Tuesday, 11 October 2011

ஷாரூக்கானின் ரா-1 படத்தின் கதை இதுதான்!

 
 
ஈரோஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, வின்ஃபோர்டு புரடக்ஷ்ன் தயாரிப்பில் தீபாவளிக்கு ஷாரூக்கான் நடித்து மிகப்பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும் "ரா-1" படத்தின் கதை தெரியுமா...? கதைப்படி, ஹீரோ ஷாரூக், கரீனா கபூர் ஜோடி லண்டனில் வசிக்கிறது. சாஃப்ட்வேர் என்ஜினியரான ஷாரூக், கம்ப்யூட்டரில் புதுப்புது பொம்மைகளையும், கம்ப்யூட்டர் கேம்ஸ்களையும் உருவாக்கிடும் வல்லூனர். தன் குழந்தைக்காக ஹீரோவைக்காட்டிலும் அதிக சக்தியுடைய வில்லனாக ரா-1 மனித ‌பொம்மையை வடிவமைக்கிறார். அது சாஃப்ட்வேர் கம்ப்யூட்டர்களை எல்லாம் தாண்டி எந்திர மனிதனாக வெளிவந்து உலகை அழிக்க முயல்கிறது. அதன் கொட்டத்தை அடக்க ஜி-1 எனும் சூப்பர் பவர் ஹீரோ அவதாரம் எடுக்கும் ஷாரூக், அதை எவ்வாறு அடக்கி ஒடுக்குகிறார் என்பதுதான் ரா-1 படத்தின் மொத்த கதையும்.
 
இதில் ரா-1 கேரக்டரில் ராவணனாகவும், ஜி-1 கேரக்டரில் ராமனாகவும் ஷாரூக் சித்தரித்திருப்பது கூடுதல் ஹைலைட்! படத்தில் தன் குழந்தைகளைக்காட்டிலும் அதிக பயந்த சுபாவம் உடைய ஷாரூக், சூப்பர் ஹீரோ ஆவதும் குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger