இவர்கள் அனைவரையும் மற்றும் அவர்களது பிள்ளை குட்டிகளையும் சேர்த்து இராணுவ முகாமில் அடைத்துவைத்த இலங்கை இராணுவம் தற்போது அவர்களை நீதிமன்றின் முன் நிறுத்தவிருப்பதாகக் கூறி அவர்களை அழைத்துச்சென்று சாலை ஓரத்தில் இருத்திவிட்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றி ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் இருப்பதாகவும் அதிர்வின் செய்தியாளர் தெரிவித்தார். மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட படங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் யாழ் நாவாந்துறையில் தமிழ் பெண்கள் தனியாக இருந்த வீடு ஒன்றுக்குள் நுளைந்த சிலர் தூக்கத்தில் இருந்த பெண்களோடு தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் எழுப்பிய கூக்குரலில் ஊர்மக்கள் திரண்டு அவ்வீடு நோக்கிச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் அருகில் உள்ள இராணுவ முகாமுக்குள் ஓடி மறைந்துள்ளனர். அவர்களை தம்மிடம் ஒப்படைக்கும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியது. இதன்போது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது. இளைஞர்களையும் துப்பாக்கிப் பிடியால் தாக்கியுள்ளனர். (புகைப்படங்கள் இணைப்பு)
பொதுமக்களின் வீடுகளுக்குள் நுளைந்த இராணும் அலுமாரிகளை அடித்து நொருக்கியதோடு, வெளியே நின்றிருந்த தமிழர்களின் மோட்டார் சைக்கிள்களையும் எட்டி உதைத்து சேதப்படுத்தியும் உள்ளனர். இதற்கு மேல் பிள்ளைகள் மற்றும் கைக்குழந்தைகள் என்று கூடப் பாராமல் அவர்களையும் அவர்களின் தாய்மார்களையும் ரோட்டு ஓரமாக இருத்திவைத்துள்ளனர்.
ஏதோ கொலைக்குற்றம் புரிந்தவர்கள் போல இவர்களை நடத்திவருகின்றனர். தமக்கு பாதுகாப்புத் தேவை என இராணுவத்திடம் கடுமையான தொணியில் இவர்கள் கேட்டுள்ளார்கள் ! அவ்வளவுதான் அதற்கு இலங்கை இராணுவம் நடந்துகொள்ளும் விதம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.
உலக நாடுகள் இதுகுறித்து கவனம்செலுத்தவேண்டும். இப் பொதுமக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.







அதிர்வு
http://masaalastills.blogspot.com
http://masaalastills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?