ரெடியாகிட்டு இருக்கு, இந்த மாபெரும் சபையிலே அந்த இரண்டு பேர்களின் பெயரை சொன்னால்தான் அவர்கள் முகமூடி கிழியும்....
[[போட்டோ : மலரும் நினைவு அருவி, மும்பை எக்ஸ்பிரசில் என்னோடு பிரயாணம் செய்யும் ஆபீசர்]]
சிபி : பதட்டமாக, யாரு ஆபீசர் சொல்லுங்க சொல்லுங்க....
ஆபீசர் : ஒன்று கேஆர் விஜயன் மற்றொன்று நாஞ்சில்'மனோ.....
விஜயன் : ஆஹா போற இடங்களில் எல்லாம் நமக்கே ஆப்பு வைக்கிறாங்களே... சத்தமாக, இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, மனோதான் வளைகுடா நாட்டில் பதுங்கி இருக்கும் அண்டர்வேர் ச்சே ச்சீ அண்டர்வேர்ல்ட் தாதாக்களோடு சேர்ந்து இதை செய்திருக்க வேண்டும் தீர விசாரியுங்கள்...
[[போட்டோ : மலரும் நினைவு அருவி, திற்பரப்பு அருவியில் நானும் விஜயனும்]]
விக்கி உலகம் : என்னாது தாதாவா, நான் பால்தாக்கரே முட்டியை பேத்தவன் தெரியுமா...???
தனிமரம் : பாஸ் நான் வித்தியாசமா ஒரு கதை சொல்றேன் கேளுங்க ஒரு ஊர்ல ஒரு வாத்தியார், அந்த ஊருக்கு ஒரே ஒரு பள்ளிக்கூடம்னு சொல்லிட்டு தேம்பி அழுகிறார்...
கோகுல் : ஒரு பேரணி ஊரணியா மாறி போச்சுய்யா மாறிப்போச்சு, குழந்தை தொழிலார்கள் இருக்கவே கூடாதுன்னு போராட்டம் நடத்துற இடத்துல, பத்து வயசு பையன் காப்பி வித்துகிட்டு இருக்கான், இது அநியாயம்...
வெங்கட் நாகராஜ் : தயவு செய்து மன்னிச்சிருங்க, எதிர்த்த மாடியில ஒரு சர்தார் முடியை விரிச்சி காயப்போட்டுருந்ததை பார்த்து அழகான பொண்ணுன்னு ஏமாந்தது என் நண்பனில்லை நாந்தேன் அது....
பன்னிகுட்டி : நிறைய பயலுக இப்பிடித்தான் எழுதிட்டு அலையிராணுக, அதுல முதல்ல இருப்பது அந்த பன்னாடை மூதேவி மனோ'தான்...
இம்சை அரசன் : எங்க அண்ணனை பற்றி பேசினால், அமெரிக்கா'ன்னு பார்க்கமாட்டேன் வீசிப்புடுவேன் அருவாளை...
பன்னிகுட்டி : டேய் உங்க அண்ணன் என்னடா பெரிய பில்கேசா, இல்லை ஒபாமாவா, ஒரு கில்மா ஹோட்டல்ல ஜில்மா பண்ணிகிட்டு கிடக்குறவந்தானே உங்க நோன்ணன் பொத்துங்கடா...
சென்னை பித்தன் : கேளுங்கள் ஒரு பெண்ணின் ஒப்பாரியை, கல்யாணம் ஆன புதிதில் என்னை தேவயானி தேவயானி'ன்னு கொஞ்சுன மனுஷன் இப்போது என்னை தேவையாநீ தேவையாநீ'ன்னு கேக்குறார்.....
புலவர் ராமாநுசம் : காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை, எழும்பி நின்று தாளம் போட்டு பாடுகிறார், மொத்த கூட்டமும் மயங்கி ரசிச்சி கேக்குது...
இதற்கிடையில் ஒபாமாவும், கிலாரி கிளிண்டனும் பதிவர்கள் சந்திப்பை கண்டுகளிக்க அவர்களை வானதி அழைத்து வருகிறார், சித்ரா ஓடிபோய் வரவேற்கிறார், செல்வியும் ஓடுகிறார் அவர்களை வரவேற்க....
