Saturday 3 December 2011

ஜேர்மன் அமெரிக்�� விமான தளங்களை த��க்க ஈரான் திட்டம்



ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களை தாக்குவதற்கு ஈரான் மறைமுகத் திட்டம் போட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை ஜேர்மன் அரச சட்டத்தரணி காறல் ரஞ்ச் இன்று வெளியிட்டார்.

ஜேர்மனிய பிரஜை ஒருவருக்கும், ஜேர்மனில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமை அம்பலமானதைத் தொடர்ந்து அவருடைய கருத்து வெளியாகியுள்ளது. மேற்கண்ட சந்தேக நபருடைய வீட்டில் ஜேர்மனிய போலீசார் நடாத்திய தேடுதல் சந்தேகத்தை மேலும் உறுதியாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை முடுக்கிவிட்டால் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடாத்த ஈரான் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டார். கடந்த செவ்வாயன்று பெருந்தொகையான ஈரான் ஆர்பாட்டக்காரர் தெகிரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்குள் நுழைந்து தாக்குதலை நடாத்தியது தெரிந்ததே. இதைத் தொடர்ந்து ஜேர்மனி, கொலன்ட், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தத்தமது நாடுகளின் ஈரானிய தூதுவர்களை நாளை அழைத்து விசாரிக்க இருக்கின்றன.

மேலும் நேற்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் ஈரானுக்கு எதிராக மேலும் மோசமான தடைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது ஜேர்மனியில் இருக்கும் அமெரிக்க முகாமான பவ்லாஸ் மிகுந்த கண்காணிப்பில் இருப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. அNதுவேளை இந்த விவகாரம் அமெரிக்காவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் படைத்தளபதி அறிவித்துள்ள நிலையில் ஈரானின் திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் – ஈரான் இரண்டு நாடுகளும் மேலை நாடுகளின் புதிய வியூகத்தின் காரணமாக பாரிய எதிரிகளாக மாறியுள்ளன. ஆப்கான் பிரச்சனை, பாஸ்தீன பிரச்சனை ஆகிய இரண்டினதும் ஆணி வேர் புரையோடியிருக்கும் புள்ளிகளை மேலை நாடுகள் நெருங்க ஆரம்பித்துவிட்டதை நிகழ்வுகள் காட்டுகின்றன. மேலை நாடுகளின் நிகழ்ச்சி நிரல் முன்னெப்போதையும் விட இப்போது அசுர வேகமாக இயங்குவது கவனிக்கத்தக்கது.


http://actressmasaala.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger