சண்டிகர்: மேட்ச் பிக்சிங் குறித்து வெளியான செய்தி குறித்து விளக்கம் அளிக்க விரும்பவில்லை. இதுகுறித்து பிசிசிஐயுடன் பேசிக் கொள்கிறேன் என்று கூறி விட்டார் ஹர்பஜன் சிங்.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டை உலுக்கி எடுத்த ஸ்பாட் பிக்சிங் விவகாரம் அம்பலத்திற்கு வர முக்கியக் காரணம் மஜார் மஜீத் என்ற பெரும் பணக்கார புரோக்கர்தான். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட், முகம்மது உள்ளிட்ட மூவர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டது இது தொடர்பான புகாரைக் கூறியதோடு வீடியோவையும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து மூவரும் பாகிஸ்தான் அணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு லண்டன் சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இதன் நான்காவது நாள் விசாரணையின்போது, புலனாய்வுப் பத்திரிக்கையாளர் மசார் மகமூது என்பவர் சாட்சி அளித்தார்.
அதில், மஸார் மஜீத் தன்னிடம் பேசியதாகவும், கிரிக்கெட் உலகின் பிரபலங்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல், பிரட் லீ, ரிக்கி பான்டிங் ஆகியோருடன் தனக்குத் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார். இதுகுறி்த்து, சண்டிகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஹர்பஜனிடம் செய்தியாளர்கள் துரத்தி, துரத்தி சென்று கேட்டனர்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதலில் 'நோ கமென்ட்ஸ்' என பதிலளித்த ஹர்பஜன், பின் ஒரிரு வார்த்தைகளில் பதிலளித்து சென்றார்.
ஹர்பஜன் கூறுகையில், குற்றசாட்டுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இதுகுறித்து நான் தேவைப்பட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேசிக் கொள்வேன். மற்றபடி இது போன்ற சில்லியான செய்திகளுக்கெல்லாம் நான் விளக்கம் அளிக்கத் தயாராக இல்லை என்றார்.
அப்போது சர்ச்சையில் சிக்கியுள்ள இன்னொரு வீரரான யுவராஜ் சிங்கும் உடன் இருந்தார். அவரும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?