Thursday 13 October 2011

மானம் இல்லாத கண்���ாடி....!!!



நான் பொதுவாவே பகல்ல வெளியே போகும் போது கூலிங் கிளாஸ் யூஸ் பண்ணுவது உண்டு பத்து வருஷமாக, சிலர் அதை நான் ஸ்டைலுக்காக போட்டுருப்பதாக சொல்லி கடுப்பேத்துவார்கள், என் நெருங்கிய நண்பர்களுக்கும், என்னோடு வேலைபார்ப்பவர்களுக்கும் அதன் காரணம் நல்லாவே தெரியும்....



காரணம் நான் வேலை பார்க்கும் இடம், ஏசி அறை, ஆபீசிலும், ரூமிலும் ஏசி என டார்க்கான, கூலிங்கான இடத்தில் இருப்பதால் வெளியே வரும் நேரங்களில் கிளாஸ் கண்டிப்பாக தேவைப்படுகிறது, கூலிங் கிளாஸ் இல்லாவிட்டால் கண்கள் பலமாக கூசுகிறது, அனுபவபட்டவர்களுக்கு இது நல்லாவே தெரியும்.


எத்தனையோ விலை உயர்ந்த கூலிங்கிளாஸ் இருந்தாலும், என் உயிர் நண்பன் ஜவகர் என்ற ராஜா, எனக்கு ஒரு கிறிஸ்துமஸ் தினம் ஒரு கிளாஸ் கிப்ட் தந்தார் எட்டு வருஷம் முன்பு, அதைத்தான் இப்போதும் உபயோகித்து வருகிறேன், அந்த கிளாஸ் மீது எனக்கு அம்புட்டு காதல்...!!! எத்தனையோ நண்பர்கள் அதை என்னிடம் இருந்து வாங்கி கொள்ள பிரியப்பட்டும் கொடுக்காத ஒரு பொருள் இந்த கண்ணாடிதான்...!!!


நான் வெளிநாட்டில் இருந்து லீவில் வரும் போதெல்லாம், என் பால்ய சிநேகிதன் ராஜகுமாருடன்தான் ஊர் சுற்றுவது வழக்கம், அவனுக்கு போலியோ பாதிப்பால் இரண்டு கால்கள் செயல் இழந்து விட்டது சிறு குழந்தையிலேயே...[[நம்ம கெ ஆர் விஜயன் அவனை மீட் பண்ணி இருக்கார்]]


அவனைத்தான் என் பைக்கின் பின்புறம் அமர்த்தி ஊர் சுற்றுவேன், அவனும் வேறு யாருடனும் வெளியே போகமாட்டான், என்னுடன் மாத்திரமே வருவான், [[இப்போ அவன் த்ரீ வீலர் வச்சிருக்கான் அந்த வண்டியில்தான் ஊர் சுற்றல்]]



அப்படி இருக்கும் ஒருநாள், கன்னியாகுமரி எனக்கு அருகில் என்பதாலும் நண்பர்கள் பலர் அங்கே வேலைபார்ப்பதாலும் அங்கேதான் கிடந்து சுற்றுவோம், நான் எப்போதும் போல கூலிங்கிளாஸ் சகிதம் போவதை பார்த்த நண்பன் ராஜகுமார்....


கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேசன் எதிரில் தேவி ஒயின்ஷாப்புக்கு எதிரே நானும் ராஜகுமாரும் டூரிஸ்டுகளை வேடிக்கை பார்க்க அமர்ந்திருந்தோம், அப்போது வாட்ச், பெண்களுக்கான வளையல், கம்மல். செயின் இப்படி கையில் வைத்து விற்பனை செய்யும் பையன் ஒருவன், நாங்களும் சுற்றுலா பயணி என எண்ணியவாறே எங்களிடமும் வந்தான்.


ராஜகுமார், பையன் வைத்திருக்கும் கண்ணாடிகளை பார்த்தவன், மக்கா எனக்கும் ஒரு கண்ணாடி வாங்கித்தா என்றான், விலை கேட்டோம் நூறு ரூபாய் என்றான், பின்னே அவனிடம் உள்ளூர் பார்ட்டி நாங்கள் என சொல்லியும் நம்பாமல் பேரம் நடக்கும் போதே, பக்கத்து லாட்ஜில் மேனேஜராக இருக்கும் நண்பன் வந்தான், வந்து பார்த்துட்டு நூறு ரூவாயா..? இது உள்ளூர் ஆளுங்கடா'ன்னு சொன்னதும்...


பத்து ரூபாய்க்கு தந்துவிட்டு போனான், நாங்களும் குமரியை சுற்றி பார்த்து ச்சே ச்சீ கன்னியாகுமரியை சுற்றி பார்த்து மங்களம் பாடிகிட்டு ஊருக்கு வந்துட்டு இருந்தோம், எங்கள் ஊர் பக்கம் நாங்கள் பைக்கில் நெருங்கவே, எங்களுக்கு சொக்காரனும், நண்பனுமான முருகேசன் அண்ணன் வழியில் நின்று கைகாட்டவே நின்றோம்.


அவர் ராஜகுமாரின் கண்ணாடியை [[புதுசா]] அதிசயமாக பார்த்தவர், எங்கே அந்த கண்ணாடியை காட்டுடேய் என்று சொல்லி வாங்கி திருப்பி திருப்பி பார்த்தார், கண்ணில் போட்டும் சுற்றும் முற்றும் பார்த்தார், பிறகு கழட்டி ராஜகுமாரிடம் கொடுத்துவிட்டு சொன்னார்....""வெளிநாட்டு கண்ணாடின்னா சும்மாவா அட்டகாசமா இருக்குடேய்""ன்னு சொன்னாரே பார்க்கலாம்...!!!! எ யப்பா இப்பவும் சொல்லி சிரிப்போம்....!


சரி வீட்டு பக்கம் வந்ததும் என் அண்ணன் அங்கே பாலத்தில் உக்காந்து இருந்தான் நண்பர்களுடன், அவன் ராஜகுமார் கண்ணில் கண்ணாடியை பார்த்த அதிசயத்தில் சொன்ன டயலாக், எலேய், மனோ'தான் மானம் வெக்கம் இல்லாம காண்ணாடி போட்டுருக்காம்னா உனக்கு என்கேலேய் போச்சு மானம் வெக்கமெல்லாம்...?? நான் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
------------------------------------------------------------------------------------------

பன்னிகுட்டிக்கு சமர்ப்பணம்....

சென்னிமைலை சிபி செந்தில் குமாருக்கு சமர்ப்பணம்....

அமெரிக்கா எனக்கு பேரிக்கா எனக்கூறும் "விக்கி உலகம்" விக்கிக்கு சமர்ப்பணம்....

இது யாருக்கு சமர்ப்பணம்'ன்னு உங்கள் பார்வைக்கு விடுகிறேன்....
--------------------------------------------------------------------------------------------

விஜயன் ஆபீசர் ஒளிச்சி வச்சிருந்த பெல்ட்டை பார்த்துட்டாரோ...???
[[ மனதில் மலரும் அருவி ]]




http://maangaai.blogspot.com



  • http://maangaai.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger