நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த மும்பை சினிமா பைனான்ஸியர் கைது செய்யப்பட்டார்..
ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகியை ரூ. 2.5 கோடி கடன் பிரச்சினை தொடர்பாக, மிரட்டியதாக பிரபல மும்பை சினிமா பைனான்சியர் சுசில்குப்தா (வயது 62) மீது தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் ராஜராஜன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
கொலை மிரட்டல் வழக்கில் பைனான்சியர் சுசில்குப்தா நேற்று மாலை கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?