ஒபாமா : ஹாய் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.....அவர் அப்பிடி சொல்லவும் சிபி எழும்பி சொல்கிறான்...
சிபி : ஆமா ஆமா ஜென்டில்மேன் அர்ஜூன் நடிப்பில், ஷங்கர் டைரக்சனில் வந்த சினிமா அதில் மதுபாலா ரொம்ப அழகு என கூறவும், ஒபாமா கலவரமாகிறார்...
[[போட்டோ : மலரும் நினைவு அருவி, குற்றாலத்தில் நானும்,சிபி'யும், கோமாளி'செல்வாவும்]]
ஹிலாரி : நாங்கள், ஏசியா பகுதிகளுக்குள் ஒற்றுமை, நல்லுறவையே விரும்புகிறோம் ஆனால் சில விஷமிகள் அலாஸ்கா அலாஸ்கா என்று கூறி எங்களை முட்டாளாக்க பார்க்கிறார்கள், அலாஸ்கா என்ற நாடு எங்கே இருக்கிறது என்பதை, பன்னிகுட்டியின் விஞ்ஞானிகளிடம் ஒப்படைக்கப்பட்டுருக்கிரதுமல்லா மல், இனி எவனாவது அலாஸ்கா பற்றி பேசினால் குவாண்டாமோ சிறை கன்பார்ம்......சிபி கைகால் எல்லாம் வெட வெட'ன்னு நடுங்குது....
ஒபாமா : மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது இல்லையா...?? சரி, இங்கே இருக்கும் பதிவர்களில் ஒருத்தன் அமெரிக்காவை, பேரிக்காய், கொய்யாக்காய், கத்திரிக்காய்'ன்னு கேவலபடுத்திட்டு இருக்கான் அவனை மட்டும் இங்கே காட்டி கொடுப்பவர்களுக்கு, அமெரிக்காவின் கிரீன் கார்டு கொடுக்கப்ப்படும்னு சொல்லவும், சிபி படேர்னு எழும்புகிறான் விக்கியை காட்டி குடுக்க, ஆபீசர் திவானந்தா'வுக்கு கண்ணை காட்ட பொடேர்னு முதுகுல அடிவிழுது, சிபி பொசுக்குன்னு கீழே அமருகிறான்...
தமிழ்வாசி : ஐ தீபாவளி வந்தாச்சு, மீட்டிங் முடிஞ்சதும் நமக்கு புதுத்துணி கிடைக்கப்போகுது கிடைக்கப்போகுது....
சூர்யா ஜீவா : சூரியனை ஒரு கடவுள் என்று வணங்குகிறார்கள், அக்னி பகவானை ஒரு கடவுள் என்று வணங்குகிறார்கள்.. இங்கு என் கேள்வி என்ன என்றால் நெருப்பு இல்லாமல் சூரியன் இல்லை, ஆக அக்னியும் சூரியனும் ஒன்று தானே...???
ஆமினா : இந்த மாசத்துல ஒரு நாள்ல தேர்தல் வரபோவுதாம்ல? ஊரே ஒரே விளம்பர மயம் தான்....... எந்த ஆட்டோவ பார்த்தாலும் மைக்செட்டோட அலையுது.
வானதி : ஆமாம் அக்கா எங்க ஊர்லயும் இந்த அநியாயம்தான் நடக்குது ஆனாப்பாருங்க ஒருத்தனும் காசு தராமல் குற்றாலம் டவலை'தான் தந்துட்டு போராணுக...
அஞ்சா சிங்கம் : இம்புட்டு பெரிய அமெரிக்காவுல ஒய்ன்ஷாப்பே கிடையாதா என சத்தமாக கூற, விக்கி அப்பிடியே நெளிகிறான்....
நிரூபன் : மகா கனம் பொருந்திய போப்பாம்மா ஸாரி ஒபாமா அவர்களே, இங்கே வந்திருக்கும் அனைத்து பதிவாளர்களுக்கும் கிரீன் கார்டு குடுத்து வாழவைக்கவேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்....
