Tuesday, 23 August 2011

இனி சித்திரை முத���் நாள் தான் தமிழ��� புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா ���ாக்கல்



இனி ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும், தை முதல் தேதி தமிழ் புத்தாண்டு என்பது ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் 2008ம் ஆண்டு, தை முதல் நாள் தான் (பொங்கல் தினம்) தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அதிமுக அரசு இப்போது ரத்து செய்துள்ளது.

இனி ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும், தை முதல் தேதி தமிழ் புத்தாண்டு என்பது ரத்து செய்யப்படுவதாகவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இன்று காலை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சட்டமன்றத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

அதில், பொது மக்களும், தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர்களும், வானியல் வல்லுனர்களும் மற்றும் பல்வேறுபட்ட துறைகளில் உள்ள அறிஞர்களும் கடந்த 2008ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சட்டம், தமிழ் திங்களான சித்திரைத் திங்களின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வரும் வழக்கமான நடைமுறைக்கு மாறாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

வெவ்வேறு ஊடகங்களின் வாயிலாக தங்களது கருத்துக்களை இவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் இந்த சட்டத்தை நீக்கம் செய்யுமாறும் தமிழ் திங்களான சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் பழமை வாய்ந்த வழக்கத்தினை மீட்டு அளிக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டமானது தமிழ் திங்களான தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக பின்பற்றுவதை பொறுத்த அளவில் பொது மக்களிடையே நடைமுறை இடர்பாடுகள், தடை, எதிர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அரசானது தமிழ்த் திங்களான சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வரும் காலத்தால் முற்பட்ட வழக்கத்தினை மேற்கண்ட சட்டத்தை நீக்குவதன் மூலம் மீட்டு அளிக்க முடிவு செய்திருக்கிறது.

இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த புதிய அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆ.சௌந்திரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாகவும், இதை நிலைக் குழுவுக்கு அனுப்பி மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால், அதை அரசு ஏற்கவில்லை. இந்த சட்ட மசோதா அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீர்மானம் மூலமாக இன்றே விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, சட்டமாக நிறைவேறும்.

இந்த மசோதா அறிமுகமானபோது அதுகுறித்து பாமக எம்எல்ஏக்கள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக உறுப்பினர்கள் சட்டசபையைப் புறக்கணித்து வருவதால், இன்றும் அவர்கள் அவைக்கு வரவில்லை.






http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger