
தமிழ்நாட்டின் டாப் மோஸ்ட் சென்ஷேசனல் விஐபி அஜீத். அவர் பேசாவிட்டாலும் அவரைப் பற்றியும், அவரது படத்தை பற்றியும் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னை அறிந்தால் படம் எப்போது வரும் என்று எல்லோரும் பரபரத்து கிடக்கிறார்கள். அடுத்த படத்துக்கு கால்ஷீட் தருவாரா என்று கோடிக்கணக்கான பணத்தை மடியில் கட்டிக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அவர் முகத்தை ஒருமுறையாவது பார்த்து விட மாட்டோமா என்று நித்தம் தவமிருக்கும் ரசிகர்கள். இத்தனைக்கும் நடுவில் ஒரு தந்தையாக தன் பங்கை சரியாக செய்திருக்கிறார் அஜீத். சுமாரான வேலையில் இருந்து கொண்டு சில ஆயிரம் சம்பாதிப்பவர்கள்கூட பெற்ற மகளை கவனிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மகளின் பள்ளி விழாவா, ஸ்கூல் அட்மிஷனா, ஹெச் எம்மை பார்க்க வேண்டுமா எல்லாவற்றுக்கும் செல்வது அம்மாதான். தவிர்க்க முடியாத நிலையில் மட்டுமே அப்பா செல்வார். ஆனால் அஜீத் தன் மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளியின் ஒரு சிறிய விழாவில் மகளுக்காக ஒரு நாள் முழுவதும் செலவழித்திருக்கிறார். அதோடு தன் மகளையும், மகளின் தோழிகளையும் ஒரு போட்டோகிராபராக மாறி படம் எடுத்திருக்கிறார். ஒரு டாப் ஹீரோ என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் அந்த பள்ளி காம்பவுண்டுக்குள் ஒரு தந்தையாக இருந்து தன் மகளை ரசித்திருக்கிறார் அஜீத். அந்த பள்ளிக்கு வந்த மற்ற குழந்தைகளின் பெற்றோர்களும். அஜீத்தை ஒரு பெரிய ஸ்டாராக பார்க்காமல் சக தந்தையாகவே பார்த்திருப்பதும் ஆச்சர்யம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?