Saturday 22 October 2011

மரணத்தின் விளிம்பில் சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபி மகன்

 
 
 
சிர்த்நகரில் பதுங்கியிருந்தபோது கடாபி கொல்லப்பட்டார். இந்த சண்டையின் போது அதை வழிநடத்தி சென்ற அவரது மகன் முட்டாசிம் கடாபியும் புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடலை பொது மக்கள் பார்வைக்காக புரட்சிப்படையினர் வைத்திருந்தனர். அப்போது அவர் பேண்ட் மற்றும் பனியன் அணிந்திருந்தார்.
 
கழுத்தில் குண்டுகள் துளைத்ததால் காயம் இருந்தது. இதனால் உடல் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது. சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு அவர் ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்தார். இதை அறிந்த புரட்சி படை அங்கு சென்றது. அப்போது அவர் வலது கையில் பாட்டிலை பிடித்து தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். இடது கையில் சிகரெட்டை பிடித்தபடி புகைத்து கொண்டிருந்தார்.
 
அந்த நேரத்தில் புரட்சி படை வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர். எனவே, அவர் பிணமாக கிடந்த இடத்தில் பாதி தண்ணீர் பாட்டிலும், பாதி நிலையில் எரிந்த சிகரெட்டும் கிடந்தது. இறுதி கட்ட சண்டையின் போது கடாபி அவரது மகன் மற்றும் ஆதரவாளர்கள் பலர் பலியாகினர். இதற்கிடையே கடாபியின் நெருங்கிய ஆதரவாளர் சயீப்- அல்-இஸ்லாம் குண்டு காயங்களுடன் உயிருடன் பிடிபட்டார்.
 
தற்போது அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது போட்டோ விரைவில் வெளியிடப்படும் என இடைக்கால அரசு அல்- அரேபியா டெலிவிஷனில் அறிவித்தது. கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரம் இவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இவர்தான் ராணுவத்தை வழி நடத்தி சென்றார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger