Monday, 20 February 2012

கூடங்குளம் அணும��ன் நிலையம் பாதுகாப்பானது, ஆபத்தி���்லை : தமிழக அரசின் நிபுணர் குழு



கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது, பேரலைகள் தாக்கினாலும், அணு உலைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என தமிழக அரசின் நிபுணர் குழு அறிவித்துள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து, அப்பகுதி மக்கள் கடந்த 6 மாதங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். மத்திய அரசினால் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் விளக்கமளிக்கப்பட்டு வந்த போதும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் தமிழக அரசு, அணு மின் நிலையத்தை ஆராய்வதற்கு நால்வர் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்தது.

அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியனை அமைப்பாளராக கொண்டு இந்திய அணு சக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுஓளி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயராகவன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவினனர் அணு மின் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தியதுடன், நேற்று காலை நெல்லையில் இந்திய அணு சக்தி கழக அதிகாரிகள், கலெக்டர் செல்வராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் போராட்ட குழுவினருடனும் கலந்தாலோசித்தனர்.

பின்பு தமிழக அரசின் வல்லுநர் குழு அமைப்பாளர் இனியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு அணு மின் நிலைய கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்களை பார்த்து வரவும், மக்களின் அச்ச உணர்வுகளை அறிந்து வரவும் எங்களை கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து நாங்கள் அணுமின் நிலையத்தை பார்வையிட்டோம். அணு உலைகளை குளிர்விப்பதற்காக கடல் நீர் கொண்டு செல்லும் போது ஒரு மீன் கூட சாகாத வகையில் நேர்த்தியாக உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உள்ளே செல்லும் மீன்களும் கடலுக்கு திரும்பி விடும் வகையில் அந்த அமைப்பு உள்ளது. பேரலைகள் வந்தாலும் கூடங்குளம் அணு உலைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 6.5 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்கும் வகையில் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படியே பூமி அதிர்வு வந்தாலும் அணு உலைகள் உடனே இயக்கத்தை நிறுத்திவிடும்.

உலகிலேயே முதன் முதலாக அணு உலைகளை குளிரூட்டும் தொழில்நுட்பம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லையென்றாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அணு உலைகளை இயற்கையாக குளிரூட்ட முடியும். ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் டர்பைன்கள், கண்டன்சர் யூனிட் ஆகியவற்றையும் வல்லுநர் குழு பார்வையிட்டது.

அங்கு 6 மெகாவாட் உற்பத்தி செய்யும் டீசல் ஜெனரேட்டர்கள், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றையும் காண முடிந்தது. அணு உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 7 விதமான பாதுகாப்பு அம்சங்களை பார்க்க முடிந்தது. இதன் மூலம் எங்களது ஆய்வு திருப்திகரமாக முடிந்தது. போராட்டக் குழுவினருடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. கூடங்குளம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் 9 பேர் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினோம். மக்களின் அச்ச உணர்வுகளையும் புரிந்து கொண்டோம்.

எங்களுக்கு அரசு கொடுத்த பணி முடிந்தது. நாங்கள் சென்னை செல்கிறோம். அணுமின் நிலைய அதிகாரிகள் கொடுத்துள்ள ஆவணங்களை பார்த்து, படித்து கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. அதன் பின்னர் தமிழக அரசிடம் அறிக்கை அளிப்போம். எப்போது அறிக்கை அளிப்போம் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது. என தெரிவித்தார்.

போராட்டம் நடத்திய மக்களை நேரில் சந்திக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து பதில் அளித்த இனியன், அது எங்களது வேலை இல்லை. அந்த பணி எங்களுக்கு வழங்கப்படவில்லை. மக்களை சந்திப்பதற்கு பதில் தான் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்தோம் என்றார்.


http://tamil-cininews.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger