இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான வீரேந்திரா சர்மாவின் கோரிக்கைக்கு அமைய நடத்தப்படவுள்ள இவ் விவாதம் இந்த வாரத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெரீ மெக்கர்தி அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சில கேள்விகள் எழுந்துள்ளதாகவும், அது குறித்து இந்த வாரத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் மெக்கர்தி தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இரண்டு தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட சகல குற்றச்செயல்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மைக் கேப்ஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந் நிலையிலேயே வீரேந்திரா சர்மாவும் கோரிக்கை விடுத்ததையடுத்து இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் விவாதம் நடத்த நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
http://tamil-cininews.blogspot.com
http://tamilfashionshow.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?