இந்தியாவுக்கு இது முக்கியமான தருணம்.சுதந்திரப்போராட்ட்த்திற்குப் பிறகுதேசம் எந்த பிரச்சினைக்காகவும் இத்தனை முக்கியத்துவம் பெற்றதில்லை.நாடு முழுக்கமக்களின் ஆதரவைப் பெற்றதில்லை.ஊழல் போல மக்களை ஆத்திரப்படுத்துவது எதுவுமில்லை.எனதுபல பதிவுகளில் இதை குறிப்பிட்டிருக்கிறேன்.
உண்மையோ,இல்லையோ ஊழல் குற்றச்சாட்டு உள்ள ஆட்சியை மக்கள் எப்போதும் விட்டுவைத்த்தில்லை.குறைந்தபட்சம் அப்போதைக்காவது அகற்றிவிடுகிறார்கள்.இதற்கு யாராவதுவருவார்கள் என்று காத்திருந்த்து போல பிடித்துக்கொண்டார்கள்.இந்தியாவில் எந்த ஒருபோராட்டமும் சந்திக்காத ஆதரவு இது.
பத்திரிகைகளின் பங்கு அதிகம்.முந்தைய உண்ணாவிரத்த்தை அடுத்துஅன்னாவைப்பற்றி பத்திரிகைகள் மக்களிடம் சிறப்பான பிம்பத்தை கொண்டு சேர்த்தன.நாடுமுழுக்க ஆதரவு பெருகி நிற்கிறது.மத்திய அரசை பல்வேறு யோசனைகளுக்கு ஆளாக்கியிருக்கவேண்டும்.கைது செய்யப்பட்டவுடன் நீர்த்துப்போகும் என்பதுதான் இவ்வளவு நாளும் நடந்தவிஷயம்.ஆனால் இப்போராட்ட்த்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதுபோலாகிவிட்ட்து.
எதிர்க்கட்சிகள்ஆதரவு தெரிவிப்பது போல காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் சில கட்சிகளுக்கு கஷ்டமாகவேஇருக்கும்.கட்சிகளைப் பொருத்தவரை மக்கள் ஆதரவு என்பது வோட்டு தொடர்பான ஒன்று.ஆதரவைவாக்குகளாக மாற்றுவது பற்றித்தான் சிந்திப்பார்கள்.கட்சி சாராமல் தனித்து இவ்வளவுஆதரவைப் பெறுவது அவர்களுக்கும் கொஞ்சம் யோசனைதான்.
ஏதோ ஒருலோக்பால் வரட்டும்.அப்புறம் திருத்திக்கொள்ளலாம்.எதுவும் இல்லாமல் இருப்பதற்கு ஏதோஒன்று இருப்பது நல்லது என்பவர்களும் இருக்கிறார்கள்.ஆனால் பலனளிக்கும் ஒன்று தேவைஎன்பதே முக்கியம் என்ற கருத்தை ஆதரிப்பவர்களே அதிகம்.அடுத்து நடக்கவிருப்பவைமுக்கியமான தருணங்கள்.
உடல் நலம்மோசமாகும் சூழலில் உண்ணாவிரதம் திசை மாறக்கூடும்.பேச்சுவார்த்தை துவங்கவாய்ப்புண்டு.மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்ற நிலையில் முன்னேற்றமானபோக்குகள் தென்பட வாய்ப்பிருக்கும்.அன்னா ஹசாரே குழு கோரும் லோக்பாலைஏற்றுக்கொண்டால் இது ஒரு முன்னுதாரணமாக ஆகிவிடும்.இந்த கலக்கம்தான் மத்தியஅரசுக்கு ஏற்பட்டுள்ள சங்கடம்.
தேசம்முழுக்க மக்களின் ஆதரவு பெற்றுவிட்ட நிலையில் அடுத்தடுத்து கோரிக்கைகள் பாயும்வாய்ப்பு அதிகம்.தேர்தல் சீர்திருத்தம்,கருப்புப்பணம் போன்றவை அடுத்துகாத்திருக்கின்றன.எப்போதும் வெளியில் இருந்து ஒரு குழு அரசை ஆட்டிவைப்பதுநினைப்பதற்கே அரசாங்கத்துக்கு கவலை தரும் ஒன்றாக இருக்கும்.ஒரே வழிதான்இருக்கிறது.நல்ல விஷயங்களைச்செய்ய அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும்.
http://meena-tamilsexstory.blogspot.com
http://meena-tamilsexstory.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?