பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் கடந்த 20ந் தேதி கூடுதல் போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங்கிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில், தனக்கு தேவையான அளவுக்கு பணம் இருப்பதாகவும், ஆனால், தன்னை கவனிக்க ஆள் இல்லை என்றும், தன்னை கவனிக்காத மகன் மற்றும் மருமகள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், மக்களை சிரிக்க வைத்த எனது நிலை, இன்றும் பலரும் சிரிக்கும்படி ஆகிவிட்டது. என்னிடம் போதுமான அளவு பணம் உள்ளது. என் மனைவி இறந்துவிட்டதால் எனக்கு உதவி செய்ய ஆள் இல்லை. எனது மகனும், மகளும் மருமகளும் என்னை தனி ஆளாக தவிக்கவிட்டு சென்றுவிட்டனர் என்று கண்ணீர் மல்க கூறினார்.
நடிகர் லூஸ் மோகன் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூடுதல் போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங், மைலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, மைலாப்பூர் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில், தனது மகன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டதாக நடிகர் லூஸ்மோகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 20 ந்தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் என் மகன் மீது புகார் கொடுத்திருந்தேன். இன்று நான் என் குடும்பத்தினருடன் சுமூகமாக சேர்ந்துவிட்டேன். எனவே, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மைலாப்பூர் இன்ஸ்பெக்டரிடம் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன் என்று கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?