விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன், எந்த இயக்குநர் படத்தில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மலையாளப் படம் ஒன்றை ரீமேக் செய்யப்போகிறார் என்ற தகவலும் கசிந்தது. இதற்கிடையில் இயக்குநர் வெங்கட் பிரவும் கமல்ஹாசனும் சந்தித்திருக்கிறார்கள். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று கூறப்பட்டாலும், விரைவில் இச்சந்திப்புக்கு பின்னால் முக்கிய காரணம் இருப்பது தெரிய வரும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த சந்திப்பு நிகழ்ந்ததே கமல்ஹாசனுக்கு வெங்கட் பிரபு ஒரு கதையை சொல்லத்தான் என்றும் தகவல்கள் கூறுகிறது. வெங்கட் பிரபு சொல்லிய கதையும் கமலை ஈர்த்திருக்கிறதாம். அதனால் விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமலை வெங்கட் பிரபு இயக்கத்தில் எதிர்பார்க்கலாமாம்.
சகலகலா வல்லவன் போல ஒரு முழு நீள கமர்ஷியல் ஃபார்மூலா படமாக இருக்க வேண்டும் என்ற கமலின் விருப்பத்தை வெங்கட் பிரபுவின் கதை பூர்த்தி செய்து இருக்கிறதாம்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?