ஏழாம் அறிவு படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிருக்கிறது சன் டி.வி. விலை? சுமார் ஏழு கோடி என்கிறது கோடம்பாக்கத்து குருவி. அதுமட்டுமல்ல, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் நேரடியாக ஒளிபரப்பப் போகிறதாம் சன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் இப்படத்தை பெரிய விலை கொடுத்து வாங்க அத்தனை சேனல்களுக்கும் அடிதடி போட்டி. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படங்கள் எல்லாமே கலைஞர் டிவி அல்லது விஜய் டிவி தவிர வேறெந்த சேனல்களுக்கும் கொடுப்பதில்லை அவர். இந்த நிலையில்தான் சன் குழும தலைவர் கலாநிதி மாறனும் உதயநிதியும் சந்தித்திருக்கிறார்கள்.
மாறன் டவர்சில் நடந்த இந்த சந்திப்பில் கைமாறியது ஏழாம் அறிவு. முழு படத்தையும் வாங்கி வெளியிட சன் தயாராக இருந்தும், தற்போதைக்கு சேனல் ரைட்ஸ் வரைக்கும்தான் கொடுத்திருக்கிறாராம் உதயநிதி.
செப்டம்பர் 10 ந் தேதி சிங்கப்பூரில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறதாம்.
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?