ஒபாமா : ஸாரி எங்களுக்கு இரண்டே ஆட்கள் போதும் அமெரிக்காவை காலி செய்ய, பர்ஸ்ட் பெர்சன் விக்கி என்பவன், அவனை குவாண்டாமோ சிறையில் எழுத சொல்லி அங்கே இருப்பவர்களை காலி செய்யலாம், செக்கண்ட் விக்கியை காட்டி கொடுப்பவனுக்கு கிரீன் கார்டு கொடுக்கப்படும் அவன் வெளியே இருப்பவர்களை, எழுதி காலி செய்யட்டும்.......விக்கி கலவரமாகிறான் ஆஹா தெரியாம வியன்னாவுல இருந்து வந்துட்டோமோ....
வைறை சதீஷ் : நாம் கணினியை எப்படி பாதுகாப்பாக வைப்பது...??? எங்கே போனாலும் சாக்கு பையில் போட்டு, கையோடு கொண்டு செல்லுங்கள் என சொல்லும் போதே, கோமாளி செல்வா நெஞ்சில் அடித்து அழுகிறான்....
வேடந்தாங்கல் கருண் : மற்றவர் மனதிற்குள் * *நுழைய முயல்பவனே!* *உன் மனதிற்குள் * *நீ,* *நுழைந்ததுண்டா ...?* *உன் மனதின், இருண்ட அறைகளுக்கும்,* *அங்கே உலவும் பேய்களுக்கும்,* *நீ, பயந்ததுண்டா...?
ஒபாமா : என்னாது பேயா, ஆஹா அமெரிக்காகுள்ளேயே பேய் வந்துருச்சான்னு அலறுகிறார்.....அலறி, கிலாரி கையை பிடுச்சு இழுத்துட்டு ஓடுகிறார், வானதி'யும் கருனை முறைச்சிகிட்டே ஓடுகிறார்...
விக்கி : என்னையாடா காட்டிகுடுக்க எழும்புனென்னு, சிபி முகத்தில் ரெண்டு குத்து விடுகிறான், டேய் என்னை யாருன்னு நினைச்சே..?? டேய் இப்பவும் சொல்றேண்டா அமெரிக்கா எனக்கு பேரிக்கா, கொய்யாக்கா.....தாண்டா.....
சிபியும், விக்கிகும் அடிதடி வலுக்க, அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் சகட்டுமேனிக்கு கலவரமாகிரது....
சித்ரா : அய்யய்யோ எருமைநாயக்கன்பட்டியிலும், நாகர்கோவிலிலும் நடந்தா மாதிரி ஆகிப்போச்சே, அண்ணா அண்ணா ஆபீசர் அண்ணா இந்தாங்க உங்க ஆயுதம்னு பெரிய பெல்ட்டை தூக்கி குடுக்க, சிபியையும், விக்கியையும் அடி பின்னுகிறார், தடுக்க வந்த தமிழ்வாசிக்கு ஒரு மிதியும் கிடைக்கிறது, அலறி ஓடுகிறான். துஷ்யந்தன் ஓடி வந்து, தனிமரம் காதில் ஏதோ சொல்ல ஓடுகிறார்கள் இரண்டு பேரும் பார்'ரை நோக்கி...
இதற்கிடையில், வானதி திரும்பவும் ஓடி வருகிறார், சித்ரா அக்கா சித்ரா அக்கா, கிளிண்டனும், ஜார்ஜ் புஷும், ஜார்ஜ் வில்லியம் புஷும், சோனியா பூந்தியும், மன்மோகன் சிங்[டி]யும் வந்துட்டு இருக்காங்க பதிவர்களை சந்திக்கன்னு சொன்னதுதான் தாமதம், கலிபோர்னியா ஹோட்டலுக்குள் பதிவர்கள் திக்கு எட்டாமல் அலறி, அதிரி புதிரியா ஓடுகிறார்கள்.....!!!
"மனோ"தத்துவம் : எண்ணெயில பொறிச்சாதான் அது பூரி, இல்லைன்னா வெறும் மாவுதான்...!!!
http://maangaai.blogspot.com
http://maangaai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?