காலம் காலமாக தமிழின கருவறுப்பினை மேற்கொண்டுவருகின்ற சிங்கள அரசின் கொடுமைகளுக்கு சர்வதேச சமூகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் தொடர்கிறது.
இன்று 37 கிலோமீற்றர் வரை நடந்துசென்ற இவர்களை உற்சாகப்படுத்தும் முகமாக, சுவிஸ் நாட்டில் இருந்து சென்ற 13 தாயக உணர்வாளர்கள் இவர்களோடு இணைந்து 13 கிலோமீற்றவர் வரை நடந்து தமது ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் நல்கினர்.
பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்துகொண்டிருகின்ற பயணத்தினை அங்குள்ள காவல்துறையினர் ஆர்வத்துடன் விசாரித்து நீதி கேட்டு நீங்கள் நடத்தும் இந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டும் அதற்கான ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தாம் தெரிவிப்பதாக கூறி பாதுகாப்பான முறையிலே உரிய இடத்தை அடையுங்கள் என்று அறிவுரையும் கூறினர்.
புலத்தில் வாழ்கின்ற தமிழ் உறவுகளே எங்கள் தேசத்தின் விடிவிற்காக நடத்தப்படுகின்ற இந்த நடைப்பயணத்தில் நீங்களும் கரம் கோர்த்து எம்மோடு இணைந்து வாருங்கள். ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி ஒன்றுபட்ட இனம் தமிழினம் என்பதை மீண்டும் ஒருதடவை உலகிற்கு உணர்த்துவோம் எழுச்சிமிக்க உணர்வோடு வாருங்கள்.
http://tamil-cininews.blogspot.com
http://tamilfashionshow.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?