Monday 23 April 2012

உனக்கு கொசக்சி பசப்புகழ தெரியும் ஆனா எல் கிளாசிகோவ தெரியுமா?






கொசக்சி பசப்புகழ் பெரிய ஒரு விஞ்ஞானி. அவரு இருக்கிற எடம் தேடி அமரிக்க கப்பனிகளே அலையுது. இதிலயும் பஞ்சவேல் பாரி� �ேந்தனை பழிவாங்கி ரத்தம் குடிக்க அலையும் சத்தியன் கூட கொசக்சி பசப்புகழை தான் தேடித் திரிகிறார். அட அது கூட பரவாயில்லை இந்த ஜீவாவும், சிறீகாந்தும் கூட பஞ்சவேல் பாரிவேந்தனின் ஆருயிர் நண்பர்கள்.

அவர்கள் கூட தனது ஆருயிர் நண்பன் பாரிவேந்தனை தேடி அலைகிறார்கள். அப்புறம் காடு , மேடு, பனிமலை எல்லாம் அலைந்து திரிந்து எப்படியோ பஞ்சவேல் பாரிவேந ்தன் தனது நண்பன் இல்லை என்று தெளிகிறார்கள். என்ன இவர்களது வழி பயணத்தில் டிஸ்கவரி சேனலின் "பியர் கைல்ஸ்சும்" , செத்துப்போன "ஸ்டீவ் எர்வின்" ஆவியும் கூட வந்து உயிர் காப்பு நெறிமுறைகளை சொல்லி தராதது தான் கொறை.

அது கூட பரவாயில்லை, அரை இஞ்சிக்கு இடுப்பு வெச்சிருக்கிற இலியானா பொண்ணுகூட , மூக்கும் மூக்கும் முட்டாம ஒரு முத்தம் குடுக்க முடியாம , தோத்து போய் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க துணிஞ்சிருது. அப்பொ முத்தம் குடுக்கும் போது  வேற எதுவும் எதுவும் முட்டும்ன்னு எவனாச்சும் கேட்டீங்கன்னா மக்களே டாகுடரோட துப்பாக்கி படத்தோட முதல் ஷோ டிக்கட் எடுத்து கைல குடுத்திருவன் ஜாக்கிரத.

எனக்கு இங்க தான் மச்சி ஒரு டவுட்டு, இந்த பஞ்சவேலும் , அந்த பக்கி பயபுள்ளையும் பாய்ஞ்சு பாஞ்சு  ல� �் பண்ணினாய்ங்களே , அப்புறம் இந்த பஞ்சவேலு உன்ன கல்யாணம் பண்ண முடியாதுங்கிறான். இந்த பொண்ணும் ஒரு ஒப்புக்கு ஏன்னு கேட்டுப்புட்டு அப்புறம் கண்டுக்காம விட்டுரிச்சு.

அடங்கொன்னியா அவன் உஜிரோட இருக்கான இல்ல செத்து போய்ட்டானான்னு கூட தெரியாம, ஒரு அமெரிக்க மாப்பிள்ள கூட செட்டிலாக தயார் ஆகும் இடத்தில் பக்கா மாடன் பொன்னுன்னு நிரூபிக்குது.< /div>

அட இந்த பாரி பயல் கூட கண்டுக்கவே இல்ல இல்ல! என்ன லவ்வுடா இது?

ஆனா பாருங்க , ஒரு காமடி என்னன்னா நம்ம தமிழ் நாட்டு ஜேம்ஸ் கமரூன் ஷங்கர் இருக்காரில்ல , அவரு இன்னா சொன்னாரு ? தமிழுக்கு ஏத்தா மாரி படத்த மாத்தி இருக்கேன்னாரு.

பிரம்மாண்டம் பண்ணுகிறேன் பேர்வழின்னு படத்தோட இருநூறு கோ� ��ில நூறு கோடிக்கு பாட்டுக்கு எங்கனாச்சும் வனாந்தரத்துல செட்டு போடும் இந்த ரிச்சான பேரரசு இன்னா பண்ணினாரு? ஏன் இவர ரிச்சான பேரரசுன்னு சொல்றேன்னா , பெரிய ஆர்டிஸ்டுகளை வச்சுகின்னு மசால படம் தருகின்ற ஒருத்தர் தானே ஷங்கர். தன்னோட மொதல் மூணு படத்தில இவரு காமிச்ச நெஜமான தெறமையின் மேல் இன்னமும் சவாரி செய்கின்ற சரக்கில்லாத வியாபாரி.

அந்த பே ர வச்சுகின்னு , இபோது பெரிய ஆர்டிஸ்டுகள வச்சி படம் பண்ணும் பிரம்மாண்ட வெங்கடேசு, ரிச்சான பேரரசு. பிரம்மாண்டம் ... பிரம்மாண்டம் ... அப்டீன்னு பேசுறீங்களே உங்க படத்துல செட்டு மட்டும் தானே பிரம்மாண்டமா இருக்கு, காட்சிகள்ள கெடையாதேன்னு கேட்டா , அவரும் அவரோட அடி பொடிகளும் தார பதில் இருக்கே யம்மா,,,,,, "அந்த காட்சிகளின் நுணுக்கம், அதில் உள்ள பிரம்மாண்டம் எல்லாம் சிறந்த கமிராமே ன்களுக்கும், அந்தந்த துறைசார் வல்லுனர்களுக்கெ வெளங்கும்னு" ஒரு சப்ப கட்டு வேற.. வெளங்குமிடா....!



அப்டீன்னா உங்களோட படத்த ரிலீஸ் பண்ணிப்புட்டு நிரவ் ஷா , மகேந்திரன், பாலு மகேந்திரா, கே.வி.ஆனந்துன்னு நூறு நாளும் கேமிரா மேன்களுக்கே போட்டு காட்டி வெற்றி படம்னு அறிவிக்க வேண்டியது தானே, அத்த விட்டு புட்டு  ஏய்யா.. காமிரா பத்தியோ, காமிரா கோணங்கள் பத்தியோ எதுவுமே தெரியாத சாணி தட்டுற முனியம்மாவுக்கும், ஆப்பம் விக்கிற ஆயாவுக்கும் , புண்ணாக்கு விக்கிற புஸ்பாக்கும் போட்டு காட்டுறீக.... # ஓவரா எமோஷன் ஆகிறனோ?

பாலா, வசந்த பாலன், பிரபு சாலமோன் எல்லாம் நல்ல டைரக்டர் அவைய்ங்களோட படத்தில புதுசா ஏதும் இருக்கும்ன்னு நான் ஏதாவது சொல்லப்போனா என்மேல சாணியடிக்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்கிறதால நான் எதுவும் சொல்லப்போவது இல்ல. ஷங்கர் வாழ்க... பிரம்மாண்டம் வாழ்க....

சரி என்னா பேசிக்கிட்டு இருந்தோம்? ஆ! கொசக்சி பசப்புகழ், இந்த கடைசி காட்சில ப� ��ருங்க தன்னோட நண்பன் தான் அந்த கொசக்சி பசப்புகழ்ன்னு எல்லோரும் தெரிஞ்சு கொள்ளும் காட்சி என்ன ஒரு பிரம்மாண்டம்?

 இம்மாம் பெரிய விஞ்ஞானி இந்த கொசக்சி, அவரோட அக்ரிமென்ட் போடுறதுக்கு ஜப்பான் , அமெரிக்கா , பேரிக்கான்னு எல்லா நாடும் வரிசைல நிக்குது ஆனா பாருங்கோ , "கிஷோகர்ன்னு" கூகிள்ள சொடக்கினா, சுண்டக்கா பய என்னோட டீட்டெயில் கூட வந்து வி� �ுற இந்த இன்டெர்னெட் யுகத்தில அவரோட ஒரு போட்டோ கூட கூகிள்ளையோ , பேப்பரிலயோ  வராம போனது தான் ஷங்கரோட பிரம்மாண்டம் தெரியும் இடங்கள். கலக்குங்கள் ஷங்கர் சார்!

அது சரி இந்த பிரமாண்டத்தை கவனிக்க உங்களுக்கு மூடு இருந்திருக்காது , பின்ன என்ன முத்தமிடும் போது மூக்கும் மூக்கும் முட்டுமா? அப்டீன்னு சாலமன் பாப்பையாவே பட்டிமன்றம் நடாத்த மறந்த தலைப்பை இடுப்பழகி இலியான விஞ்ஞான பூர்வமாக நிறுவிக்காட்டும் போது , பிரம்மாண்டத்த யாருய்யா பாக்கிறது? பிரம்மாண்டம் வாழ்க! ஷங்கர் வாழ்க!

சரி கொசக்சி பசப்புகழ் யார்னு நமக்கு இப்பொ தெரியும் ! அது யார் சார் 'எல் கிளாசிகோ"?



சுட்டுக்கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மெய்க்காப்பாளர்கள் எல்லாம் ஃபிகருகள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் ஒரு பிகரை நீண்ட நாட்களாக கடாபி இது பண்ணினார்.

அந்த பொண்ணு பேரு தான் "எல் கிளாசிகோ". சும்மா செம ஃபிகருப்பா. சும� �மா சொல்ல கூடாது, பொண்ணு நின்னு வெளையாடும், அந்த கறுப்பு கலருக்கே  கோடி குடுக்கலாம், என்னய விட்டா அந்த பொண்ணு பாட்டியாகும் வரைக்கும் பாத்துகின்னே இருப்பேன், அப்டீனு நான் சொன்னா இந்த JZஉம், மலேசியா  குமரனும் வாயிலயே வெட்டுவார்கள்.


'எல் கிளாசிகோ" அப்டீன்னா ஸ்பெயினின் புகழ் பெற்ற உதைபந்தாட்ட கழகங்களான பார்சிலோனா மற்று ம் ரியல் மட்ரிட் அணிகள் மோதும் இந்த போட்டிக்கு பேர் தான் "எல் கிளாசிகோ"

உலகத்தின் மில்லியன் கணக்கான உதைபந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த போட்டி இன்று இலங்கை இந்திய நேரப்படி 11.30க்கு ஆரம்பமாகிறது.

இந்த போட்டி அரசியல் மற்றும் இன்னமும் சிலபல காரணங்களால் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கட் போட்� �ி ரேஞ்சுக்கு பார்க்கப்படுகிறது. முடிஞ்சா நீங்களும் பாருங்கோ.

இன்றைய இந்த போட்டி பார்சிலோனாவுக்கு அரசியல் ரீதியான காரணங்ளையும் தாண்டி   மிக முக்கியமான போட்டி. காரணம் ஏன் என்று அறிய இங்கே சொடுக்குங்கள்.



� ��ோவ் JZ மற்றும் மலேசியா குமரா! இந்த போட்டி தொடர்பில் தனி பிரீவியூ போடத்தான் பிளான் பண்ணினேன். இந்த பாழா போன கரண்டு இப்போதான் வந்திச்சு. அதனால ஏற்கனவே கொசக்சிக்கு அனுப்ப வச்சிருந்த லெட்டர் கூட இதையும் அட்டாச் பண்ணி மேனேஜ் பண்ணிகிட்டேன். மன்னிச்சூ........

இந்த போட்டி இப்படி முடியலாம்....

2 - 0 பார்சிலோனா வெற்றி

அல்லது

2- 1 பார்சிலோனா வெற்றி

இந்த போட்டியில் எதிர் பார்க்கப்படும் பார்சில� ��னாவின் லைன் - அப்





http://tamil-starmovies.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger