நாடாளும் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அதன் தலைவர் நடிகர் கார்த்திக் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் கார்த்திக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்த்திக், "நான் எனது சொந்த வீட்டிற்கு திரும்பியுள்ளேன்" என்றார். அதற்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்த்திக் தேச பக்தி மிகுந்த இளைஞர் என பாராட்டிப் பேசினார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் விலகியதற்கு இன்றைக்கும் வருத்தம் தெரிவித்தார் இளங்கோவன். கட்சியின் செல்லப் பிள்ளை வெளியேறியது வருத்தமளிப்பதாக கூறினார்.
முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக கார்த்திக் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.
Keywords: நடிகர் கார்த்திக், காங்கிரஸில் இணைந்தார் கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சி கலைப்பு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?