சினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவிய நடிகை குத்து ரம்யா, அரசியலில் தனக்கு கிடைத்த மோசமான அனுபவத்தை நெருங்கியவர்களிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறாராம். "குத்து" படத்தில் அறிமுகமானதால் "குத்து" ரம்யா என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை திவ்யா ஸ்பந்தனா. கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹிட் என்பதால் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க முன்னணி கன்னட ஹீரோக்கள் முண்டியடிக்கின்றனர்.
இந்நிலையில் திடீரென ரம்யா அரசியலில் குதித்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல், மீது கொண்ட அபிமானத்தால் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ, எடுத்த எடுப்பிலேயே கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு காங்கிரஸ் மூத்த தலைவர்களை எரிச்சலடைய வைத்தது. உடனே தலைமைக்கு புகார் பறந்தது. தன் இஷ்டத்திற்கு அவர் பேசி வருகிறார் என்று ரம்யா மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து ரம்யாவுக்கு விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த குத்து ரம்யா, போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். நினைத்தது எதுவும் நடக்காமல், அரசியலில் அலைக்கழிப்புக்கு ஆளான ரம்யா, அந்த கசப்பான, மோசமான அனுபவங்களை நெருங்கியவர்களிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?