கடந்த சனிக்கிழமை ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் தமிழீழ தேசிய கொடியும் ஒரு நாட்டிற்குரிய கொடியின் அந்தஸ்தோடு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 50,000 பார்வையாளர்கள் மத்தியில் 40 நாடுகளின் கொடிகள் ஆரம்ப விழாவில் கொண்டுசெல்லப்பட்டது அதில் தமிழீழ தேசிய கொடியும் வேற்றின மக்களால் ஒரு நாட்டுக்குரிய கொடியின் மரியாதையோடு கொண்டுசெல்லப்பட்டது.
இச் செய்தி தொடர்பாக உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சியடைந்துள்ள அதேவேளை இலங்கை அரசு ஜேர்மன் அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள ஜேர்மன் துணைத்தூதரை கோட்டபாய ராஜபக்ஷ சந்தித்து கேள்விகேட்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழம் என்று ஒரு நாடு இல்லாத நிலையில் ஒரு நாட்டின் கொடியைப் போல அதனை எவ்வாறு கொண்டுசெல்ல முடியும் என இலங்கை கேள்வி எழுப்பவுள்ளது.
http://masaalastills.blogspot.com
http://masaalastills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?