சினிமாவில் நல்ல இடத்துக்காக காத்திருக்கிறேன் என்று நடிகை மதுஷாலினி கூறியுள்ளார். பாலாவின் அவன் இவன் படத்தில் நாயகியாக நடித்தவர் மதுஷாலினி. அதன் பிறகு எந்த தமிழ் படத்திலும் கமிட் ஆகாத மதுஷாலினி, அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், அவன் இவன் படத்தை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் எனக்கு வந்தது. அவன் இவன் படத்தைப் போல அப்பாவி கேரக்டர் நிறைய. நான் தான் மறுத்து விட்டேன். நல்ல படம் கொடுங்கன்னு யார்க்கிட்டேயும் கேட்க முடியாது. அவன் – இவன் எனக்கு நல்ல விசிட்டிங் கார்டு. அதை வைத்துக் கொண்டு நான் சும்மா வந்து போகிற படத்துல நடிச்சு, இருக்குற பெயரைக் கெடுத்துக்க முடியாது. அப்படி நடிக்கவும் தேவையில்லை. நான் எலக்ட்ரானிக் இன்ஜினீயரிங் படிச்ச பொண்ணு. இப்பவும் வேலைக்கு நிறைய ஆஃபர் இருக்கு. ஆனா சினிமாதான் முக்கியம்ன்னு வந்துட்டேன்.
சினிமா ஆசையை சொன்னதும் வீட்டுல முதலில் பயந்தாங்க. அப்புறம் ஏத்துக்கிட்டாங்க. நீங்க சொல்லுகிற மாதிரி தமிழ் சினிமாவில் எனக்கு நல்ல இடம் கிடைக்கும் அதுக்குதான் காத்துக்கிட்டு இருக்கேன், என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?