
வடக்கு ஸ்வீடனின் நெடுஞ்சாலை பாதையிலிருந்து 1கி.மீ தொலைவில், காட்டுப்பாதை முடிவடையும் இடத்தில், இந்நபர் காருடன் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த பிரதேசத்தில் -30 பாகை செல்ஸியஸ் வரை சமீபத்தில் வெப்பநிலை குறைவடைந்திருந்ததாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நபர் காரிலிருந்து மீட்கப்படும் போது, ஒரு சில வார்த்தைகள் மாத்திரம் கூறியுள்ளார். தான் கடந்த டிசம்பர் 19ம் திகதியிலிருந்து இங்கு அகப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். உருகும் பனிக்கட்டிகளை குடித்து அவர் உயிர் வாழ்ந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அப்பகுதியில் துப்பரவு பணிகளை மேற்கொண்டு வந்த பணியாளர்கள் குறித்த காரை அவதானித்த போது உள்ளே சில அசைவுகளை அவதானித்ததால், இந்நபர் இருப்பதை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட நபர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஆகாரம் எதனையும் உட்கொண்டிருக்கவில்லை என அந்நபர் கூறுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
'சாதாரணமாக ஒரு நபர் உணவில்லாமல், நீராகரத்தை மாத்திரம் கொண்டு 4 வாரங்கள் உயிரை தக்கவைத்திருக்க முடியும். இவர் ஒருவகை Hibernation (விலங்குகள் போன்று குளிர் காலத்தை தூங்கி கழித்தல் அல்லது செயலற்றிருத்தல்) முறையில் தொடர்ந்து உயிர்வாழ்ந்து வந்திருக்கலாம்' என மருத்துவமனை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
http://tamil-cininews.blogspot.com
http://tamilfashionshow.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?