Tuesday, 11 November 2014

ஐந்து அழகான பெண்கள் யார் ?

- 0 comments
ஐந்து அழகான பெண்கள் யார்?



நம்மூரில் ஒரு கருத்துக் கணிப்பில், நூறு ஆண்கள், பெண்களிடம் கேட்ட கேள்விகளில் இது ஒன்று. பெரும்பான்மையோர் தந்த பதில்:

நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாஸன்.

சினிமா என்றாலே அழகு, கவர்ச்சி: அழகு, கவர்ச்சி என்றாலே சினிமா என்னும் மானசீகத் தொடர்பு மக்களுக்கு இருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட், ஹாலிவுட்டிலும் இருக்கிறது: இன்றல்ல, காலம் காலமாக இருக்கிறது. அழகான பெண்கள் என்று நினைக்கும்போது, மர்லின் மன்ரோ, எலிசபெத் டைலர், ஹேமமாலினி, ரேகா, மாதுரி திட்சித், டி.ஆர். ராஜகுமாரி, பத்மினி, கே.ஆர். விஜயா, தேவிகா மற்றும் இன்றைய பல நடிகைகள்தாம் நம் கண்களின் முன்னால் வருகிறார்கள். சினிமாவுக்கும் அழகுக்கும் இருக்கும் பந்தத்தை பிசினஸ் வெற்றிக்குப் பயன்படுத்தி வருபவர்கள் லக்ஸ் சோப்.

சலவைத்தூள்

1899. இங்கிலாந்தின் லீவர் கம்பெனி, ஸன்லைட் என்னும் துணி துவைக்கும் சோப்புத் தூள் தயாரித்தார்கள். கைக்கு மிருதுவான இந்தச் சலவைத் தூள் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த வருடம், தூளின் பெயரை லக்ஸ் என்று மாற்றினார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் - லக்ஸ் என்பது லத்தீன் மொழி வார்த்தை. இதற்கு, பிரகாசமான என்று அர்த்தம். Luxury என்னும் ஆங்கில வார்த்தைக்கு, ஆடம்பரமான, சுகானுபவம் தருகிற என்னும் அர்த்தங்கள் உண்டு.

லக்ஸ் என்னும் வார்த்தையை, லத்தீன் மொழிச் சொல்லாகவும், Luxury என்னும் ஆங்கிலச் சொல்லின் சுருக்கமாகவும் எடுத்துக்கொள்ளலாம். துணிகள் துவைக்கும்போது, லக்ஸ் கைகளுக்கு மிருதுவாக இருந்தது. நறுமணம் தந்தது. இதனால், ஏராளமான பெண்கள் சலவைக்கு மட்டுமல்லாது, கை, முகம், கூந்தல் கழுவவும் லக்ஸ் தூள் உபயோகித்தார்கள்.

குளியல் சோப்

1924 இல் லீவர் கம்பெனி, லக்ஸ் விற்பனையை அதிகரிப்பதற்காகப் போட்டி ஒன்று நடத்தினார்கள். அப்போது, சலவை சோப்பாகப் பயன்படுத்துவதைவிட அதிகமாக, அழகு தரும் சோப்பாக லக்ஸ் சோப்பைப் பெண்கள் உபயோகிப்பது லீவர் கம்பெனிக்குத் தெரிந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, 1925 இல் லக்ஸ் குளியல் சோப் அறிமுகம் செய்தார்கள். லக்ஸ் என்றால், சலவைத் தூள் என்னும் பிம்பம்தான் மக்கள் மனங்களில் இருந்தது. இந்த அபிப்பிராயத்தை மாற்றி, லக்ஸ் அழகு தரும் குளியல் சோப் என்னும் பிம்பத்தை உருவாக்கவேண்டிய கட்டாயம்.

அழகு என்றால், முதலில் நினைவுக்கு வருபவர்கள் சினிமா நடிகைகள். லீவர் கம்பெனி, எலிசபெத் டைலர், மர்லின் மன்ரோ, எஸ்தர் வில்லியம்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களை விளம்பரக் களத்தில் இறக்கியது. சினிமா நட்சத்திரங்களின் அழகு தரும் சோப் லக்ஸ் என்று இவர்கள் பிரகடனம் செய்தார்கள். லக்ஸ் சலவைத் தூள் என்னும் பிம்பம் மக்கள் மனங்களிலிருந்து மறைந்தது. சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்னும் மனத் தொடர்பு பிறந்தது.

இந்தியாவில்…

1929 இல், லக்ஸ் சோப் இந்தியாவில் அறிமுகமானது. ஆரம்பத்தில், லக்ஸ், விளம்பரங்களில் ஹாலிவுட் நடிகை களைப் பயன்படுத்தியது. என்னதான் இவர்கள் கவர்ச்சியாக, பிரபலமாக இருந்தாலும், இந்திய மக்கள் இவர்களை அந்நியர்களாகத்தான் பார்த்தார்கள். எனவே, விளம்பரங்கள் அதிக வெற்றி தரவில்லை. எனவே, லீவர் கம்பெனி இந்திய நடிகைகளைப் பயன்படுத்த முடிவு செய்தார்கள்.

1940 கால கட்டம். அன்று, இந்தி சினிமாவில் முன்னணிக் கதாநாயகி நடிகை லீலா சிட்னிஸ். 1941 இல் லக்ஸ் விளம்பரத்தில் தோன்றினார். லக்ஸ் விளம்பரத்தில் வந்த முதல் இந்திய நடிகை இவர்தான். விரைவில், பிரபலமான நடிகை என்றால், லக்ஸ் விளம்பரத்தில் வந்திருக்கவேண்டும் என்னும் எண்ணம் தோன்றி விட்டது. லக்ஸ் பத்திரிகை மற்றும் திரைப்பட விளம்பரத்தில் வராத முன்னணி நடிகையே கிடையாது. ஹேமமாலினி, ரேகா, ஜெயப்ரதா, ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைஃப், தீபிகா படுகோன், பத்மினி, சாவித்திரி, காஞ்சனா, செல்வி ஜெயலலிதா, ஷ்ரேயா, அசின்.....இன்னும் பலர்.

1960, 1970 களில், சினிமாவில் புரட்சி வந்தது. பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாக்யராஜ் போன்ற இயக்குநர்கள், ஹீரோ, ஹீரோயின்களுக்கு அழகு அத்தியா வசியம் என்னும் இலக்கணத்தை உடைத்து எறிந்துவிட்டார்கள். ஹீரோயின் அழகாக இருக்கவேண்டியதில்லை, மேக்கப் தேவையில்லை என்னும் யதார்த்தம், ஹீரோயின்களைக் கனவுக் கன்னிகள் பீடத்திலிருந்து கீழே இறக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள்போல் லுக் கொண்டவர்கள் நடிகைகளாவது நடைமுறை நிஜமாகி வருகிறது.

இதற்கு ஏற்றபடி, லக்ஸ் சோப் தன் அணுகுமுறையை மாற்றி வருகிறார்கள். அழகு சோப் என்னும் அடிப்படைப் பொசிஷனிங் மாறவில்லை. ஆனால், விளம்பரங்களில் பல மாற்றங்கள். முதன் முதலாக, ஒரு நடிகர் விளம்பரத்தில் வந்தார். குளிக்கும் ஷாருக் கான், அவரைச் சுற்றி ஹேமமாலினி, கரீனா கபூர், ஸ்ரீதேவி, ஜூஹி சாவ்லா.

அண்மையில், இன்னும் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் இருவரும் சேர்ந்து வந்தார்கள். அடுத்து, சித்தார்த் சமந்தா, தனுஷ் சோனம் கபூர்..

இந்த விளம்பரங்களைக் கவனமாகப் பாருங்கள். சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்னும் பொசிஷனிங் மாறவில்லை. நடிகைகளோடு, நடிகர்களும் வருகிறார்கள். அவ்வளவுதான். ஆண்டாண்டு காலமாகத் தொடர் வெற்றி கண்டுவரும் பொசிஷனிங் பார்முலாவை ஏன் மாற்றவேண்டும்?


Keywords: பொசிஷனிங், விளம்பரம், வியாபார தந்திரம், லக்ஸ் சோப், சோப்பு விளம்பரம், அழகான பெண்கள், சலவைத் தூள்

[Continue reading...]

Sunday, 9 November 2014

அஜித், பிரபு, நெப்போலியன் இவங்களைத்தான் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்

- 0 comments


திரையில் எல்லா நடிகர், நடிகைகளுக்கும் வெளிச்சம் தரும் லைட்மேன்களின் 'வாழ்க்கை'யோ இன்றுவரை இருட்டில் தான் உள்ளது.

"இன்னைக்கு தேதிக்கு எங்களுக்கு ஒரு கால்ஷீட்டுக்கு 550 ரூபாய் தான் சம்பளம். ஒரு கால்ஷீட்டுன்னா 8 மணி நேரம் வேலை இல்லை. 16 மணி நேரம் கூட ஆகும். அந்த சம்பளத்தை வெச்சுக்கிட்டு என்னால ஒரு டிவிஎஸ் 50 கூட வாங்க முடியல. வேலைக்கு சைக்கிள்ல தான் போயிக்கிட்டு இருக்கேன்.

வெளியில இருந்து பார்க்கிறப்போ சினிமாவுல எல்லாருமே கோடிக்கணக்குல சம்பாதிக்கிற மாதிரி ஒரு தோற்றம் இருக்கு. ஆனால் எங்க லைட்மேன்களோட வாழ்க்கையோ இன்னைக்கு வரைக்கும் இருட்டாத்தான் இருக்கு" என்கிறார் 25 வருடங்களுக்கும் மேல இந்த வேலையைச் செய்து வரும் ஒரு லைட்மேன். அவர்களின் நிஜ வாழ்க்கையின் வறுமைச் சூழலை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் படம் தான் 'கண்ணாடி பொம்மைகள்'.

குணா என்ற கிராமத்து இளைஞன் "தெருக்கூத்து" நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு சினிமாவில் நடிக்க ஆசை வருகிறது. புதிதாக கல்யாணமான அவன், தன் மனைவியுடன் சென்னைக்கு வருகிறான். கதிர் என்ற லைட்மேன் அவனுக்கு வழிகாட்டுகிறார். நடிக்கும் வாய்ப்பு அவனுக்கு எங்கும் கிடைக்கவில்லை. நாயாய் பேயாய் அலைந்து, வெறுத்துப் போய், நடிகனாகும் முயற்சியை கைவிட்டு, லைட்மேன் வேலையில் சேருகிறான்.

எனினும், அவனுக்குள் உள்ள நடிப்பு தாகம் குறையவில்லை. 'ராஜா ராணி' என்ற பழைய படத்துக்கு மு.கருணாநிதி எழுதிய 5 நிமிட வசனத்தைப் பேசி, தன் நடிப்பு தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறான். அதோடு முடிகிறது கதை.

படத்தின் முடிவில் நான்கு லைட்மேன்களின் நிஜ அனுபவத்தையும் படம்பிடித்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் நீங்கள் முதலில் படித்தது.

எல்லா ஹீரோக்களும் காலையில ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த உடனே உங்களால தான் நாங்க ஸ்க்ரீன்ல பளிச்சின்னு தெரியுறோம். நீங்க இல்லேன்னா நாங்க இல்லேன்னு ஆசையாப் பேசுவாங்க. சாயங்காலம் ஷூட்டிங் முடிஞ்ச உடனே எதுவுமே தெரியாதது மாதிரி போயிடுவாங்க.

96-ல் சினிமாவுல பெரிய அளவுல ஸ்ட்ரைக் வந்துச்சு. அப்போ ரொம்பக் கஷ்டப்பட்டோம். ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட சிரமமா இருந்துச்சு. ஒரு லைட்மேன் மனைவியோட தாலியைக்கூட விக்க வேண்டிய மோசமான சூழல். அந்த நேரத்துல அஜித் தான் எங்க லைட்மேன் குடும்பங்களுக்கு அரிசி, பருப்புன்னு சாப்பாட்டுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செஞ்சார்.

நடிகர்கள்லேயே பிரபு, நெப்போலியன், அஜித் இவங்களைத்தான் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்கள எப்பவுமே எங்ககிட்ட அன்பாப் பேசுவாங்க.., சகஜமாகப் பழகுவாங்க. இந்த மாதிரி எங்ககிட்ட பேசினாலே, பழகினாலா போதும், எங்க மனசு மட்டுமில்ல, வயிறும் கூட நெறைஞ்சிரும் என்கிறது ஒரு லைட்மேனின் குரல்.

அது அவருடைய குரல் மட்டுமில்லை, சினிமா ஆசையில் ஊரை விட்டு ஓடி வந்து இன்று வரை ஜெயிப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் அத்தனை பேருடைய குரலாகத்தான் பார்க்க முடிந்தது.
[Continue reading...]

அஜீத் மகள் அனோஷ்கா பள்ளியின் விழாவில் Ajith at daughter school function

- 0 comments


​தமிழ்நாட்டின் டாப் மோஸ்ட் சென்ஷேசனல் விஐபி அஜீத். அவர் பேசாவிட்டாலும் அவரைப் பற்றியும், அவரது படத்தை பற்றியும் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னை அறிந்தால் படம் எப்போது வரும் என்று எல்லோரும் பரபரத்து கிடக்கிறார்கள். அடுத்த படத்துக்கு கால்ஷீட் தருவாரா என்று கோடிக்கணக்கான பணத்தை மடியில் கட்டிக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அவர் முகத்தை ஒருமுறையாவது பார்த்து விட மாட்டோமா என்று நித்தம் தவமிருக்கும் ரசிகர்கள். இத்தனைக்கும் நடுவில் ஒரு தந்தையாக தன் பங்கை சரியாக செய்திருக்கிறார் அஜீத். சுமாரான வேலையில் இருந்து கொண்டு சில ஆயிரம் சம்பாதிப்பவர்கள்கூட பெற்ற மகளை கவனிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மகளின் பள்ளி விழாவா, ஸ்கூல் அட்மிஷனா, ஹெச் எம்மை பார்க்க வேண்டுமா எல்லாவற்றுக்கும் செல்வது அம்மாதான். தவிர்க்க முடியாத நிலையில் மட்டுமே அப்பா செல்வார். ஆனால் அஜீத் தன் மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளியின் ஒரு சிறிய விழாவில் மகளுக்காக ஒரு நாள் முழுவதும் செலவழித்திருக்கிறார். அதோடு தன் மகளையும், மகளின் தோழிகளையும் ஒரு போட்டோகிராபராக மாறி படம் எடுத்திருக்கிறார். ஒரு டாப் ஹீரோ என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் அந்த பள்ளி காம்பவுண்டுக்குள் ஒரு தந்தையாக இருந்து தன் மகளை ரசித்திருக்கிறார் அஜீத்.  அந்த பள்ளிக்கு வந்த மற்ற குழந்தைகளின் பெற்றோர்களும். அஜீத்தை ஒரு பெரிய ஸ்டாராக பார்க்காமல் சக தந்தையாகவே பார்த்திருப்பதும் ஆச்சர்யம். 
[Continue reading...]

Saturday, 8 November 2014

கோக் விளம்பரத்தில் இனி நடிக்க மாட்டேன் Actor Vijay Twitter replay

- 0 comments



கத்தி திரைப்படத்தில் கோலா கம்பெனிகளை எதிர்த்து, நிஜத்தில் கோலா விளம்பரத்தில் நடித்தது பற்றி ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் விஜய் பதிலளித்துள்ளார்.

விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளமான Vijay_cjv பக்கத்தில் விஜய், ரசிகர்களின் கேள்விக்கு சனிக்கிழமை மாலை 4 மணிக்கு பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். இதோ, ட்விட்டர் தளத்தில் விஜய்யிடம் ரசிகர்கள் எழுப்பிய சில சுவாரசியமான கேள்விகளும், பதில்களும்..

கேள்வி: புதுமுக இயக்குநர்களுக்கு நீங்கள் ஏன் வாய்ப்பு அளிப்பதில்லை?

பதில்: இது வரை நடித்துள்ள 58 படங்களில், 28 படங்கள் புதுமுக இயக்குநர்கள் தான். ஒ.கே வா அண்ணா ?

கேள்வி: 'கத்தி' படம் கொடுத்தமைக்கு நன்றி. அனிருத்துடன் பணியாற்றியது குறித்து?

பதில்: சின்ன வயது. நிறைய ஆற்றல்.

கேள்வி: தலைவா.. நம்ம பயந்து ஒதுக்கிறோமா இல்ல பாய பதுங்குறோமா?

பதில்: பயமும் இல்லை பதுங்கவும் இல்லை. அனுபவம் தேடுகிறோம். அவ்வளவு தான்.

கேள்வி: சமீபகாலமாக உங்களது படங்களை வைத்து பலர் பிரச்சினைகளை எழுப்பும்போது உங்கள் மனதில் என்ன ஓடும்?

பதில்: இதில் என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. ஒவ்வொரு படத்திற்காகவும் அதன் பின்னணியில் உழைக்கும் மக்களுக்காக வருந்துவேன்.

கேள்வி: இன்னும் 10 வருடங்களில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: கடவுள் எழுதிய எனது வாழ்க்கை புத்தகத்தில் நம்பிக்கை இருக்கிறது. புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது. எல்லா பக்கத்தையும் சந்தோஷமாக கடக்கிறேன். என்ன நடக்கும் என்று என்னால் கூற முடியாது. பலனை எதிர்பார்க்காமல் என்னுடைய கடமையைச் சரியாக செய்ய ஆசைப்படுகிறேன்.

கேள்வி: பணம், புகழ் என அனைத்திலும் வெற்றி. அடுத்தது என்ன?

பதில்: திருப்பி கொடுப்பது. நீங்கள் கொடுத்த இந்த அதிகமான அன்புக்கு நான் என்னால் முடிந்ததை எல்லாம் திருப்பி கொடுக்க வேண்டும். கொடுப்பேன்.

கேள்வி: சமீபத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?

பதில்: ஜிகர்தண்டா மற்றும் த்ரிஷ்யம்.

கேள்வி: இணையத்தில் ரசிகர்களின் சண்டைகள் அதிகரிக்கிறது. உங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறுங்கள்

பதில்: ஆம். இது துரதிஷ்டவசமானது. இம்மாதிரி சண்டையில் ஈடுபடுவதை விடுத்து, சமூக பிரச்சினைகளில் கவனம் செலுத்தி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று எனது ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: உங்களது ரசிகர்கள் குறித்து?

பதில்: வெற்றியில் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல. தோல்வியில் என்னை தட்டிக் கொடுத்தவர்கள் என் ரசிகர்கள். நடிகன் - ரசிகன் தாண்டிய உறவு எங்களுடையது.

கேள்வி: நிறைய பிரச்சினைகள் இருந்தும் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். எப்படி இந்த சக்தி?

பதில்: அமைதி தான் எப்போதுமே பெரிய சக்தி.

கேள்வி: உங்களது ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: உழைத்திடு.. உயர்ந்திடு.. உன்னால் முடியும்.

கேள்வி: உங்களது எதிர்ப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: எதிரியையும் நேசிப்போம். நான் அவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கேள்வி: முதலில் கோக் விளம்பரத்தில் நடித்தீர்கள். தற்போது அதற்கு எதிராக 'கத்தி' படத்தில் நடித்துள்ளீர்கள். ஏன் இந்த எதிர்மறை?

பதில்: மக்கள் இதே போல அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்ளும்போதும் கேள்வி எழுப்பினால் நான் மகிழ்வேன். ஆம், நான் இதற்கு முன் அந்த விளம்பரத்தில் நடித்தேன். சச்சின், ஆமிர்கான் போன்ற மிகப்பெரிய பிரபலங்களும் நடித்துள்ளனர். ஆனால் நான் தற்போது அந்த பிராண்டை விளம்பரப்படுத்துவதில்லை. கத்தி கதையைக் கேட்ட போது அதன் கருத்து எனக்குப் பிடித்திருந்தது. அதை ஜீவா கதாபாத்திரம் வழியாகப் பேசியுள்ளேன்.

கேள்வி: சூப்பர் ஸ்டார் தலைப்பு பிடித்திருக்கிறதா... இளைய தளபதி தலைப்பு பிடித்திருக்கிறதா...

பதில்: நான் நடிக்க ஆரம்பித்தவுடன் மக்களுக்கு என்னை பிடித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். தற்போது நான் எதிர்பார்த்தை விட மேலாக உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. உங்களுடைய இந்த அன்பிற்கு முன்னால் எனக்கு எந்தவொரு தலைப்பும் பெரிதாகத் தெரியவில்லை.

மேலும் சினிமா தகவல்களுக்கு...
Keywords: விஜய், கேள்வி பதில், சர்ச்சை, கத்தி சர்ச்சை, ரசிகர் கேள்வி, நடிகர் விஜய்
Topics: சினிமா, சர்ச்சை, தமிழ் சினிமா, நடிகர்கள்

[Continue reading...]

Friday, 7 November 2014

வைகுண்டராஜன் கைதாகும் சூழ்நிலை V.V. Mineral director Vaikundarajan

- 0 comments


தூத்துக்குடி துறைமுகக் கழக முன்னாள் தலைவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது தாதுமணல் ஏற்றுமதி தொழிலதிபர் வைகுண்டராஜன், மற்றும் ஜெகதீசன் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி துறைமுகக் கழக முன்னாள் தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஏ.சுப்பையா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.8.23 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கில் விவி மினரல்ஸ் பங்குதாரர்கள் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோர் 6, 7-வது எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். 

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன், சிபிஐ ஆய்வாளரின் பதில் மனுவைத் தாக்கல் செய்தார் அதில், "தூத்துக்குடி துறைமுகக் கழக முன்னாள் தலைவர் ஏ.சுப்பையா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ போலீஸார் 2012 டிச. 24-ல் வழக்கு பதிவு செய்தனர். இவர் 2007 முதல் 2012 வரை துறைமுகக் கழக தலைவராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8.23 கோடி சொத்து சேர்த்துள்ளார்.

சுப்பையா மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததில் விவி மினரல்ஸ் பங்குதாரர்கள் வைகுண்டராஜன், அவரது தம்பி ஜெகதீசன் ஆகியோருக்கும் பங்கு உண்டு. சுப்பையாவின் தாயார் ஜானகி, சகோதரர் ஜெயராமன் ஆகியோருக்கு காஞ்சிபுரம் தனியார் வங்கி கிளையில் உள்ள கணக்கில் வைகுண்டராஜன், ஜெகதீசன் இருவரும் 2008 நவம்பர் முதல் 2011 நவம்பர் வரை ரூ.7.5 கோடி செலுத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் துறைமுகத்தில் தொழில் நடத்தி வருகின்றனர். அப்போது சுப்பையா துறைமுகக் கழக தலைவராக இருந்துள்ளார்.

இந்த பணத்தை விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம் கிராமத்தில் ஜானகி, ஜெயராமன் ஆகியோர் பெயரிலுள்ள சொத்தை வாங்குவதற்கு கொடுத்ததாக இருவரும் கூறியுள்ளனர். ஆனால், கரிசல்குளத்தில் சொத்தின் மதிப்பு ரூ.7.5 கோடி அளவுக்கு இல்லை. லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதற்காக சொத்தின் மதிப்பை அதிகமாக காட்டி வங்கி பரிவர்த்தனை மூலம் லஞ்சப் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளனர்.

பின்னர், சம்பந்தப்பட்ட சொத்தை வாங்கியதில் இரு தரப்பிலும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களாகவே தீர்ப்பாயம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த தீர்ப்பாயத்தில் பிரச்சினையை பேசி, சொத்து வாங்கியதற்காக கொடுத்த பணம் ரூ.7.5 கோடியை திரும்ப பெற்றதாகவும் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர். லஞ்சமாக பணம் கொடுத்ததை மறைக்க இவ்வாறு மோசடி செய்துள்ளனர்.

இதனால் வைகுண்டராஜன், ஜெகதீசன் இருவரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் தாங்கள் நேர்மையாக செயல் பட்டதாகக் கூறிக்கொண்டு லஞ்சம் கொடுத்துள்ளனர். இருவருக்கும் எதிராக முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. இருவரும் செல்வாக்கு மிக்கவர்கள். முன்ஜாமீன் வழங்கினால் ஆவணங்கள், ஆதாரங்களை அழிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது" எனக் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை இன்று நீதிபதி சொக்கலிங்கம் தள்ளுபடி செய்தார்.

Keywords: வைகுண்டராஜன், முன் ஜாமீன் மனு தள்ளுபடி, தாதுமணல், மதுரை, உயர் நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கு

[Continue reading...]

வக்கார் பந்தில் வாங்கிய அடி - சச்சின் சுயசரிதை Sachin Playhing It My Way

- 0 comments


தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் முதல் டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடிய சச்சின் டெண்டுல்கர் இந்தியா-பாகிஸ்தான் தொடர் என்றால் என்ன என்பதை அறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அவரது சுயசரிதை நூலில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்தத் தொடரில் தாடி வைத்த பாகிஸ்தானியர் ஒருவர் மைதானத்தில் இறங்கி கபில்தேவ், கேப்டன் ஸ்ரீகாந்த், மனோஜ் பிரபாகர் ஆகியோரை வசைபாடியது பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் வக்கார் யூனிஸ் பந்தில் மூக்கில் அடிபட்ட தருணம் எப்படிப்பட்டது என்பதையும் வர்ணித்துள்ளார்.

இனி சச்சின்...

"அது ஒரு அக்னி பரிட்சை. வாசிம், வக்கார் பந்து வீச்சிற்கு எதிராக நான் ஒன்றும் புரியாமல் இருந்த சமயம். நான் எனது பேட்டிங் திறமையை சந்தேகித்தேன், சர்வதேச தரத்திற்கு என்னால் உயரமுடியுமா என்ற சந்தேகம் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது.

என்னுடைய அறிமுகப் போட்டியின் முக்கியத்துவம் என்னவெனில் பாகிஸ்தானில் அவர்களது சிறந்த பந்து வீச்சாளர்களான இம்ரான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அகிப் ஜாவேத், அப்துல் காதிர் ஆகியோரை எதிர்கொண்டதே. 

எனது அறிமுக டெஸ்ட் போட்டியில் வாசிம் அக்ரம் வீசிய ஓவரின் 3வது பந்தில் நான் ஸ்ட்ரைக்கிற்கு வந்தேன். அது ஒரு பயங்கர பவுன்சர். வாசிம் அக்ரம் பந்து வீச்சை ஓரளவுக்குக் கணித்திருந்த நான் அடுத்த பந்து பயங்கர யார்க்கராக இருக்கலாம் என்று நினைத்தேன். அதற்குத் தயாராகவும் இருந்தேன். ஆனால் அந்த ஓவர் முழுதையும் பவுன்சர்களாகவே வீசினார் வாசிம்" என்று எழுதியுள்ளார் சச்சின்.

சியால்கோட் டெஸ்ட் போட்டியில் வக்கார் யூனிஸ் பவுன்சரில் அடி வாங்கியது பற்றி அவர் எழுதுகையில், "வக்கார் பந்து வீச வந்த போது நான் ஒரு ரன் எடுத்திருந்தேன். வக்கார் ஒரு ஷாட் பிட்ச் பந்தை வீசினார். நான் பந்தின் பவுன்சை தவறாகக் கணித்தேன். நான் எதிர்பார்த்ததை விட 6 அங்குலம் அதிகமாக பந்து எழும்பியது. அது ஹெல்மெட்டின் முனையில் பட்டு என் மூக்கைப் பதம் பார்த்தது.

என்னுடைய பார்வை மங்கத் தொடங்கியது. எனது தலை கனக்கத் தொடங்கியது. அடிபட்டவுடன் எனது உடனடி எதிர்வினை பந்து எங்கு சென்றது என்பதைப் பார்ப்பதாகவே இருந்தது. அதன் பிறகுதான் கவனித்தேன் மூக்கிலிருந்து ரத்தம் சட்டையில் வழிந்திருந்தது. 

அடிபட்டதிலிருந்து மெதுவே மீள நினைத்த போது ஜாவேத் மியாண்டட் கூறிய கமெண்ட் என்னை ஆச்சரியப்படுத்தியது, "நீ மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், உன் மூக்கு உடைந்து விட்டது" என்றார். எனது இந்த நிலையில் என்னைப் பற்றி பார்வையாளர்கள் வைத்திருந்த பேனர் என்னை மேலும் அசவுகரியப்படுத்தியது. "குழந்தை! நீ வீட்டுக்கு போய் பால் குடி" என்று அந்த பேனரில் எழுதியிருந்தது" என்று நினைவு கூர்ந்துள்ளார் சச்சின்.

அதன் பிறகுதான் அவரை திடுக்கிட வைத்த சம்பவம் பற்றி அவர் எழுதியுள்ளார்:

சர்வதேச கிரிக்கெட்டில் எனது முதல் நாளில் நாடகத்திற்குக் குறைவில்லை. குறிப்பாக ஒரு சம்பவம் என்னை சங்கடப்படுத்தியது. உணவு இடைவேளைக்குப் பிறகு தாடி வைத்துக் கொண்டு சல்வார் கமீஸில் மைதானத்திற்குள் புகுந்த ஒரு ரசிகர், நேராக கபில்தேவிடம் சென்று பாகிஸ்தானில் அவர் இருப்பதற்காக வசைச்சொற்களைப் பயன்படுத்தினார். 

