Thursday, 25 August 2011

ஈழ பெண்களிடம் பா���ியல் வன்முறை தொ��ர்கிறது: சீமான்



இலங்கையில் தமிழ்ப் பெண்களிடம் மர்ம மனிதர்கள் உடல் முழுவதும் கிரீஸை தடவிக்கொண்டு பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்கிறது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்கிளப்பில் உடல் முழுவதும் கிரீஸை தடவிக்கொண்டு தமிழ்ப் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களின் நடமாட்டம் இப்போது தொடர்ந்து தமிழர் வாழும் பகுதிகளில் பரவி வருகிறது.

வடக்கு மாவட்டமான யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை மர்ம மனிதரின் நடமாட்டம் காணப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் இருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள நாவாந்துறை எனும் மீனவ கிராமத்தில் திங்கட்கிழமை இரவு இப்படிப்பட்ட மர்ம மனிதர்கள் 3 பேர் நுழைந்துள்ளனர்.

அவர்களை கண்ட அங்கிருந்த மக்கள் துரத்திப்பிடிக்க முயன்றுள்ளனர். அந்த மூன்று பேரும் அங்கிருந்த ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து தப்பித்துள்ளனர். இதைக்கண்ட மக்கள் ராணுவ முகாமை முற்றுகையிட்டுள்ளனர். மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அதற்கு சிங்கள ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் கோபமுற்ற மக்கள் அங்கிருந்த ராணுவ வாகனங்கள் சிலவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். மக்களை கலைக்க ராணுவமும், காவல் துறையினரும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

மக்கள் அனைவரும் கலைந்து சென்ற பின்னர், நள்ளிரவில் அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் நிலையங்களுக்கு இழுத்து சென்று விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர்.

இந்த விவரங்கள் அனைத்தும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து எமக்கு தெரிவிக்கப்பட்ட செய்தியாகும். இதனை சில இலங்கை ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டுள்ளன.
இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இப்படிப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகள் என்று முடிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு ராணுவ செயலாளர் கோத்தபய மிரட்டியுள்ளார்.
ஆனால், ஒரு மாத காலத்திற்கும் மேலாக இப்படி கிரீஸை தடவிக் கொண்டு, தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை செய்பவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
இதிலிருந்து இந்த குற்றப் பின்னணியில் சிங்கள ராணுவமே ஈடுபட்டு வருகிறது என்பது தெரிகிறது.

இலங்கையில் போர் முடிந்து அங்கு அமைதி நிலவுவதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், அங்கு தமிழ்ப் பெண்களை குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்முறை நடத்தப்படுகிறது. இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்திய அரசு இதையெல்லாம் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடருமானால், இங்குள்ள தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு ஏற்படும். ஒவ்வொரு நாளும் ஈழத்தில் தமிழினம் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட கொடூரமான வன்முறைகளை ஐ.நா.அவையின் பார்வைக்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளிடமும் தமிழக முதல்வர் கொண்டு செல்ல வேண்டும் என்று சீமான் கூறினார்.

http://meena-tamilsexstory.blogspot.com




  • http://meena-tamilsexstory.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger