Saturday, 22 October 2011

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.

 
தாய்ப்பால்கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந்தால் கொடுத்து விட்டு போகிறார்கள்என்று நினைக்கத்தோன்றுகிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள்மருத்துவர்கள்.சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லைஎன்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு.சிலர் புட்டிப்பால் கொடுக்கஆரம்பித்துவிடுவார்கள்.இதெல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பைஏற்படுத்தக் கூடியது.தாய்ப்பாலுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனையில் கூட உருவாக்கமுடியாது என்பதே நிஜம்.
 
பால் கொடுக்கும்போது குழந்தையின்தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்குநேராகவும்,அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்கவேண்டும்.அடுத்துகுழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும்.குழந்தையின் கழுத்து,தோள் மட்டுமில்லாமல் முழு உடலையும் தாயின் கை தாங்குவது போல் வைக்கப்படவேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கமுயற்சிக்கும்போது தாய் குழந்தையின் உதடுகளால் மார்பக காம்பைத் தொடவைக்க வேண்டும்.குழந்தை வாய் திறக்கும் வரைகாத்திருந்து கீழ் உதடு மார்பக காம்பின் அடிப்பகுதியை நன்கு பிடித்துக்கொள்ளுமாறுசெய்யவேண்டும்.
 
குழந்தைமார்பகத்தைநன்கு கவ்வியிருக்கிறதா சரியாக சப்பிக் குடிக்கிறதா என்பதை தாய் கவனிக்கவேண்டும்.குழந்தையின் முகவாய்க்கட்டை மார்பகத்தை தொடவேண்டும்.வாய் நன்றாகதிறந்திருக்க வேண்டும்.கீழ் உதடு வெளியே பிதுங்கியிருக்க வேண்டும்.மார்பக காம்பின்கீழ்பகுதி முழுவதும் குழந்தையின் வாயினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
முதல் ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் தவிர குழந்தைக்கு வேறு எந்த திரவமும் தேவைப்படாது.கிரைப்வாட்டர்,தண்ணீர் எல்லாம் அவசியமேயில்லை.தேவையான் தண்ணீர் தாய்ப்பாலில்இருக்கிறது.ஒரு நாளில் எட்டு முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.குழந்தைஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
 
குழந்தைக்கு மாட்டுப்பாலைகொடுப்பதும்,சில நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பதும் பலர் செய்யும் தவறு.இதுகுழந்தையின் ஜீரண மண்டலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.இன்றைய முறையற்றவணிகர்களால் சுத்தமான பால் கிடைப்பது எளிதல்ல! அதிக பாலுக்காக ஹார்மோன் ஊசிபோடுவதாலும் நிறைய பிரச்சினைகள்.
தாய்ப்பாலை விட பாதுகாப்பானதுவேறெதுவும் இல்லை.மருத்துவர் அறிவுரையின் பேரில் மாட்டுப்பால் கொடுத்தாலும் நிறையதண்ணீர் கலக்கவேண்டும்.அதுவும் சுத்தமான நீராக இருக்கவேண்டும்.கடையில் பவுடர்வாங்கினாலும் காலாவதி தேதியை கவனிக்க வேண்டும்.பாலாடை அல்லது தேக்கரண்டிபயன்படுத்துவதே சிறந்த்து.புட்டி பயன்படுத்தும்போது அழுக்கு சேர்ந்து நோய்த்தொற்றைஉருவாக்கலாம்.ஆறு மாதம் கழித்து பிறகு இணை உணவுகள் தர ஆரம்பிக்கலாம்.
(யுனிசெப் பிரசுரம் ஒன்றின் உதவியுடன்)

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger