லிபியாவின் முன்னாள் ஜனாதிபதியான கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி இலண்டனில் உள்ள பொருளாதார கல்லூரி ஒன்றிற்கு 300,000 பவுண்ட் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சைப் அல் இஸ்லாம் இந்த கல்லூரியில் கடந்த 2003ம் ஆண்டு முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் 2008ம் ஆண்டு முனைவர் பட்டமும்(Ph.D) பெற்றார்.
இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி ஆறுவாரம் கழித்து முதல் தவணைத் தொகை வந்து சேர்ந்த காரணத்தினால் இவர் முறைப்படி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறவில்லை, பணம் கொடுத்து பட்டத்தை விலைக்கு வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தது.
சைப் அல் இஸ்லாமிடம் லண்டன் கல்லூரி நன்கொடை என்ற பெயரில் வாங்கிய லஞ்சப் பணம் குறித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் நீதிபதி ஹேரி உலப் கூறுகையில், இக்கல்லூரி தனக்கு இருந்த நற்பெயரையும், நன்மதிப்பையும் இந்த நன்கொடை கெடுத்து விட்டது.
இனி இந்த கல்லூரி முதுகலை படிப்புக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் போது ஒரு குழுவின் கண்காணிப்பில் தான் செயல்பட வேண்டும் என்றார்.
http://actressmasaala.blogspot.com
http://photo-actress-hot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?