கபில்தேவை வசைபாடிய பிறகு மிட் ஆஃப் திசையில் மனோஜ் பிரபாகரிடம் சென்று சிலபல வசைச்சொற்களைப் பயன்படுத்தினார். பிறகு நேராக கேப்டன் ஸ்ரீகாந்திடம் சென்ற அந்த நபர் அவருடன் கைகலப்பில் ஈடுபட்டார். 

நான் பாயிண்ட் திசையில் பீல்ட் செய்து கொண்டிருந்தேன், அடுத்து நான் என்ற பீதி என்னைத் தொற்றிக்கொண்டது. அவர் என்னிடம் வந்தால் ஓய்வறை நோக்கி ஓட ஆயத்தமானேன். உண்மை என்னவெனில், இரு நாடுகளுக்கு இடையிலும் கிரிக்கெட் ஆட்டத்தைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பதே" இவ்வாறு சச்சின் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

Keywords: சச்சின் சுயசரிதை, முதல் டெஸ்ட், இந்தியா-பாகிஸ்தான் 1989, பிளேயிங் இட் மை வே, Playhing It My Way, Sachin's Autobiography, cricket, India-pak series 1989, debuy series

[Continue reading...]

ஆணாதிக்கம் போல பெண்ணாதிக்கம் என்றும் ஒன்று இருக்கிறது

- 0 comments


​"ஆணாதிக்கம் என்று ஒன்று இருப்பதைப்போல பெண்ணாதிக்கம் என்றும் ஒன்று இருக்கிறது... ஆனால், அதைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசுவதில்லை" என்று நண்பர் ஒருவர் வருத்தப்பட்டுக்கொண்டார்.

காலங்காலமாகப் பெண்களை அடிமைப்படுத்தியும் அவர்கள் சுதந்திரத்தை முடக்கியும் கட்டுப்படுத்தியும் வந்துள்ள ஆண் சமூகம் பெண்ணாதிக்கம் சொல்லைப் பயன்படுத்துவது எவ்வளவு குரூரமானது என்னும் கேள்வி என்னுள் எழுந்தாலும் நண்பர் என்ன சொல்லவருகிறார் என்று புரிந்துகொள்ள முயன்றேன்.

"இங்கு ஆதிக்கம் செலுத்துவதில், தவறுகள் செய்வதில் ஆண்/பெண் என்கிற பாகுபாடு இல்லாமல் பரஸ்பரம் சளைக்காமல் செய்கிறார்களே. கணவனும் மாமியாரும் சேர்ந்து மனைவியைக் கொடுமைப்படுத்தும் இதே ஊரில்தானே பொய்யான வரதட்சணைக் கொடுமை வழக்கில் கணவனையும் வயதான பெற்றோரையும் சிறையில் தள்ளுகிறார்கள். இதுபெண்ணாதிக்கம் இல்லையா?" என்று கேட்டார் நண்பர்.

பெண்ணின் அடிப்படையான தகுதி, உரிமைகள், சமூகத்திலும் குடும்பத்திலும் அவளுடைய இடம், பங்களிப்பு ஆகிய எல்லா அம்சங்களிலும் ஆணுக்கு இரண்டாம்பட்சமான நிலையில் பெண்ணை வைத்துவந்த சமூகம் ஆண் சமூகம். ஆணே மேலான நிலையில் இருக்குமாறு இங்கே அனைத்து விதிகளும் சூழலும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சமயம், சம்பிரதாயம், நெறிமுறைகள், சட்டங்கள் என யாவுமே ஆணை ஒரு படி தூக்கியே வைத்திருக்கின்றன. மத நூல்கள், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், பழமொழிகள், சட்ட நூல்கள் எனப் பல அம்சங்களை மேற்கோள் காட்டி இதை நிரூபிக்க முடியும்.

இப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ள சமூகத்தில் வளரும் பெண்ணும் இதே மனநிலையைக் கைக்கொண்டு சக பெண்களுக்கு எதிராகச் செயல்படுவதும் உண்டு. இதையும் ஆண்மையச் சிந்தனை, ஆணாதிக்கப் போக்கின் விளைவு என்றுதான் பார்க்க வேண்டும். அதுபோலவே, அதிகாரம் கைக்குக் கிடைத்ததும் சில பெண்கள் மோசமாக நடந்துகொள்வது பொதுவாக மனித சுபாவத்தில் உள்ள பிரச்சினையே தவிர அதுவும் பெண்ணாதிக்கம், பெண்ணின் பிரத்யேகமான குறை என்று சொல்லிவிட முடியாது.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளில் சில சமயம் பெண்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதுதான் நண்பரின் வாதம். ஆனால் ஆணாதிக்கம் என்பதற்கு இணையான பெண்ணாதிக்கம் என்னும் சொல்லை அவர் பயன்படுத்துகிறார். பெண்களை இரண்டாந்தர மனிதர்களாக நடத்துவதற்குக் காரணமான ஒரு அணுகுமுறை ஆணாதிக்கச் சிந்தனை. போக்கிற்கு ஒப்பான ஒரு சொல்லைப் பெண்களின் குறைகளைச் சுட்டப் பயன்படுத்தக் கூடாது என்பதை அவருக்குப் புரியவைக்க முயன்றேன்.

எல்லா விதங்களிலும் பாதிப்பு

இங்கு குடும்ப வன்முறை தொடங்கி சமூக வன்முறை வரை உடல்ரீதியாக, மனரீதியாக ஆண்களைவிட பெண்களே எல்லா விதங்களிலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வீடுகளிலும் பொது வெளியிலும் இருக்கும் நுட்பமான ஒடுக்குமுறைகள் ஒருபுறம் இருக்கட்டும். வேலைக்குச் செல்வதால் வீட்டிலும் அலுவலகத்திலுமாக இரட்டிப்பு வேலைச் சுமையைத் தாங்கும் நெருக்கடி இருக்கட்டும். பணியிடத்தில் சுமக்க நேரிடும் பழிபாவங்களும் சக ஊழியர்களான ஆண்களால் ஏற்படும் நேரடியானதும் மறைமுகமானதுமான பாலியல் தொல்லைகள் இருக்கட்டும். வெளிப்படையான சம்பவங்களைப் பார்த்தாலே பெண்களின் நிலையைப் புரிந்துகொள்ளலாம்.

ஆசிட் வீச்சு சம்பவங்களையே எடுத்துக்கொள்வோம். எவ்வளவு எழுதினாலும், கதறினாலும் ஆசிட் வீச்சுகள் தொடர்ந்துகொண்டேதானே இருக்கின்றன. பெண்களின் முகங்களில்தானே தொடர்ந்து ஆசிட் வீசுகிறார்கள். கத்தியால் குத்திக் கொலை செய்வதைவிடக் கொடூரமானது ஆசிட் வீச்சு. சமீபத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட சுபா என்னும் பெண்ணிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது. "கோபம் இருந்துச்சுன்னா வேற ஏதாச்சும் செஞ்சிருக்கலாமில்லைங்ணா" என்று அவர் கேட்டபோது தலை குனிவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு பெண்ணின் மீது விசப்படும் ஆசிட் அவள் உடல் மீது மட்டும் வீசப்படுவது அல்ல. அது அவளது தன்மானத்தின் மீது, தன்னம்பிக்கையின் மீது, சுயத்தின் மீது வீசப்படுவது. ஒரு பெண்ணை இதுபோல வேறு எப்படியும் அதிகபட்சமாக அவமானப்படுத்த முடியாது. அவள் ஆயுள் முழுவதும் தனது முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் வேதனைப்பட வேண்டும்; மறந்தும் கசப்பை மறந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டுச் செய்யும் குரோதத்தின் உச்சம் இது.

இதுபோல இன்னும் வகைப்படுத்தலாம். 'வாச்சாத்தி' தண்டனை அறிவிக்கப்பட்ட பின்பும் உடுமலை காவல் நிலையத்தில் அத்துமீறல் நடந்திருக்கிறதே. அத்துமீறல் நடக்கவில்லை என்று காவல் துறையினர் சொன்னாலும், அங்கு ஒரு பெண்ணுக்குரிய காவல் துறையின் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதானே. அத்துமீறல் நடக்கவில்லை என்பதை எப்படி நம்புவது?

உண்மையில் பெண்ணைப் 'பெண்'என்று தனி இனமாக பிரித்து, அனுதாபம்/ ஆதிக்கம்/ பாசம்/ வெறுப்பு இப்படி எதையுமே மிகையாகச் செலுத்துவதுமே தவறுதான். இதன் நீட்சிதான் காதல் விவகாரங்களிலும் எதிரொலிக்கிறது. பெண் என்றால் தேவதை /தெய்வம் என்று கற்பிதம் செய்துகொண்டு அளவுக்கு அதிகமாக அவர்களை நேசித்து, அளவுக்கு அதிகமாக அவர்களிடம் எதிர்பார்த்து, ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணும் ஒரு சராசரி மனுஷிதான் என்பதை உணரும்போது உடைந்து, பின்பு அவளை துரோகியாக, சாத்தானாகச் சித்தரிப்பது காதலில் வழக்கமாகிவிட்டது. பெண்களை ஆண்கள் ஏமாற்றுகிறார்கள்.

அதேபோல் பெண்களும் ஆண்களை ஏமாற்றுகிறார்கள். இதற்கான காரணங்கள் தனிநபர்களின் பலவீனம், சுயநலம், மேம்போக்கான உணர்வுகள், சூழல் எனப் பல விதமாக இருக்கலாம். காரணத்தைப் புரிந்துகொண்டு மதிப்பிடுவதே யதார்த்தமாக இருக்கும். அதை விட்டுவிட்டு "இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்" என்று சொல்லும் ஆணின் குரல்தான் ஆசிட் வீச்சாகப் பரிணமிக்கிறது.

நம் சமூகத்தில் பெண்ணியவாதிகள் என்கிற ஒரு குழு உருவானதே ஆண்களுக்கு அவமானம். உண்மையில் பெண்களை உயர்த்தியோ, ஒதுக்கியோ வைக்காமல் அவர்களை சக மனுஷியாக மதிப்பதே ஆண்கள் அவர்களுக்குச் செய்யும் பெரும் புண்ணியமாக இருக்கும். இந்த அணுகுமுறை இருந்தால் 'பெண் உரிமை' என்று தனியாகப் பேச வேண்டிய அவசியம் இருக்காது.

Keywords: பார்வை, பெண்ணாதிக்கம், ஆண்கள் அவதி, பெண்கள் தவறு, சமநிலை, சமூகம், சம உரிமை, பெண்ணுரிமை
Topics: பெண்கள்

[Continue reading...]

Thursday, 6 November 2014

சச்சின் இழந்த இரட்டைசதம் Playing It My Way

- 0 comments



சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையில் வெளிப்படையாக சில உள்-விவரங்களைப் பதிவு செய்துள்ளார். அதில் ஒன்றுதான் பாகிஸ்தானுக்கு எதிராக முல்டான் டெஸ்ட்டில் சச்சின் 194 ரன்களில் இருந்த போது கேப்டன் திராவிட் டிக்ளேர் செய்த விவகாரமும். அதுபற்றியும் தனது கோபத்தை சச்சின் சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

இரட்டைச் சதம் எடுக்க 6 ரன்கள் இருந்த போது ராகுல் திராவிட் டிக்ளேர் செய்த அந்த சம்பவம் பற்றி தனது மன உணர்வுகளைப் பற்றி சச்சின் எழுதியிருப்பதாவது:

"அந்த டிக்ளேருக்குப் பிறகு நான் ராகுலிடம் தெரிவித்தேன், களத்தில் எனது ஈடுபாட்டை அவரது முடிவு குறைக்காது, ஆனால் களத்திற்கு வெளியே நான் தனியாக இருக்க விரும்புவதாக அவரிடம் தெரிவித்தேன்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, நானும், ராகுல் திராவிடும் தொடர்ந்து சிறந்த நண்பர்களாகவே இருந்தோம். எங்கள் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வரும் வரையில் கூட எங்களிடையே நல்ல தோழமை உணர்வு நீடித்தது. களத்தில் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தோம். கிரிக்கெட்டோ, நட்போ பாதிக்காத வகையில் நாங்கள் அந்த சம்பவத்தைக் கையாண்டோம்.

அன்றைய தினம் முல்டான் டெஸ்ட் போட்டியில், கங்குலி முதுகு காயம் காரணமாக ஆடவில்லை என்பதால் திராவிட் பதிலி கேப்டனாக இருந்தார். தேநீர் இடைவேளையின் போது நான், ஜான் ரைட் மற்றும் திராவிடிடம் திட்டம் என்னவென்று கேட்டேன். அப்போது பாகிஸ்தானிடம் ஒரு மணிநேரம் பேட்டிங்கை அளிக்கவுள்ளோம் என்றனர். அதாவது 2ஆம் நாள் இறுதியில் 15 ஓவர்கள் வரை பாகிஸ்தானை பேட் செய்ய வைக்கப்போகிறோம் என்றனர். நான் அதனை மனதில் வைத்து தேநீர் இடைவேளைக்குப் பிறகு களத்தில் சென்று ஆடினேன். 

ஆனால், ஆடிக்கொண்டிருக்கும் போது அரை மணி நேரம் கழித்து பதிலி வீரர் ரொமேஷ் பொவார் என்னிடம் வந்து ரன் விகிதத்தை அதிகரிக்குமாறு கூறியதாக தெரிவித்தார். நான் கூட அவரிடம், எனக்கும் அது தெரியும், கள அமைப்பில் வீரர்கள் தூரத்தில் நிற்கின்றனர், இப்படிப்பட்ட கள அமைப்பில் நாம் அதிகமாக ரன் விகிதத்தை ஏற்றுவது கடினம் என்றேன். 

சிறிது நேரம் சென்ற பிறகு நான் 194 ரன்களில் இருந்த போது ரொமேஷ் பொவார் மீண்டும் வந்து, அந்த ஓவரிலேயே நான் இரட்டைச் சதத்தை எடுக்க வேண்டும், ஏனெனில் ராகுல் திராவிட் டிக்ளேர் செய்ய முடிவெடுத்துள்ளார் என்றார். நான் சற்றே அதிர்ந்தேன், ஏனெனில் என் கணக்குப் படி இன்னும் 2 ஓவர்கள் இருக்கிறது அதற்குள் நான் இரட்டைச் சதம் எடுத்து விடலாம் என்றே நினைத்திருந்தேன். 

ஆனால் பொவார் குறிப்பிட்ட அந்த ஓவரில் ஒரு பந்தைக் கூட நான் எதிர்கொள்ள முடியவில்லை. காரணம், இம்ரான் பராத் வீசினார், யுவ்ராஜ் முதல் 2 பந்தை தடுத்தாடினார். 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். 4வது பந்தை தடுத்தாடினார். அடுத்த பந்தில் அவுட் ஆனார்.

அடுத்த பேட்ஸ்மென் பார்த்திவ் படேல் களமிறங்கத் தயாராகி வந்து கொண்டிருக்கும் போது ராகுல் திராவிட் டிக்ளேர் என்றார் நாங்கள் பெவிலியன் திரும்பினோம். ஆனால் 16 ஓவர்கள் மீதமிருந்தன. தேநீர் இடைவேளைக்கு முன் பேசியதோ 15 ஓவர்கள்தான், ஆனால் ஒரு ஓவருக்கு முன்னதாகவே டிக்ளேர் செய்தனர்.

நான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன். ஏனெனில் இது அர்த்தமற்ற செயல், இது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் மட்டுமே. கடந்த தொடரில் சிட்னியில் அமைந்தது போல் 4ஆம் நாள் அல்ல. 

கடும் ஏமாற்றமடைந்த நான் ஓய்வறையில் ஹெல்மெட் மற்றும் பேட்டை தூக்கி எறிவேன் என்று சக வீரர்கள் நினைத்தனர். ஆனால் என் வழி அதுவல்ல. ஆனால் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

நான் பயிற்சியாளர் ஜான் ரைட்டிடம் அமைதியாகக் கூறினேன் பீல்டிங்கிற்குச் செல்லும் முன் கொஞ்சம் அவகாசம் வேண்டும் ஏனெனில் நீண்ட நேரம் பேட் செய்ததால் இறுக்கமாக உள்ளது என்றேன். ஆனால் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தேன். 

நான் பாத்ரூமில் முகம் கழுவிக் கொண்டிருந்த போது ஜான் ரைட் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். தான் இதற்குக் காரணம் அல்ல என்றார். நான் ஆச்சரியமடைந்தேன், அணியின் முடிவெடுக்கும் விஷயங்களில் பயிற்சியாளருக்கும் பங்கு இருக்கும் போது அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றேன். 

நான் அவரிடம் கூறினேன், நடந்தது நடந்து விட்டது, இனி மாற்ற முடியாது. ஆனால், தேநீர் இடைவேளைக்கு முன் நாம் விவாதித்ததற்கு எதிராக டிக்ளேர் செய்யப்பட்டுள்ளது. நான் இரட்டைச் சதம் எடுக்க ஒரு பந்தை எதிர்கொள்ளக் கூட அனுமதிக்கப்படவில்லை என்பதை அவரிடம் தெரிவித்து விட்டேன். 

சிறிது நேரம் கழித்து சவுரவ் கங்குலி வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். இந்த முடிவை தான் எடுக்கவில்லை என்றார். எனக்கு இதுவும் ஆச்சரியமாக இருந்தது. தேநீர் இடைவேளையின் போது விவாதத்தில் அவர் இருந்தார். டிக்ளேர் செய்யும் போதும் ஓய்வறையில் இருந்தார். ஆனால் சவுரவிடம் அதைப் பற்றி இனி பேசிப் பயனில்லை என்றேன். 

சஞ்சய் மஞ்சுரேக்கர் அப்போது வர்னணையாளர், அவர் என்னிடம் வந்து டிக்ளேர் செய்தது ஒரு தைரியமான முடிவு, இது இந்திய கிரிக்கெட்டிற்கு நல்ல அறிகுறி என்றார். இப்படிப்பட்ட தொனியில் மஞ்சுரேக்கர் பேசிக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியுமா என்று கூறி அவரை நிறுத்தினேன். 

ஓய்வறை விவாதத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமல் பேசுகிறீர்கள் தெரியாமல் நீங்கள் உங்கள் முடிவை என்னிடம் கூறுகிறீர்கள். மேலும் அவரது கருத்து எனக்கு பிடிக்கவில்லை என்பதையும் அவரிடம் தெரிவித்தேன். வேண்டுமென்றே வித்தியாசப்பட்டவர் போல் அவர் நடந்து கொண்டார் என்றே நான் அப்போது கருதினேன். 

ராகுல் திராவிட் என்னிடம், அணியின் நலனுக்காகவே அந்த முடிவை எடுத்ததாகவும், வெற்றி பெறுவதே எங்கள் நோக்கம் என்பதை எதிரணிக்கு உணர்த்தவே டிக்ளேர் செய்ததாக கூறினார். நான் திருப்தியடையவில்லை.

நான் கூறினேன், நானும் அணியின் நலனுக்காகவே ஆடுகிறேன். 194 ரன்கள் அணிக்கு எனது தனிப்பட்ட பங்களிப்பு என்றேன். 

இந்தத் தொடருக்கு முன் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியில், 4ஆம் நாள் ஆட்ட முடிவு நேரத்தில், கேப்டன் சவுரவ் கங்குலி 3 அல்லது 4 மெசேஜ் அனுப்பினார். அதாவது எப்போது டிக்ளேர் செய்வது என்று. ராகுல் திராவிட் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இந்த இரு சூழ்நிலைகளும் ஒப்பு நோக்கத்தக்கதே. 

முல்டானை விட சிட்னி டெஸ்டில் டிக்ளேர் செய்வது என்பது அணியின் தொடர் வெற்றிக்கு வழிவகுப்பதாகக் கூட அமைந்திருக்கும். முல்டானில் தனது வெற்றி ஆர்வத்தை காண்பித்த திராவிட் சிட்னியில் தான் பேட் செய்து கொண்டிருக்கும் போதும் இதனைச் செய்திருக்க வேண்டும்." என்று இழந்த இரட்டைசதம் பற்றி சச்சின் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

Keywords: சச்சின் சுயசரிதை, Playing It My Way, Sachin Tendulkar, Multan Test, Rahul Dravid Captain, ராகுல் திராவிட் கேப்டன், சச்சின் 194 நாட் அவுட், முல்டான் டெஸ்ட்
Topics: கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள், சர்ச்சை, விளையாட்டு, கிரிக்கெட்

[Continue reading...]

Wednesday, 5 November 2014

பயம் ஒரு நிமிடக் கதை

- 0 comments

அமரனுக்கு தன் மகன் சிவா, திருமணத்துக்கு சம்மதிக்காமல் இருப்பது பெரும் கவலையாக இருந்தது. அமரன் ஒரு இதய நோயாளி. நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். தான் நன்றாக இருக்கும் போதே தன் மகனுக்கு திருமணம் செய்துபார்க்க விரும்பினார்.

 

அமரனின் நண்பர்கள் மூலம் பல நல்ல இடத்து சம்மந்தங்கள் கூடி வந்தது. ஆனால் சிவா எதையும் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உதாசினப்படுத்தினான்.

 

இது அமரனுக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுத்தது. தான் படும் வேதனையை மகன் புரிந்துக்

 

கொள்ளவில்லையே என்று அமரன் ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார். இதை அறியாத சிவா, தன் போக்கில் வாழ்க்கையை தனி மரமாக ஓட்டிக்கொண்டிருந்தான்.

 

பொறுத்து, பொறுத்து பார்த்து அமரன் ஒரு முடிவுக்கு வந்தார்.

 

அன்று

 

இரவு வீட்டுக்கு லேட்டாக வரும் சிவா நேராக கிச்சனுக்கு சென்றான். அங்கு சிவா சாப்பிடுவதற்கு அமரன் எதுவும் சமைத்து வைக்கவில்லை.

 

கிச்சனில் சாப்பாடு இல்லாமல் இருப்பதை பற்றி அப்பா அமரனிடம் ஒரு வார்த்தைகூட கேட்காத சிவா, வெறும் தண்ணீரைக் குடித்து விட்டு படுக்கப் போனான். அதைப்பார்த்த அமரனுக்கு ரத்தம் கொதித்தது.

 

"டேய்ய்ய்ய் சிவா..." என்று உரக்கக் கத்தினார்.

 

அப்பாவின் ஆக்ரோஷமான குரலைக்கேட்டு சற்றே திடுக்கிட்ட சிவா, "என்ன டாடி?" என்றான்.

 

"நான் ரொம்ப நாளா உன் கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு வரேன். ஆனா நீ இதுவரைக்கும் பதில் சொல்லாம இருந்தா எப்படி?... இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்..."

 

"என்ன முடிவு, டாடி?!"

 

"நீ ஏன் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்கிறே?"

 

"அம்மா செத்த பிறகு நீங்க ஏன் மறுக்கல்யாணம் பண்ணிக்கலை?"

 

"வர்றவ உன்னை சரியா கவனிச்சுக்க மாட்டான்னுதான்"

 

சிவா கலங்கியபடி அதைச் சொன்னான்... "நானும் அதுக்காகத்தான் பயப்படறேன் டாடி. எனக்கு வர்றவ உங்களை சரியா கவனிச்சுக்காம போயிட்டா...?!"

 

இதைக்கேட்ட அமரன் சிவாவை கட்டியணைத்தார்.

 

Keywords: ஒரு நிமிடக் கதை, சிறுகதை, பயம்

[Continue reading...]

நடிகர் கார்த்திக், காங்கிரஸில் இணைந்தார்

- 0 comments

நாடாளும் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அதன் தலைவர் நடிகர் கார்த்திக் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

 

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் கார்த்திக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்த்திக், "நான் எனது சொந்த வீட்டிற்கு திரும்பியுள்ளேன்" என்றார். அதற்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்த்திக் தேச பக்தி மிகுந்த இளைஞர் என பாராட்டிப் பேசினார்.

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் விலகியதற்கு இன்றைக்கும் வருத்தம் தெரிவித்தார் இளங்கோவன். கட்சியின் செல்லப் பிள்ளை வெளியேறியது வருத்தமளிப்பதாக கூறினார்.

 

முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக கார்த்திக் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.

 

Keywords: நடிகர் கார்த்திக், காங்கிரஸில் இணைந்தார் கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சி கலைப்பு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

[Continue reading...]

Tuesday, 4 November 2014

அரிப்பு ஏற்படுவது ஏன்?

- 0 comments

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை 'எச்சரிக்கை மணி' அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

 

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள 'மாஸ்ட் செல்கள்'.

 

எதிர்ப்புப் புரதம்

 

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை 'இம்யூனோகுளோபுலின் ' (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

 

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் 'ஹிஸ்டமின்', 'லுயூக்கோட்ரின்' (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

 

பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? 'லேன்ட்-லைன்' போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றது இது. லேன்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.

 

இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே 'நரம்பு கேபிள்'தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.

 

என்ன காரணம்?

 

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

 

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

 

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, 'நிக்கல்' வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

 

அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் 'கரப்பான் நோய்' (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழு வதும் அரிப்பை ஏற்படுத்தும்.

 

குளிரும் ஆகாது!

 

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

 

தொடை இடுக்கு அரிப்பு

 

காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

 

அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், 'தோல் மடிப்பு நோய்' (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

 

வயதானால் வரும் அரிப்பு

 

முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.

 

எச்சரிக்கும் நோய்கள்

 

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு 'நூல் புழு' காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

 

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, 'மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்'எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

 

உணவும் மருந்தும்

 

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல லாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

 

மனப் பிரச்சினைகள்

 

அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. 'ஹிஸ்டீரியா' என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.

 

'உடம்பு அரித்தால் ஒரு 'அவில்' போட்டுக்கோ' என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதேவேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.

 

 

 

 

 

 

Keywords: உடல் அரிப்பு, உடல் எச்சரிக்கை, மாஸ்ட் செல்கள், தோல் பிரச்சினை

Topics: மருத்துவம், நோய், வழிகாட்டுதல், விழிப்புணர்வு|

[Continue reading...]

Monday, 3 November 2014

சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை Sachin Tendulkar's biography in Tamil

- 0 comments

சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூலான 'பிளேயிங் இட் மை வே' நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அந்த நூலில் சச்சின் எழுதியுள்ள சில விவரங்கள் வெளியாகியுள்ளன.

 

தனது கேப்டன்சி காலத்தில் அடைந்த தோல்விகளினால் கிரிக்கெட் ஆட்டத்தை விட்டே போய் விடலாம் என்று நினைத்ததாக சச்சின் தன் சுயசரிதையில் கூறியுள்ளார்.

 

"தோல்விகளை கடுமையாக வெறுப்பவன் நான், தொடர்ந்து மோசமாக அணியினர் விளையாடும்போது எனக்கு அதிக பொறுப்பிருப்பதாக உணர்ந்தேன். கவலைக்குரிய விஷயம் என்னவெனில், அணியை வெற்றிப்பாதைக்கு எப்படி அழைத்துச் செல்வது என்பது எனக்குப் புரியவில்லை. என்னால் முடிந்ததை நான் ஏற்கெனவே செய்திருந்தேன்.

 

நெருக்கமான சில போட்டிகளை நாம் தோற்றது என்னை மிகவும் காயப்படுத்தியது, அச்சமூட்டக்கூடியதாக அந்தத் தோல்விகள் அமைந்தன. தோல்விகளிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையே என்னை விட்டுப் போய் கொண்டிருந்தது. ஒரு சமயத்தில் கிரிக்கெட்டை விட்டே போய் விடலாம் என்று சீரியசாக யோசித்துக் கொண்டிருந்தேன்." என்றார்.

 

சச்சின் டெண்டுல்கர் 1997-ஆம் ஆண்டு கேப்டனாக மேற்கிந்திய தீவுகள் சென்றிருந்த போது பெற்ற தோல்விகளே அவரை இந்த முடிவுக்கு வரவைத்தது.

 

முதல் 2 டெஸ்ட் போட்டிகளை டிரா செய்த இந்தியா 3-வது டெஸ்ட்டில் ஒரு அரிய வெற்றி வாய்ப்பைப் பெற்றது. இலக்கு 120 ரன்களே. ஆனால் இந்தியா அதிர்ச்சிகரமாக 81 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. லஷ்மண் தவிர ஒருவரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை.

 

இந்த தோல்வி குறித்து சச்சின் கூறும்போது, "மார்ச் 31, 1997- அந்தத் திங்கட் கிழமை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருண்ட நாள். என்னுடைய கேப்டன்சி வாழ்வில் மிகவும் மோசமான தினம். முதல் நாள் இரவு பார்படாஸில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் உணவு விடுதியில் இரவு உணவு எடுத்துக் கொண்டிருந்த போது, வெயிட்டர் ஒருவர் மேற்கிந்திய அணி வெற்றி பெறும் என்று உறுதியாக என்னிடம் கூறினார். கர்ட்லி ஆம்புரோஸ் இந்திய அணியை பவுன்ஸ் செய்து வீழ்த்திவிடுவார் என்று என்னிடம் அவர் கூறினார்.

 

நான் கூட அதற்கு விளையாட்டாக பதில் கூறினேன், அதாவது முதல் இன்னிங்ஸில் பிராங்க்ளின் ரோஸ் எனக்கு பவுன்சர் வீசினார். அதனை ஸ்டாண்டிற்கு அடித்தேன். எனவே ஆம்புரோஸ் எனக்கு பவுன்சர் வீசினால் அந்தப் பந்தை ஆன்டிகுவாவுக்கே அடிப்பேன் என்று கூறினேன்.

 

மேலும் அங்கிருந்த ஃபிரிட்ஜைக் காட்டி அதில் ஷாம்பெய்ன் பாட்டில் ஒன்றை வையுங்கள், நாளை இந்தியா வெற்றி பெற்றவுடன் நான் அதனைத் திறப்பேன், கொண்டாடலாம் என்றேன்.

 

ஆனால் 81 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தோம். அதுபோன்ற மோசமான பேட்டிங்கிற்கு மன்னிப்பே கிடையாது. அது ஒரு கடினமான பிட்ச் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் யார் மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. அது என்னுடைய வழியல்ல. இருந்தாலும், இது போன்று தோல்வியடைந்த ஒரு அணியில் நான் இருந்தேன், நான் பொறுப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்திருக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மிக மோசமான பேட்டிங் வீழ்ச்சியில் நானும் ஒரு பகுதியாக இருந்ததை இப்போது நினைத்தாலும் பதறுகிறது.

 

நானே அந்த டெஸ்ட் போட்டியில் 4 ரன்களுக்கு அவுட் ஆனேன். பந்தை தொட வேண்டும் என்ற ஆவலில் ஆடப்போக எட்ஜ் எடுத்தது. நான் அந்தப் பந்தை விட்டிருக்க வேண்டும், அல்லது எதிர்தாக்குதல் பேட்டிங் ஆடியிருக்க வேண்டும். இந்தத் தோல்வியால் வெகுவாக உடைந்து போனேன், 2 முழுநாட்கள் எனது அறையின் கதவைத் திறக்காமல் முடங்கிப் போனேன். இன்றும் கூட அந்தத் தோல்வி என் மனத்தை பதைபதைக்கச் செய்கிறது.

 

5 டெஸ்ட்கள் கொண்ட தொடரை 0-1 என்று இழந்து ஒருநாள் போட்டித் தொடருக்குச் சென்றோம். ஆனால் அதிலும் தோல்வி கண்டோம். அதிலும் 3-வது ஒருநாள் போட்டியில் பெற்ற தோல்வி என்னை மேலும் அச்சுறுத்தியது. செயிண்ட் வின்செண்டில் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி 10 ஓவர்களில் 47 ரன்கள் தேவை. 6 விக்கெட்டுகள் கையில் இருந்தது. ராகுல் திராவிடும், கங்குலியும் வெற்றிக்கான களத்தை அமைத்துக் கொடுத்தனர்.

 

ஆனால் நான் எவ்வளவோ பெரிய ஷாட்களுக்குச் செல்ல வேண்டாம், ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாகவே தேவைப்படுகிறது நிதானமாக ஆடினாலே வெற்றி பெறலாம் என்று வீரர்களுக்கு கூறினேன், ஆனால் பின்கள வீரர்கள் தொடர்ந்து பந்தை மேலே தூக்கி அடித்து வீழ்ந்தனர். தற்கொலைக்குச் சமமான ரன் அவுட்கள் வேறு. வெற்றி பெறும் நிலையிலிருந்து அணி தோல்வியடைந்தது எனக்கு கடும் கோபத்தைக் கிளப்பியது.

 

ஆட்டம் முடிந்து வீரர்களை அழைத்துக் கூட்டம் கூட்டினேன், அன்று நான் எனது ஓர்மையை இழந்து வீரர்களிடத்தில் சத்தம் போட்டேன். நான் இதயபூர்வமாக பேசினேன், இந்தத் தோல்வியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றேன். எதிரணியினர் சிறந்த முறையில் ஆடி நாம் தோற்றால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வெற்றி பெறும் நிலையிலிருந்து தோல்வி அடைவது அணியினரிடத்தில் சீரியசான பிரச்சினை இருப்பதாகவே என்னை நினைக்க வைத்தது.

 

நான் அந்தத் தோல்விக்குப் பிறகு மிகவும் சோர்வடைந்தேன், அன்று மாலை அனில் கும்ப்ளேவும், ஸ்ரீநாத்தும் என் அறைக்கு வந்து என்னைத் தேற்றினர். தோல்விகளுக்கு என்னை நானே குற்றம்காணக்கூடாது என்று என்னிடம் அவர்கள் இருவரும் கூறினர், ஆனாலும் என் மீது தோல்வி விழுந்து அழுத்தவே செய்தது.

 

என் மனைவி அஞ்சலிதான், எல்லாம் சரியாகி விடும், வரும் மாதங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று ஆறுதல் கூறினார். திரும்பிப் பார்க்கும்போது எனக்கு தோல்விகள் வெறுப்பாகவே உள்ளது" என்று தன் சுயசரிதையில் அந்தத் தொடர் பற்றி எழுதியுள்ளார் சச்சின்.

 

இந்த சுயசரிதை நூலை அவர் கிரிக்கெட் எழுத்தாளர் போரியா மஜும்தாருடன் இணைந்து எழுதியுள்ளார்.

 

Keywords: சச்சின் டெண்டுல்கர், சுயசரிதை நூல், பிளேயிங் இட் மை வே, கிரிக்கெட், இந்தியா

Topics: கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு, கிரிக்கெட்

[Continue reading...]

சொல்வதெல்லாம் உண்மை இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் Solvathellam Unami

- 0 comments

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியினை கிண்டல் செய்து நிகழ்ச்சி ஒன்று செய்தார்கள். அந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. பலரும் "என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா..", "போலீஸைக் கூப்பிடுவேன்.." என்று இணையத்தில் பலரும் கிண்டல் செய்யும் அளவிற்கு, வசனங்கள் பிரபலமானது.

 

YOUTUBE-ல் பதிவேறிய அந்நிகழ்ச்சியினை இதுவரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தினைத் தொடவிருக்கிறது. முதன் முறையாக தனது நிகழ்ச்சியினை கிண்டல் செய்ததற்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

 

"அந்நிகழ்ச்சியை செய்தவர்கள் என்னை பிரபலமாக்கிவிட்டார்கள். ஏம்மா இப்படி பண்றீங்களேம்மா அப்படினு நானே சொல்லி என்னை கலாய்க்க போறாங்கனு நினைக்கிறேன். இப்படி பண்ணீங்கன்னா போலீஸை கூப்பிடுவேன் என சொன்னதை பிடித்துக் கொண்டார்கள்.'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியே ஒரு பிரபல நிகழ்ச்சி. இவர்கள் கிண்டலுக்குப் பிறகு இன்னும் பிரபலமாகிவிட்டது.

 

நான் நிறைய நிகழ்ச்சிகளுக்கு போகும் போது, நிறைய புகைப்படங்கள் எடுக்கிறார்கள். நிறைய பேர் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று என்னைப் பார்த்து கேட்கிறார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்றால், நமது திரையுலகில் ஒரு புதிய காமெடியன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை கலாய்க்கிறாங்க என்று தெரியாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருப்பார். அப்படி என்னையும் கிண்டல் செய்கிறார்களோ என சந்தேகம் வந்துவிட்டது. நானே அந்த கிண்டல் வீடியோவை சந்தோஷத்தோடு பார்த்தேன்.

 

என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆனால் நிகழ்ச்சியோட CONTENT, அதில் வருகிற மக்கள் போன்றவற்றை கிண்டலடிக்கக் கூடாது. அந்நிகழ்ச்சிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது, டி.ஆர்.பி ரேட்டிங் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியை நான் சிறப்பாக செய்து வருகிறேன். என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். நான் வருத்தப்பட மாட்டேன். மகிழ்ச்சியே" என்று கூறியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

 

மேலும் சினிமா தகவல்களுக்கு...

Keywords: லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் உண்மை, நையாண்டி, கிண்டல்

Topics: சினிமா, தமிழ் சினிமா

[Continue reading...]

Sunday, 2 November 2014

சளியை உடனடியாகப் போக்கும் மிளகு ரசம் !

- 0 comments

சளியை உடனடியாகப் போக்கும் மிளகு ரசம்!

மழை காலம் வந்துவிட்டால் மக்களின் பெரிய பிரச்சனையே சளி பிடிப்பது தான். சளி பிடித்தால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தியே அதனை உடனடியாக குணப்படுத்த முடியும். சளி பிடித்திருந்தால், அப்போது மிளகு ரசம் செய்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும்.

தேவையான பொருட்கள்:

புளி – 1 எலுமிச்சை அளவு

கொத்தமல்லி சிறிது

உப்பு தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு:

மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பூண்டு – 1

வரமிளகாய் – 1

துவரம் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு

நெய் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிது

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

வரமிளகாய் – 2

[Continue reading...]

நெருங்கி வா முத்தமிடாதே திரை விமர்சனம் - Tamil cinema Review

- 0 comments

பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாகச் சாலைகளில் வாகனங்கள் ஓட முடியாத சூழ்நிலை. அப்போது திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு ஒரு லாரியில் 2,000 லிட்டர் டீசலை நாயகன் சந்துரு (சபீர்) கொண்டுசெல்கிறார். இதன் பின்னணியில் ஒரு பெரிய சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது. இதை அறியாத சந்துரு லாரியை ஓட்டிச் செல்கிறார். வழியில் இரண்டு ஜோடிகள் வேறு அவரிடம் அடைக்கலம் கோருகின்றன. அவர்களையும் தன்னுடன் அழைத்துக்கொள்கிறார். தம்பி ராமையாவும் வழியில் ஏறிக்கொள்கிறார்.

 

பயணத்தின் இடையே ஏற்படும் சம்பவங்களால், தான் ஒரு சூழ்ச்சியில் சிக்கவைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துகொள்ளும் சந்துரு அதிலிருந்து மீள்கிறாரா, டீசலை எங்கு, எதற்காகக் கொண்டு செல்கிறார், அந்த ஜோடிகள் யார் போன்ற விஷயங்களைத் திடுக்கிடும் காட்சிகளால் சொல்லும் டிராவல் மூவியே 'நெருங்கி வா முத்தமிடாதே'.

