கேணல் கடாபி கடந்த மே மாதம் ஊடகங்களின் முன்னால் காட்சியளித்தார் ஆனால் அதன் பின்னர் அவரை ஊடகங்களில் காண முடியவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான கடாபியின் ஒளிப்படங்களை பரிசோதித்த நிபுணர்கள் அது மே மாதத்திற்கு முன்னர் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.
அதேநேரம் இன்றைய பிரித்தானிய பத்திரிகையான டெய்லி ரெலிகிராப் நேட்டோவின் கடுமையான கண்காணிப்பில் கடாபி இருப்பதாக தெரிவித்துள்ளது. கடாபியை கண்காணிப்பதற்கே விசேட ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், தரை, கடல், ஆகாயம் என்று எப்பகுதியாலும் அவர் தப்ப முடியாதவாறு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எழுதியுள்ளது.
மேலும் பிரிட்டனின் அவாக்ஸ் ராடர் பிளைட் தனியான பறப்புக்களை மேற்கொண்டுள்ளது. பாலைவன வழியாகக்கூட அவர் தப்ப முடியாத கண்காணிப்பை அது செய்து வருகிறது.
அமெரிக்காவின் றீவிற் ஜொயின்ற் உளவு விமானம் மொபைல் தொலைபேசி, சற்லைற் உரையாடல் யாவற்றையும் செப்பமாக வடிகட்டியபடி உள்ளது. இப்படியொரு தகவல் வடிகட்டல் வன்னிப்போரின் இறுதிக்கட்டத்திலும் செய்யப்பட்டிருக்கும் என்பதை இத்தருணம் சிறீமான் சிங்கள பொதுஜனம் கவனத்தில் கொள்ளல் அவசியம். வெள்ளைக் கொடி பிடித்து வந்தவரை சுடும்படி உத்தரவிட்ட பேர்வழியின் குரல் பதிவாகியிருக்கும்.
மறுபுறம் பிரிட்டனின் றோயல் வான்படைப்பிரிவு வாகனங்கள் மூலமாக கடாபி தப்பிவிட முடியாதவாறு கடும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. கடாபி சரணடைந்தால் அவரை பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல தென்னாபிரிக்க விமானம் ரூனிசியாவில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவைகளை எல்லாம் தாண்டி கடாபி தப்பிச் செல்ல முற்பட்டால் உடனடியாகவே கைது செய்யப்படுவார்.
முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்து முற்றுகை முறியடித்தல் தோல்வியடைய இப்படியொரு கண்காணிப்பே உதவியுள்ளது என்பதை இத்தருணம் சிறீமான் தமிழ் பொதுசனம் அறிய வேண்டியதும் அவசியமாக உள்ளது.
எவ்வாறாயினும் சரணடைந்தால் கடாபியின் 42 வருட சரித்திரமே நாசமாக்கப்படும் என்பதே உண்மையாகும். சரணடைய முன்னர் பாலும் தேனும் ஒழுகப் பேசும் ஐ.நா, சரணடைந்த பின்னர் தொனியை தடாலடியாக மாற்றும். எதிரிகளின் கையில் அகப்படுவதாயின் கடாபி இப்படியொரு போரை நடாத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. இலங்கை வன்னியில் நடைபெற்ற சரணடைவுகளும், கொலைகளும் லிபியாவிலும் நடக்காது என்பதற்கு உத்தரவாதமில்லை.
http://masaalastills.blogspot.com
http://masaalastills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?