காதலர் தினம் படம் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்திப் படங்களில் ஆர்வம் காட்டிய அவர் கடந்த 2002ம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான கோல்டிபெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கடந்த 2005ம் ஆண்டு ரன்வீர் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அவருக்கு பட வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்க மறுத்துவருகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோனாலியிடம் மீண்டும் நடிக்க வருவீ்ர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ''மீண்டும் நடிக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்து தான் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
முன்பு அழகை அழகாகக் காட்டினார்கள். நடிகைகளின் கவர்ச்சியும் ரசிக்கும் வகையில் இருந்தது.
ஏன் நானும் கூட கவர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால் அதில் ஆபாசம் இல்லை. தற்போதுள்ள நடிகைகள் சகட்டுமேனிக்கு ஆடைகளைக் குறைத்து பார்க்க அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடித்து சினிமாவின் தரத்தையே சீர்குலைத்துவிட்டனர். சினிமா கீழ்த்தரமாகவும், அசிங்கமாகவும் ஆகிவிட்டது.
நாளுக்கு நாள் சினிமாவின் தரம் தாழ்ந்துகொண்டே தான் போகிறது. ஆகையால் நான் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன்'' என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?