 

ஏ.எல்.அழகப்பன் காளீஸ்வரன் என்னும் அரசியல்வாதியாக நடித்துள்ளார். அவரிடம் லாரி டிரைவராக இருக்கிறார் சந்துரு. ஆனால் சந்துருவின் தந்தை சுப்பிரமணியன் (ஒய்.ஜி.மகேந்திரன்) அதே ஊரில் பெட்ரோல் பங்க் நடத்துகிறார். அவருடைய மனைவி அம்பிகா. பணக்கார வீட்டுப் பையனாக இருந்தும் படிப்பில் ஆர்வம் இன்றி அனைவருக்கும் உதவுபவராகச் சுற்றித் திரிகிறார் அவர்.

 

நாயகி மாயா (பியா பாஜ்பாய்) அவரது அம்மா (விஜி சந்திரசேகர்) இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. தன் தாயின் நடத்தை மீது மகளுக்குச் சந்தேகம். ஏனெனில், தந்தை யார் என்பது மாயாவுக்குத் தெரியாது. அதனால் ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். மலேசியாவுக்கு ஓர் இசை நிகழ்ச்சிக்காக மாயாவின் அம்மா செல்கிறார். அன்று இரவு நண்பர்களுடன் ஜாலியாகச் செலவிடும் மாயா இடையில் நண்பன் ராகவுடன் வெளியில் கிளம்புகிறார். போன இருவரையும் காணவில்லை.

 

சமூகத்தின் மேல் அடுக்கில் உள்ள சாதியைச் சேர்ந்த மேகாவுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பிச்சைக்கும் காதல். இதற்கு எதிர்ப்பு வர இருவரும் ஊரைவிட்டு ஓடுகின்றனர். இதனிடையே தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த அனைத்து அத்தியாயங்களையும் ஒன்றாக இணைத்தபடி செல்லும் லாரி காரைக்கால் சென்று சேரும்போது படம் முடிந்துவிடுகிறது.

 

தேசத் துரோக நடவடிக்கை, கேங் ரேப், சாதி ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சினைகள், தாய்-மகள், தந்தை-மகன் ஆகிய குடும்ப உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் எனப் பல விஷயங்களை ஒரே படத்தில் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், அதற்குத் தேவையான உணர்வுபூர்வமான காட்சிகளை உருவாக்குவதில் மிகவும் பின்தங்கிவிட்டார். பெட்ரோல் தட்டுப்பாட்டின் பாதிப்பைப் புரியவைக்க அழுத்தமான காட்சிகள் இல்லை. வெறும் தொலைக்காட்சிச் செய்திகளை வைத்து அதன் வீரியத்தை உணர்த்தும் முயற்சி வெற்றிபெறவில்லை.

 

ரோடு மூவி படங்களில் காணப்படும் விறுவிறுப்பு இப்படத்தில் இல்லை. சுவாரஸ்யமான காட்சிகளோ ரசனையான பாடல்களோ, காட்சிக்குத் தேவையான இசையோ இல்லாததால் பெரிய திரையில் சின்னத்திரைத் தொடரைப் பார்ப்பது போன்ற பிரம்மை ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஒளிப்பதிவாளர் வினோத் பாரதியின் கைவண்ணத்தில் ஒளிப்பதிவு மட்டும் சில காட்சிகளில் கண்ணுக்குக் குளுமையாக உள்ளது.

 

தம்பி ராமையா, பால சரவணன் ஆகிய இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகள் சிரிப்புக்குப் பதில் எரிச்சலையே ஊட்டுகின்றன.

 

 

Keywords: நெருங்கி வா முத்தமிடாதே, திரை விமர்சனம், பியா, லஷ்மி ராம்கிருஷ்ணன், தம்பி ராமையா

Topics: தமிழ் சினிமா விமர்சனம்

[Continue reading...]

நோக்கியா தொழிலாளர்கள் சிறப்பு பார்வை

- 0 comments

 

வேலை கிடைக்காது என்று தெரிந்த பிறகு வேறு வழியில்லாமல் நஷ்ட ஈட்டை பெற ஒப்புக் கொண்டோம் என்று மூடப்பட்ட நோக்கியா ஆலையின் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

 

ஸ்ரீபெரும்பூதூரில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நோக்கியா ஆலை, அக்.31-ம் தேதியுடன் மூடப்பட்டது. அதில் கடைசியாக பணிபுரிந்த 851 ஊழியர்களுக்கு நவம்பர் 3-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் நஷ்ட ஈட்டு தொகையை பெற்றுக்கொள்ளுமாறு நோக்கியா நிறுவனம் குறுஞ் செய்தி அனுப்பியுள்ளது.

 

இதன்படி ஊழியர்களுக்கு ரூ. 6 லட்சம் முதல் 10 லட்சம் வரை நோக்கியா நிறுவனம் நஷ்ட ஈடு வழங்குகிறது. ஆனால் இதில் வருமான வரி, நிறுவனத்திடமிருந்து வாங்கிய தனி நபர் கடன் ஆகிய கட்டணங்கள் கழிக்கப்பட்டு கையில் கிடைக்கும் தொகை மிகவும் குறைவாக இருக்கும் என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

 

நோக்கியா நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக பணி புரிந்த தொழிலாளி ஒருவர், ''நான் தற்போது ரூ.21,000 சம்பாதித்து வந்தேன். ஆனால், தற்போது அங்கு தொடர்ந்து வேலை கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரிய வில்லை. அதனால் இந்த நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஒப்புக்கொண்டோம். இப்போதும், நவம்பர் 10-ம் தேதிக்குள் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து வேலை கிடைத்து விடாதா என்று தோன்றுகிறது" என்றார்.

 

பெண் தொழிலாளி சரிதா கூறும்போது, "எனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. இந்த வேலையை நம்பி எனது குழந்தையை மெட்ரிக் பள்ளியில் சேர்த்து விட்டேன். எனது கணவருக்கு நிரந்தர வேலை கிடையாது. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார்.

 

நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் பிரபு கூறும்போது, "நோக்கியாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். லாபம் ஈட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே நுழையும் போது ஒப்பந்தம் போடப்படுவது போல், வெளியே செல்லும் போதும் ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். நோக்கியா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் கடனுதவியும் தருமாறு அரசை கேட்டு வருகிறோம்," என்றார்.

 

Keywords : நஷ்ட ஈடு, நோக்கியா ஆலை, நோக்கியா தொழிலாளர்கள், ஸ்ரீபெரும்பூதூர் ஆலை

Topics : தமிழகம், சர்ச்சை, விவகாரம்

[Continue reading...]

கணவன் மனைவி அழகான வாழ்க்கை !

- 0 comments

இரவு நேரத்தில் கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ...

கணவனும் வந்து ...
அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ...
பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன் மிச்சமில்லாமல் உண்டு முடிக்க ...
மலர்ந்த முகத்தோடு பாத்திரங்களை ஒதுக்கி விட்டு வரும் மனைவியிடம் ....

"நீ சாப்பிடவில்லையா ?" என்று கணவன் கேட்க ....

"எனக்கு பசியாக இருந்தது. அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே உண்டு முடித்து விட்டேன்" என்று சொல்லும் மனைவியை வரமாகப் பெற்றவன்....

என்ன செய்வான் ?

சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும் கணவனிடம் "இப்போதானே வந்தீங்க. திரும்பவும் எங்க போறீங்க ?" என்று கேட்டவளுக்கு ...

"ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன்" என்று கூறிவிட்டு ...

சற்று தூரம் அலைந்து நல்ல ஹோட்டலில் ருசியான உணவு வாங்கி வந்து ... "இந்தா சாப்பிடு..." என்று சொல்லும்போது அவள் கண்கள் லேசாக கசிய...
உண்ணுவாளே....

அதற்குப் பெயர்தான் அழகான வாழ்க்கை !

பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..

[Continue reading...]

Saturday, 1 November 2014

ஆச்சரியப்படும் உண்மைகள் - World Amazingly Facts

- 0 comments

ஆச்சரியப்படும் உண்மைகள்:

 

1. இன்னும் 100 வருடம்

கழித்து பேஸ்புக்கில் 50

கோடி இறந்தவர்களின்

அக்கவுன்ட் இருக்குமாம்.

 

2. குதிக்க முடயாத

ஒரே உயரினம்

யானை தான்.

 

3. டைட்டானிக்

கப்பலை உருவாக்க 7

மில்லியன் டாலர்

செலவானது ஆனால்

டைட்டானிக்

படத்தை உருவாக்க 200

மில்லியன் டாலர்

செலவாகியுள்ளது.

 

4. சோனி கம்பெனியின்

ஒரிஜினல் பெயர்

டாட்சூகன்.

 

5. யூடியூபில்

இப்பொழுது உள்ள

வீடியோவை முழுவதுமாக

பார்க்க 1000 வருடம்

தேவைபடும்.

 

6. ஒருவர் சந்தோஷமாக

அழும் பொழுது முதலில்

வலது கண்ணிலும்,

வலியால் அழும்

பொழுது இடது கண்ணிலும்

கண்ணீர் வரும்.

 

7. 67. 99 சதவீத மக்கள்

தங்கள்

பாஸ்வேர்டை டைப்

செய்யும்

பொழுது ஒரு எழுத்து தப்பாக

டைப் செய்துவிட்டால்

பாஸ்வேர்டை முழுவதுமாக

அழித்து புதிதாக டைப்

செய்கின்றனர்.

 

8.

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்

ஆய்வின் படி ஒரு நபர்

காதலில் விழும்

பொழுது தனது இரண்டு நெருங்கிய

நண்பரை இழந்துவிடுகிறாராம்.

9. கெட்டு போகாத

ஒரே உணவு பொருள்

தேன்

 

10. வெங்காயம் உரிக்கும்

போது ச்சீவிங் கம்

சாப்பிட்டால்

அழுகை வராதாம்...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger