21ஆம் நூற்றாண்டில் மனித உரிமை பாதுகாப்பும், அது எதிர்கொள்ளும் அறைவல்களும் - இலங்கை குறித்து ஒரு ஆய்வு என்ற தலைப்பிலான சர்வதேச மனித உரிமைகள் மாநாடு நேற்று முன்தினம் கனடா ரோரன்ரோவில் நடைபெற்றது.
உலகெங்கும் இருந்து வருகைதந்த மனித உரிமை வல்லுனர்கள் பேராளர்கள் கலந்து கருத்துரை வழங்கினர். தமிழர்களின் நீதியான போராட்டத்தை வென்றெடுக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் அயராது தொடர்ந்தும் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை பலரும் வலியுறுத்தினர்.
தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் நியாத்தை உலகம் உணரத் தலைப்பட்டுள்ள இன்றைய நிலையில் தமிழர்கள் அயராது தொடர்ந்தும் உழைக்க வேண்டியதன் அவசியம் மேலும் வலியுறுத்தப்பட்டது.
டேவிட் மெற்றாஸ், டெனிலோ ரெயிஸ், டேயிற்றி மக்கோனல், அலிபெய்டுன், தியடோர் ஓர்லின், உலகத்தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவேல் அடிகளார், பேராசிரியர் சிறீ ரஞ்சன் ஆகியோர் பல்வேறு மனித உரிமைகள் தலைப்பில் உரையாற்றினர்.
இம்மாநாட்டில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே என புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
கனடாவின் மூன்று பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கவுள்ளமை இம்மாநாட்டின் மேலும் ஒரு சிறப்பம்சமாகும். ஆளும் கன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கிச்சினர் மத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன் வூல்வெர்த், மிசுசாகா ஸ்ரீர்வெல்த் பாராளுமன்ற உறுப்பினர் பிராட் பட், கனடிய எதிர்கட்சி புதிய சனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோன் மக்கலம், ஜிம் கரிஜியானிஸ் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
21ஆம் நூற்றாண்டில் மனித உரிமைகள் எதிர்கொள்ளும் சவாலும், குறிப்பாக சர்வதேச கட்டுமாணங்கள் 21ஆம் நூற்றாண்டில் எவ்வாறு சிறீலங்காவில் பொய்த்து போயின என்பன குறித்து இம்மாநாடு விரவாக ஆராய்தது.
இம்மாநாடு இம்மாதம் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமையும் என நம்பப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்டோருக்கும், மனித் உரிமைகளுக்குமான நடுவத்தின் ஏற்பாட்டில் அனைத்துல தமிழ் அமைப்புகளின் அணுசரனையுடன் இம்மாநாடு நடைபெற்றது. 400 மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு மாநாட்டின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினர்.
மாநாட்டை தொடர்ந்து மாலை கனடியத் தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் இசைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெறப்பட்ட தொகையில் 25 ஆயிரம் டொலர்கள் உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவேல் அடிகளாரிடம் சர்வதேச மனித உரிமைகள் வேலைத்திட்டங்களுக்காக வழங்கப்பட்டது.
அதேவேளை அமெரிக்காவில் சிறீலங்கா சனாதிபதி ராஐபக்ச மற்றும் சிறீலங்கா இராணுவத்தளபதி சுவேந்திர டி சில்வா ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்காக தலா 5ஆயிரம் டொலர்களும் வழங்கப்பட்டன.
http://tamil-cininews.blogspot.com
http://tamilfashionshow.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?