கோடம்பாக்கத்தில் எதற்கு பயப்படுகிறார்களோ இல்லையோ... பவர் ஸ்டார் சீனிவாசனைப் பார்த்தாலே கொஞ்சம் நடுக்கம்தான். எனக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார்தான் என்பவரைப் பார்த்தால் வேறு என்னதான் செய்வது!
அவர் தலையைக் கண்டதும் பாசத்தோடு தாவி ஓடுபவர்களில் பலர், காந்தி தாத்தா படம் போட்ட நோட்டைக் கவ்வத் துடிப்பவர்கள். பார்த்ததும் எஸ் ஆகிறவர்கள், எதுக்கு இந்த 'ஆனந்தத் தொல்லை' என்ற ரகத்தினர்!
சமீபத்தில் நடந்த ஒரு இசை வெளியீட்டு விழா. ஒரே இளவட்ட நடிகர்கள் கூட்டம். சரக்கென்று வந்து அவர்கள் மத்தியில் பவர் ஸ்டார் நிற்க, பதறிப் போய் என்ன செய்யலாம் என தவித்தார்கள்.
புகைப்படக்காரர்களோ நல்ல சான்ஸ் விடாதீங்கப்பா என்று குஷியாக 'சுட்டு'த் தள்ள தெறித்து ஓடினார்கள் இளம் நடிகர்கள்.
ஒரு கட்டத்தில் நடிகர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தபோது, திடுமென்று அவர்கள் மத்தியில் நின்ற பவர் ஸ்டார், பக்கத்திலிருந்த ஆர்யா தோள்மீது கை போடுவது போல இறுகப் பற்றிக் கொண்டார் (ஓடிப் போயிட்டா?!). ஆர்யாவுக்கு வேறு வழியில்லை. பவர் ஸ்டாருடன் பக்கா போஸ் கொடுத்துவிட்டே கிளம்பினார்.
கிளம்பும்போது போட்டோகிராபர்களிடம், இந்த போட்டோவை மட்டும் ரிலீஸ் பண்ணிடாதீங்க பிரதர் என்று அன்புக்கட்டளை போட்டபடி கிளம்பினார் மனுஷன்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?