லஞ்சம், ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு கிளம்பியுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம் என நடத்து வருகின்றனர். சினிமா நட்சத்திரங்களும் தங்கள் பங்கிற்கு ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நடிகர் கமலஹாசன் அளித்துள்ள பேட்டியில், மக்களிடம் வரி மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தாற்போல், அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் லஞ்சம், ஊழல் என போகிறது. ஆனாலும் நாட்டின் மீது உள்ள பற்று காரணமாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்னை மாதிரி உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, என்று கூறியுள்ளார்.
இதேபோல ஹசாரே கைது செய்யப்பட்டதற்கு நடிகர்-நடிகைகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகை சப்னா ஆஷ்மி கூறுகையில், அன்னா ஹசாரேவையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவரது போராட்டத்துக்கு தடை விதித்தது நியாயம் அல்ல. ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது, என்றார்.
நடிகர் மாதவன் கூறும்போது, அன்னாஹசாரே போராட்டத்தை தடுத்து அவரை கைது செய்தது முட்டாள்தனமானது. அடிப்படை உரிமை மீறப்பட்டு உள்ளது, என்றார்.
நடிகை பிபாஷாபாசு கூறும்போது, ஊழல் பேயை கொல்ல போராடும் அன்னா ஹசாரேவுக்கு எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
http://tamil-shortnews.blogspot.com
http://tamil-shortnews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?