இன்றைய பரல்களில் முதலில் ஜோக்ஸ்—
ராமு:நேத்து நான் உன் வீட்டுக்கு வந்தப்ப டி.வி.ல சீரியல் பார்த்து அழுதிட்டிருந்தே!சீரியல் பார்த்து அழுவற முதல் ஆம்பிளை நீதாண்டா.
சோமு: டேய்!அது சீரியல் இல்லடா.என் கல்யாண சி.டி.!
இரண்டு பெண்கள்:
முதல்பெண்: என் கணவர் ,திருமணமான புதுசிலே என்னைத் 'தேவயானி,தேவயானி' ன்னு கொஞ்சுவாரு.
இரண்டாமவள்:இப்போ?
முதல்:தேவையா நீ,தேவையா நீன்னு எரிஞ்சு விழுறாரு!
புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில்,ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார்.ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார்.அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது.சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது.இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து,புத்தரிடம் விவரம் சொன்னான்.சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடனிடம் மீண்டும் சென்று வரப் பணித்தார். அவன் சென்று பார்த்தான்.நீர் சிறிது தெளிந்திருந்தாலும், இன்னும் கலங்கலாகவே இருந்தது.அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றது.புத்தர் மீண்டும் அவனைப் போய் வரச் சொன்னார்.
இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது.எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான்.
புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துச் சொன்னார்"அந்த நீர் தெளிவதற்காக நீ என்ன செய்தாய்?அதை அப்படியே விட்டு விட்டாய்.நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது.உன் மனமும் இது போன்றதுதான்.குழப்பம் ஏற்படும்போது அதை அப்படியே விடு.சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.நீ அதற்காக எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.அது தானே நடக்கும்."
ஆம்!
மன அமைதியைப் பெறக் கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முயற்சியின்றித்தானே நடக்கும்.
அவலம்.(புதுக்கவிதை)
----------
இளம் வயதில் விதவையான
நார்மடிப் பாட்டிக்கு
நரை சிரைக்கும் நாவிதனின்
ஸ்பரிசமும்
சிலிர்ப்புதான்!
(இது அந்தக் கால அவலம் பற்றிய கவிதை.நார்மடி என்பது தலை மழித்த பிராமண விதவைகளணியும் ஒரு புடவை)
http://tamil-photo.blogspot.com
http://tamil-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?